தில்வாரா கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்வாரா சமணர் கோவில் – பொ.ஊ. 11 - 13 ஆம் நூற்றாண்டில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஜெயின் கோவிலாகும். உலகின் தலை சிறந்த ஜெயின் கோவில்களுள் ஒன்று. இது தாஜ்மகாலின் கட்டிடக்கலைக்கு நிகராக போற்றப்படுகிறது.மனிதனின் கலை வண்ணத்தில் சிறந்த சிற்ப வேலைபாடுகளுடன் பிரமாண்டமாய் விளங்குகிறது. 1219 மீட்டர்(4000 அடி) உயரத்தில், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத போதே, யானைகள் மூலமாக அம்பாஜி மலையிலிருந்து, அபு மலைக்கு பாறைகளை எடுத்து சென்று இந்த அதிசயமான கோவிலை உருவாக்கியுள்ளனர்.[1]
- ஆதிநாதர் கோவில் / விமல் வஸாஹி கோவில் – 1031 வருடம் கட்டப்பட்ட இந்த முதல் கோவில் ஆதிநாத சுவாமி (ஜைனர்களின் முதலாவது தீர்த்தங்கரர்) க்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோவிலில் திறந்த வெளி மண்டபமும் தாழ்வாரமும் பளிங்கு கற்களால் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 54 அறைகளில் 54 ஜைன மகான்களின் சிற்பங்கள் பளிங்கு கற்களால் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தின் உள் கூரையில் பூக்கள் மற்றும் இலைகள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. பெரிய ஹாலின் தூண்கள் ஒவ்வொன்றிலும், பெண்கள் வாத்திய கருவிகள் இசைப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளன.
- பார்சுவநாதர் கோவில் / கார்டர் வஸாஹி கோவில் - 1458-59 வருடம் கட்டப்பட்ட இந்த கோவில் நான்கு பெரிய மண்டபங்களை கொண்டது. இந்த கோவில் தில்வாரா ஜெயின் கோவில்களிலேயே உயரமான கோவிலாகும். தூண்கள் ஒவ்வொன்றும் பளிங்கு கற்களால் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
- ரிசபதேவர் கோவில் / பித்தல்ஹார் கோவில் – இந்த கோவிலில் சிலைகள் பெரும்பாலும் பித்தளையால் செய்யப்பட்டதனால் பித்தல்ஹார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் குஜராத் இராச்சியத்தின் மந்திரி பீமா ஷா என்பவரால் கட்டப்பட்டது.
- நேமிநாத்ஜி கோவில் / லுனா வஸாஹி கோவில் – 1230 வருடம் தேஜ்பால் மற்றும் வஸதுபால் என்ற சகோதரர்களால் கட்டப்பட்டது. ஸ்ரீ நேமிநாத்ஜி (ஜைனர்களின் 22 வது தீர்த்தங்கரர்) க்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள ஒரு மண்டபம் ராக மண்டபம், இதில் 360 ஜைன தீர்த்தங்கரர்களின் சிறிய சிலைகள் பளிங்கு கற்களால் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளை பளிங்கில் சிறந்த சிற்ப வேலைபாடுகளுக்காக இந்த கோவில், தாஜ்மகாலின் கட்டிட கலைக்கு நிகராக போற்றப்படுகிறது. ஸ்ரீ நேமிநாத்ஜியின் பெரிய சிலை கருப்பு பளிங்கில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
Remove ads
இதனையும் காண்க
படக்காட்சிகள்
- தில்வாரா கோயிலின் அலங்காரக் கூரை
- தில்வாரா சமணக் கோயிலின் கற்பக விருட்ச பக்கம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
