தியாகம் (திரைப்படம்)

கே. விசயன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

தியாகம் (திரைப்படம்)
Remove ads

தியாகம் (Thyagam) என்பது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1974 ஆம் ஆண்டு வெளியான வங்கத் திரைப்படமான அமானுஷின் மறுஆக்கம் ஆகும்.[1] இந்த படம் 1978 மார்ச் 4 அன்று வெளியானது. அந்த ஆண்டின் அதிக வசூலித்த தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது.[2]

விரைவான உண்மைகள் தியாகம், இயக்கம் ...
Remove ads

கதை

பணக்காரராக ராஜாவும் ராதாவும் காதலர்கள். ராஜாவின் கணக்குப்பிள்ளையாக இருந்த ராமசாமியின் சூழ்ச்சிகளால் போலி பாலியல் வன்கொடுமை, கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் ராஜா சிறையில் அடைக்கப்படுகிறார். அந்தக் கணக்குப்பிள்ளை ராஜாவின் குடும்ப சொத்தையும் அபகரித்துக்கொள்கிறார். ராதாவும் ராஜாவை விட்டு பிரிகிறாள். வறுமை, காதல் தோல்வி என ராஜா விரக்தியில் ஆழ்ந்துள்ளார். ஊருக்கு புதியதாக காவல் ஆய்வாளராக பிரசாந்த் வருகிறார். முதலில் ராஜாவுக்கும் பிரசாந்துக்கும் மோதல்கள் ஏற்படுகின்றன. பிறகு ராஜா ஒரு நல்லவர் என்பதை அறிந்து அவருடன் மோதியதற்காக வருந்தி அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார். பொறியியலாளரான ராஜாவுக்கு பாலம் கட்டுவதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை வாங்கித் வழங்குவதன் மூலம் அவர் மறுவாழ்வு ராஜாவுக்கு அளிக்கிறார். காவல் ஆய்வாளர் பழைய போலி குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கிறார். இதை அறிந்த இராமசாமி பாலத்தை அழிக்கவும், ராஜா, பிரசாந்த் ஆகியோரின் பெயரைக் கெடுக்கவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் முயற்சிக்கிறார். அவர் வெற்றி பெற்றாறாரா அல்லது ராஜா தன்னை சூழ்ந்த சிக்கல்களில் இருந்து தன்னைக் காத்துக்கொண்டாரா என்பதே கதையின் முடிவு.

Remove ads

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதினார்.[3][4] "தேன்மல்லிப் பூவே" பாடல் மோகன இராகத்தில் அமைக்கப்பட்டது.[5][6]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர் ...

வரவேற்பு

ஆனந்த விகடன் படத்திற்கு 100க்கு 45 மதிப்பெண்களை வழங்கியது. முதன்மையாக கணேசன், லட்சுமி ஆகியோரின் நடிப்பையும், ஒளிப்பதிவு, பிரசாத் லேப்சின் வண்ணமயமாக்கல் ஆகியவற்றைப் பாராட்டியது.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads