டெம்பிளர் சாலை கொமுட்டர் நிலையம்

பெட்டாலிங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

டெம்பிளர் சாலை கொமுட்டர் நிலையம்map
Remove ads

டெம்பிளர் சாலை கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Jalan Templer Komuter Station; மலாய்: Stesen Komuter Jalan Templer); சீனம்: 邓普勒路) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் டெம்பிளர் சாலை Jalan Templer, பொது தகவல்கள் ...

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் பெட்டாலிங் ஜெயா' குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது.

சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டெம்பிளர் சாலை மிகவும் பரபரப்பான முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இந்தச் சாலை பெட்டாலிங் ஜெயாவில் கட்டப்பட்ட முதல் சாலை ஆகும். பிஜே சாலை 1 என்று அழைக்கப்படுகிறது.

Remove ads

பொது

மலாயாவின் முன்னாள் மூத்த பிரித்தானிய உயர் ஆணையர் சர் ஜெரால்ட் டெம்பிளரின் நினைவாக இந்தச் சாலைக்கு பெயரிடப்பட்டது

டெம்பிளர் சாலை பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள போக்குவரத்தை நிறைவு செய்வதற்காக சாலையின் பெயரால் இந்த நிலையம் கட்டப்பட்டது.

இனாய் பல்லடுக்கு குடியிருப்புகள்

இந்த நிலையம், பிஜே பிரிவு 1 (PJ Section 1), பிஜே பிரிவு 1A (PJ Section 1A); பிஜே பிரிவு 18 (PJ Section 18)-இல் உள்ள இனாய் கோர்ட் பல்லடுக்கு குடியிருப்புகள் (Inai Court Apartment); பன்மாடி இல்லங்கள்; மற்றும் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகள் போன்றவற்றுக்குச் சேவை செய்கிறது.

1980-களில் இந்த நிலையம் பெட்டாலிங் ஜெயா நிலையம் என்று அறியப்பட்டது. அதன் பின்னர் தற்போதைய டெம்பிளர் சாலை நிலையம் எனும் பெயரைப் பெற்றது.[2]

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads