ஜெகேஷ்வர் கோயில்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெகேஷ்வர் கோயில்கள் (Jageshwar Temples), இந்தியாவின் வடக்கில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டட்தில் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஜாகேஷ்வர் பள்ளத்தாக்கில் நகரா கட்டிடக்கலையில் அமைந்த 100 இந்துக் கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில்கள் கிபி 7 முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டதாகும். இக்கோயில்கள் சிவன், விஷ்ணு, சூரியன், குபேரன், எமன், சண்டி, விநாயகர், சக்தி, பிற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். ஜாகேஷ்வர் கோயில்களை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. ஆடி அமாவாசை மற்றும் மகா சிவராத்திரி விழாக்கள் ஜாகேஷ்வர் கோயில்களில் கொண்டாடப்படுகிறது.
Remove ads
அமைவிடம்
நைனிடால் நகரத்திற்கு வடகிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் ஜாகேஷ்வர் கோயில்கள் உள்ளது. இதனருகே கொத்தகூடம் தொடருந்து நிலையம் 125 கிலோ மீட்டர் தொலைவிலும், அல்மோரா 35 கி.மீ. தொலைவிலும், அரித்துவார் 131 கி.மீ. தொலைவிலும், பிதௌரகட் 88 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

Remove ads
கல்வெட்டுக்கள்
கிபி 7ஆம் நூற்றாண்டிற்கும், 12ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்திய 25 சமசுகிருதம் மற்றும் பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் ஜாகேஷ்வர் கோயில் சுவர்களிலும், தூண்களிலும் காணப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads