சுர்கேத் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுர்கேத் மாவட்டம் (Surkhet District) (நேபாளி: सुर्खेत जिल्ला, Surkhet Jillā ⓘ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டிலிருந்து மேற்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 6–இல் அமைந்த பத்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பேரி மண்டலத்தில் அமைந்துள்ள சுர்க்கேத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் விரேந்திரநகர் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,451 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,88,527 ஆகும்.

Remove ads
தட்ப வெப்பம்
இம்மாவட்டத்த்தின் கோடைகால வெப்ப நிலை 5° செல்சியசும், குளிர்கால வெப்ப நிலை 38 ° செல்சியசுமாக உள்ளது. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 3,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம்,மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை என நான்கு காலநிலைகளில் காணப்படுகிறது. [1]
அமைவிடம்
சுர்கேத் சமவெளி நேபாளத்தின் உள் தராய் சமவெளிகளில் அமைந்துள்ளது. சுர்க்கேத் மாவட்டத்தின் வடக்கில் ஜாஜர்கோட் மாவட்டம், தைலேக் மாவட்டம், அச்சாம் மாவட்டங்களும், தெற்கில் பர்தியா மாவட்டம், கைலாலீ மாவட்டங்களும், கிழக்கில் சல்யான் மாவட்டமும், மேற்கில் டோட்டி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
சுர்கேத் மாவட்டத்தில் பஹூன் இன மக்கள், சத்திரிய மக்களும் அதிகம் உள்ளனர். மகர் மக்கள், நேவார் மக்கள், தாரு மக்கள், சுன்னார் மக்கள் மற்றும் காமி இன மக்கள் சிறுபான்மை இனத்தவராக உள்ளனர். மாவட்டத்தில் இந்து சமயத்தவர்கள் பெருமபான்மை சமயத்தவர்களாக உள்ளனர். பௌத்தர்கள், கிறித்தவர்கள், இசுலாமியர்கள் கனிசமான அளவில் உள்ளனர்.
Remove ads
போக்குவரத்து
இரத்தினா நெடுஞ்சாலை மற்றும் கர்னாலி நெடுஞ்சாலை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. சுர்கேத் மாவட்டத் தலைமையிடமான வீரேந்திரநகரில் அமைந்த வானூர்தி நிலையம், காட்மாண்டு, நேபாள் கஞ்ச், சூம்லா போன்ற பிற மாவட்டங்களுடன் இணைக்கிறது.
உள்ளாட்சி நிர்வாகம்

இம்மாவட்டத்தில் பீரேந்திரநகர் நகராட்சி, சுபாகாட் நகராட்சி, உத்தரகங்கா நகராட்சி என மூன்று நகராட்சிகளும், நாற்பத்தி ஆறு கிராம வளர்ச்சி மன்றங்களும் உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads