தாமான் துன் டாக்டர் இசுமாயில்
கோலாலம்பூர் - சிலாங்கூர் எல்லையில் அமைந்துள்ள நகர்ப்பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமான் துன் டாக்டர் இசுமாயில், (மலாய்; ஆங்கிலம்: Taman Tun Dr Ismail; சீனம்: 敦伊斯迈花园); என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகராட்சி பகுதிக்குள் அமைந்துள்ள ஒரு ஒரு நடுத்தர நகரமாகும். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் எல்லையில் அமைந்துள்ள இந்த நகர்ப்பகுதி; பண்டார் உத்தாமா டாமன்சாரா, டாமன்சாரா உத்தாமா, முத்தியாரா டாமன்சாரா உள்ளிட்ட பிற நகரங்களுக்கு அருகாமையில் உள்ளது.[2][3]

புக்கிட் கியாரா; செரி அர்த்தாமாஸ்; மற்றும் எளிதில் அணுகக்கூடிய பங்சார், டாமன்சாரா அயிட்ஸ் போன்ற நகர்ப்பகுதிகளுக்கு அருகிலும் உள்ளது. கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நகர்ப்பகுதிக்கு கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL); அதன் உள்ளூர் மாநகராட்சியாகச் செயல்படுகிறது.[4]
Remove ads
பொது
பொதுவாக தாமான் துன் டாக்டர் இசுமாயில் நகர்ப்பகுதி என்பது சில்லறைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் வரையிலான வணிகங்களைக் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியும் ஆகும். மெனாரா கென்] (Menara Ken) மற்றும் வாட்ஸ் பிளாசா (VADS) ஆகியவை இங்குள்ள இரண்டு உயரமான அலுவலக கட்டிடங்கள் ஆகும்.
இந்த நகரமைப்புக்கு துன் டாக்டர் இசுமாயில் அப்துல் ரகுமான் (en:Ismail Abdul Rahman) அவர்களின் பெயரிடப்பட்டது. அவர் 1970 இல் மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்தார். தாமான் துன் டாக்டர் இசுமாயில் என்பது பொதுவாக டிடிடிஐ (TTDI) என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.
Remove ads
போக்குவரத்து

இந்த நகர்ப்பகுதிக்கு காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ள KG10 தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் எம்ஆர்டி நிலையம் சேவை செய்கிறது.
மேலும் காண்க
- சா ஆலாம்
- ஐ-சிட்டி
- டாமன்சாரா ஆரா
- முத்தியாரா டாமன்சாரா
- டாமன்சாரா பெர்டானா
- டாமன்சாரா உத்தாமா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads