ஜான் மகேந்திரன்
இந்திய திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜான் என்று அழைக்கப்படும் ஜான் மகேந்திரன் (John Mahendran) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஜான் பிரபல தமிழ்த் திரப்பட படைப்பாளியான மகேந்திரனின் மகன் ஆவார்.
Remove ads
தொழில்
1997 சூலையில் வெளியான தகவல்கள் படி, ஜான் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா முன்னணி வேடத்தில் நடிகும் ஒரு படத்தை இயக்கம் திட்டமிட்டுளதாகக் கூறின, ஆனால் அந்தப் படத் திட்டம் நிறைவேறவில்லை.[1] பின்னர் ஜான் தெலுங்கு காதல் நாடகப்படமான பிரேமிச்சேதி எந்துகம்மா (1999) [2] படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும் புதுமுகங்கள் பிரகாஷ் கோவெலமுடி மற்றும் மஹேக் சாஹல் நடித்த நீத்தோ (2002) படத்தையும் இயக்கினார். அந்தப் படம் வணிக ரீதியாக மோசமாக செயல்பட்டது.[3] [4] பின்னர் இவர் தமிழில் இயக்கிய சச்சின் (2005) படத்தில் விஜய், ஜெனிலியா டி'சோசா, பிபாசா பாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[5] பின்னர் ஜான் சுயாதீன தமிழ்த் திரைப்படமான ஆணிவேர் (2006) படத்தில் பணியாற்றினார். இது ஈழப் போரில் சிக்கிய ஒரு மருத்துவரின் கதையைச் சொன்னது. இந்தப் படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் தமிழ் புலம்பெயர்ந்தோர் உள்ள பகுதிகளில் வெளியிடப்பட்டது. [6] பின்னர் சிபிராஜ், அபர்ணா பிள்ளை நடிப்பில் உறுமி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தார், ஆனால் படம் பின்னர் கைவிடப்பட்டது. [ சான்று தேவை ] பின்னர் இவர் விஷால் நடிக்கும் ஒரு படத்திற்கும், ஜீவன் நடிக்கும் சரவெடி என்ற படத்திற்கும் முன் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கினார், ஆனால் இரண்டு படத் திட்டங்களும் நிறைவேறவில்லை. [7]
2011 ஆம் ஆண்டு நகுல், ஐந்த்ரிதா ரே நடிப்பில் "தலைப்புச் செய்திகள்" என்ற அரசியல் நகைச்சுவைத் திரைப்படப் பணிகளில் ஜான் பணியாற்றத் தொடங்கினார். மேலும் அந்தப் படக் குழு ஒரு ஒளிப்படப் படப்பிடிப்பு நடத்தியது. பின்னர் படத்தின் தலைப்பு "சடுகுடு" என்று மாற்றபட்டது. ஆனாலும் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. [ சான்று தேவை ] 2010களின் முற்பகுதியில், ஜான், இயக்குநர் கண்ணனுக்கு இந்தி திரைப்படமான டெல்லி பெல்லியின் திரைக்கதையை மறுசீரமைப்பு செய்யும் பணியில் உதவியதன் மூலம் சேட்டை (2013) படத்தின் எழுத்துப் பணிகளில் பணியாற்றினார். மேலும், ராஞ்சனா (2013) என்ற இந்தி படத்தின் தமிழ் மொழிமாற்றமான அம்பிகாபதி படத்திற்கு உரையாடல் எழுதுவதிலும் ஈடுபட்டார். [8] பின்னர், சென்னையில் உள்ள போஃப்டா திரைப்பட கல்வி நிறுவனத்தில் திரைக்கதை, உரையாடல் ஆசிரியராகப் பணியாற்றிய அதே வேளையில், காஷ்மோரா (2016), மொட்ட சிவா கெட்ட சிவா (2017) உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றினார்.
2022 ஆம் ஆண்டில், எம். பத்மகுமார் இயக்கிய மலையாளத் திரைப்படமான ஜோசப்பின் அதிகாரப்பூர்வ மறுஆக்கமான விசித்திரன் என்ற தமிழ்த் திரைப்படத்தின் எழுத்துப் பணிகளை மேற்கொண்டார்.[9]
Remove ads
திரைப்படவியல்
இயக்குநர்
நடிகர்
எழுத்தாளர்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads