துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இசுமாயில் நகர்ப்பகுதி - விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்map
Remove ads

துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Tun Dr Ismail MRT station அல்லது TTDI-Deloitte; மலாய்: Stesen MRT Taman Tun Dr Ismail) என்பது மலேசியா, கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இசுமாயில் நகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இந்த நிலையம் எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1] மேலும் இந்த நிலையம் டாமன்சாரா உத்தாமா நகர்ப்பகுதிக்கும் சேவை செய்கிறது.[2]

விரைவான உண்மைகள் KG10 துன் டாக்டர் இசுமாயில், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்னர் இரண்டு இடங்கள் தேர்வாயின. இருப்பினும், பொதுமக்களின் ஆட்சேபனைக்குப் பிறகு தற்போதைய எம்ஆர்டி நிலைய அமைவிடம் மூன்றாவது தேர்வாக அமைந்தது.

ஒரு நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்னர், பொதுமக்களின் இணக்கம் தேவை என்பது தற்போதுள்ள சட்டங்களின் கீழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

Remove ads

பொது

இந்த எம்ஆர்டி நிலையத்தின் இருப்பிடம் மூன்றாவது தேர்வாக அமைந்தது. முந்தைய இரண்டு இடங்களுக்கு பொதுமக்களிடமிருந்து மறுப்புகள் வந்தன. முதல் எம்ஆர்டி நிலையத்தின் அசல் இடம் TTDI தீயணைப்பு நிலையத்திற்கு அடுத்ததாக இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது..

அதைத் தொடர்ந்து நிறுவனத் திட்ட உரிமையாளரான பிரசரானா; அதை தாமான் துன் டாக்டர் இசுமாயில் நகரத்தின் ஈரச் சந்தைக்கு அருகில் மாற்றுவதற்கு கட்டாயப்படுத்தப்படுத்தப்பட்டது.

இதுவும் சரியாக அமையவில்லை. எதிர்கால எம்ஆர்டி பயனர்களால்; சாலை மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் நெரிசலாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இறுதியாக தற்போதைய இடம் தேர்வு செய்யப்பட்டது.[3]

நிலைய அமைப்பு

L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் நுழைவாயில் A; நுழைவாயில் B; பேருந்து நிறுத்தம், வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள்
Remove ads

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இடம் ...
Remove ads

பேருந்து சேவைகள்

மேலதிகத் தகவல்கள் பேருந்து, தொடக்கம் ...

காட்சியகம்

துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads