ஜாம்பி மாநகரம்
இந்தோனேசியா, ஜாம்பி பிரிவின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாம்பி மாநகரம் (ஆங்கிலம்: Jambi City இந்தோனேசியம்: Kota Jambi) என்பது இந்தோனேசியா, ஜாம்பி பிரிவின் (Jambi Province) தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும். சுமாத்திரா தீவில் அமைந்துள்ள இந்த மாநகரம் பாத்தாங்காரி ஆற்றின் பரபரப்பான துறைமுகமாகவும் செம்பனை மற்றும் ரப்பர் உற்பத்தி மையமாகவும் விளங்குகிறது.
இந்த நகரம், பண்டைய சிறீவிஜய இராச்சியத்தின் முவாரோ ஜாம்பி ஆலய வளாகத்தின் இடிபாடுகளிலிருந்து 26 கி.மீ. (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
Remove ads
பொது
ஜாம்பி மாநகரமே முவாரோ ஜாம்பி குறு மாநிலத்தில் (Muaro Jambi Regency) உள்ள ஓர் இடமாகும். ஜாம்பி மாநகரத்திற்கு சுல்தான் தாகா வானூர்தி நிலையம் (Sultan Thaha Airport) சேவை செய்கிறது. இந்த மாநகரத்திற்கு அருகில் உள்ள நகரங்களும் கிராமங்களும்:
- மெண்டாலோ (9.4 கி.மீ.)
- கினாத்தி (7.6 கி.மீ.)
- பாடாங் (8.3 கி.மீ.)
- தஞ்சோங் ஜொகூர் (3.2 கி.மீ.)
- பால் மேரா (5.9 கி.மீ.)
- முவாரா கும்பே (3.6 கி.மீ.)
புவியியல்
ஜாம்பி மாநகரின் மொத்த நிலப்பரப்பு 169.887 கி.மீ.2 (66 சதுர மைல்) ஆகும். ஜாம்பி மாநகரம் தென்மேற்கு சுமாத்திரா படுகையில் அமைந்துள்ளது.
இது கிழக்கு சுமாத்திராவில் ஒரு தாழ்வான பகுதி. 1,700 கி.மீ. (1,056 மைல்) நீளம் கொண்ட பாத்தாங்காரி ஆற்றின் ஒரு பகுதி, ஜாம்பி நகரத்தின் வழியாகச் செல்கிறது.
மக்கள்தொகையியல்
2020-ஆம் ஆண்டில் இந்த நகரத்தில் 606,200 மக்கள் (ஜாம்பி பிரிவின் மக்கள் தொகையில் 17%) வாழ்கின்றனர்.[2]
2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மக்கள் தொகை 627,774 (பெண்கள் 315,855; ஆண்கள் 315,911) என அதிகாரப்பூர்வ மதிப்பீடு அறிவிக்கிறது.[1]
ஜாம்பி பிரிவில் இந்த ஜாம்பி மாநகரமே அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்;[1] மிகவும் மாறுபட்ட மற்றும் பல இனங்களைக் கொண்டுள்ளது.[3]
- ஜாம்பி மலாய்க்காரர்கள் (27.84%)
- ஜாவானியர்கள் (22.05%)
- மினாங்கபாவு மக்கள் (12.64%)
- மலாய்க்காரர்கள் (11.47%)
- இந்தோனேசிய சீனர்கள் (6.82%)
- பத்தாக் மக்கள் (6.62%)
- சுந்தானிய மக்கள் (4.47%)
- பூகிஸ் மக்கள் (2.03%)
இரட்டை நகரங்கள் - சகோதர நகரங்கள்
ஜாம்பி மநகரத்தின் சகோதர நகரங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads