தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
Remove ads

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அதன் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் திமுக அரசு மே 13-ம் தேதி மு. கருணாநிதி அவர்கள் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.[1]

விரைவான உண்மைகள் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள், First party ...
Thumb
தமிழ் நாடு வரைபடம்
Remove ads

பின்புலம்

Remove ads

கூட்டணி / கட்சிகள்

ஜனநாயக மக்கள் கூட்டணி

மேலதிகத் தகவல்கள் சின்னம், கட்சி ...

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி

மேலதிகத் தகவல்கள் சின்னம், கட்சி ...
Remove ads

தேர்தல் முடிவுகள்

2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[2]
கூட்டணி கட்சி போட்டியிட்ட
தொகுதிகள்
வென்ற
தொகுதிகள்
வைப்புத் தொகை
இழப்பு
வைப்புத் தொகை
இழக்காத,
வெற்றி பெற்ற
தொகுதிகளில்

வாக்கு சதவீதம்
போட்டியிட்ட அனைத்து
தொகுதிகளில் மொத்த

வாக்கு சதவீதம்
ஜனநாயக
முற்போக்குக் கூட்டணி
– 163
திராவிட முன்னேற்றக் கழகம்13296026.4645.99
இந்திய தேசிய காங்கிரஸ்483408.3843.50
பாட்டாளி மக்கள் கட்சி311805.6543.43
இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI)10601.6140.35
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்)13902.6542.65
ஜனநாயக மக்கள் கூட்டணி-69அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்18861332.6440.81
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்35605.9837.70
விடுதலைச் சிறுத்தைகள்9201.2936.09
தனித்துப்
போட்டியிட்ட
கட்சிகள்
மற்றும் சுயேச்சைகள்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்23212238.388.45
சுயேச்சை122211217
பிற2

தகவல்: http://www.bbc.co.uk/tamil/news/story/2006/05/060511_tnelection.shtml

போட்டியிட்ட கட்சிகள்

இவற்றையும் பார்க்க: பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்

Remove ads

அரசியல் நிலவரம்

  • கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைத்த ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாமல் அவர் ஊழல் வழக்கில் சிறை சென்றது மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலையை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.[சான்று தேவை]
  • ஜெயலலிதாவின் கைது நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாட்டில் பல வன்முறை செயல்கள் நடந்தேறிய நிகழ்வில் தர்மபுரியில் ஒரு கல்லூரி மகளிர் பேருந்து எரிக்கப்பட்டது.
  • அதே போல் அதிமுக கட்சியின் தலைமையும் அக்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் சர்வதிகார புடைப்புடன் இருந்ததால். மக்களிடையே அதிக எதிர்ப்பு அலைகளை உருவாக்கி இருந்தது.
  • மேலும் கடந்த ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் 2001 முதல் 2004 வரையிலான ஆட்சியில் மிகவும் கடுமையாகவும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத திட்டங்களை அறிவித்த போதிலும் கொடுங்கோள் ஆட்சி முறை என்று மக்களிடமும் எதிர்கட்சி தலைவர்களிடமும் பலமான எதிர்ப்பு நிலையில் இருந்ததால் 2004 நாடாளமன்றத் தேர்தலில் தனக்கு முழுமையான தோல்வி அடைந்ததால். மக்களிடையே மீண்டும் பெரும் செல்வாக்கை உருவாக்கி கொள்ள 2005 முதல் 2006 வரையிலான கடைசி இரண்டு வருட ‌ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல நன்மையான திட்டங்களை செய்து இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 69 இடங்களை கைப்பற்றினார். பலமான எதிர்கட்சியாகச் செயல்பட்டார்.
  • மேலும் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் அதிகார மீறல் செயல்களான பெரும் அரசியல் தலைவர்களான எதிர்கட்சி திமுக தலைவர் கருணாநிதி அவர்களை மேம்பாலம் கட்டிய ஊழல் வழக்கில் கைது செய்தது. மதிமுக தலைவர் வைகோ அவர்களை விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதால் அவரை பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் தொண்டர்களிடமும், வாக்காளர்களிடமும் பெரும் எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தியது.
  • மிசா, பொடா, தடா போன்ற மிகவும் கடுமையான சட்டங்களால் அன்றைய மத்திய பாஜக பிரதமர் வாஜ்பாய் அரசையும் அதனுடன் தமிழக கூட்டணி கட்சியான திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களையும் எதிர்த்து ஜெயலலிதா வழி நடத்தி சென்றார்.
  • அதே போல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்விற்கு பிறகு வழங்கப்படும் ஒய்வுதிய திட்டம் மற்றும் பல சலுகைகளை குறைத்தும் கடந்த திமுக ஆட்சி காலத்தில் மு. கருணாநிதி அவர்களால் அரசாங்க வேலைக்கு வரைமுறையற்ற முறையில் அதிகமான ஆட்களை எடுத்த போன்ற சட்டங்களை கண்டித்து அவர்களை அரசாங்க வேலைகளில் இருந்து நீக்கபடும் விதமாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்ட வந்த எஸ்மா/டெஸ்மா சட்டங்கள் மிகவும் கடுமையாக இருந்ததை எதிர்த்து பல தரப்பு அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
  • மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல்
  • லாட்டரி டிக்கெட் தடை செய்யப்பட்டது
  • ஆழிப் பேரலை, அடைமழை-வெள்ளப்பெருக்கு நிவாரண பிரச்சினைகள்
  • குடிநீர் பிரச்சினை
  • சூழல் மாசுறுதல்
  • ஏழ்மை நிவாராண மத்திய வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டு தேவைகள் நிறைவேற்றப்படவில்லை
  • மத்திய மாநில அரசு உறவு பிரச்சனைகள்

மனித உரிமை பிரச்சினைகள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads