தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2004
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்தல் தான் தொகுதி மறுசீரமப்புக்கு முன் நடந்த கடைசி தேர்தல் ஆகும்.திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
Remove ads
பின்புலம்
- 2004ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன. 1999 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் அக்கூட்டணியிலிருந்து 2004ம் ஆண்டு தனது ஐந்து வருடம் பதவி காலம் முடிந்து விலகின.
- பின்பு திமுக தலைமையில் மதிமுக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர் கழகம், ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயக பேரவை போன்ற பலமான கட்சிகள் திமுக கூட்டணியில் அணிவகுத்து இருந்து போதிலும் மத்தியில் எக்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் மாநில கட்சிகள் உடனான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க போவதாக அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி செய்தி வெளியிட்டார்.
- ஆனால் சிறிது காலத்திலேயே மத்திய காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டு மக்களிடையே தனித்தன்மை இழந்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனித்து நின்று போட்டியிட்டால் தோல்வி அடையும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தி மரணம், ஜெயின் கமிஷன், ஈழத்தமிழர்கள் ஆதரிப்பு போன்ற திமுக, காங்கிரஸ்க்கு இடையேயான தீவிரமான விவகாரங்களை மறுத்துவிட்டு திமுக-காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமாறு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களான ஜி. கே. வாசன், ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் ஆகியோர் மு. கருணாநிதியிடம் சென்று ஆதரவு திரட்டினார்.
- திமுக-காங்கிரஸ் உடனான கூட்டணியில் 1982க்கு பிறகு 22 வருடங்கள் கழித்து கூட்டணியில் இணைந்தது என்றாலும் ஈழதமிழற்கள், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ராஜீவ் காந்தி மரணத்தில் எழுவர் விடுதலை போன்ற விவகாரங்களில் எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியின் போக்கை கண்டித்து எவ்வித பாதுகாப்பு உடன்பாடு நிபந்தனைகளும் இல்லாத ஆதரவை திமுக வழங்கியதை கண்டித்து மு. கருணாநிதியை நோக்கி பலமான விமர்சனங்கள் எழுந்தது.
- பின்பு திமுக-காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது. அக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுள் இடம் பெற்றிருந்தன.
- இத்தேர்தலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே மூப்பனாரின் மரணத்திற்கு பிறகு அவரது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நடத்தி சென்ற அவரது மகன் ஜி. கே. வாசன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்கள் வேண்டுகோளால் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துவிட்டது.
- இதனால் காங்கிரசு கூட்டணி மிக வலுவான நிலையில் இருந்தது.
- ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஈழதமிழற்களுக்கு எதிரான நிபந்தனையற்ற ஆதரவு கூட்டணி என்று ஆர். எம். வீரப்பன் தேர்தலில் போட்டியிடாமல் விலகினார். என்றாலும் நண்பர் மு. கருணாநிதி அவர்களின் வேண்டுகோளை ஏற்று திமுகவிற்கு பிரச்சாரம் செய்தார்.
- அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
- இவ்விரு கூட்டணிகள் தவிர மூன்றாவது அணி ஒன்றும் களத்தில் இருந்தது. அதில் ஐக்கிய ஜனதா தளம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் போன்ற கட்சிகள் மக்கள் கூட்டணி என்ற பெயரில் இடம் பெற்றிருந்தன.
Remove ads
முடிவுகள்
தமிழக அமைச்சர்கள்
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1]
இலாக்கா அமைச்சர்கள்
இணை அமைச்சர்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads