தூலா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

தூலா மாகாணம்
Remove ads

தூலா மாகாணம் (Tula Oblast, உருசியம்: Ту́льская о́бласть, தூல்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் தூலா நகரமாகும். இம்மாகாணம் 25,700சதுரகிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.[9] மக்கள்தொகை 1,553,925 (2010)[5]

விரைவான உண்மைகள் தூலா மாகாணம்Tula Oblast, நாடு ...

இம்மாகாணம் 1937 செப்டம்பர் 26 இல் உருவாக்கப்பட்டது.

Remove ads

புவியியல்

Thumb
லியோ தால்சுத்தோய் வாழ்ந்த வீடு

தூலா மாகாணம் உருசியாவின் மத்திய நடுவண் மாவட்டத்தில் உள்ளது. இதன் எல்லைகளாக மாசுக்கோ, ரியாசன், லீபெத்சுக், ஒரியோல், கலூகா ஆகிய மாகாணக்கள் உள்ளன. இங்கு 1,600 இற்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன.

இம்மாகாணத்தில் இரும்புத் தாது, களிமண், சுண்ணக்கல் போன்றவை அதிகம் காணப்படுகின்றன.[10]

லியோ தால்சுத்தாயின் வீடும் அவரது காணியும் இம்மாகாணத்தில் தூலா நகருக்கருகில் அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

இங்குள்ள மக்கள்தொகையில் (1,553,925)[5], உருசியர்கள் - 95.3%, உக்ரைனியர் - 1%, ஆர்மீனியர்கள் - 0.6%, தத்தார்கள் - 0.5%, அசேரிகள் - 0.4%, ரோமா மக்கள் - 0.3%, பெலருசியர்கள் - 0.2%, செருமானியர்கள் - 0.2%, ஏனையோர் - 1.5% ஆவர்.[11]

சமயம்

2012 அதிகாரபூர்வத் தரவுகளின்படி,[12][13] 62% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 2% பொதுக் கிறித்தவர்கள், 1% முஸ்லிம்கள் ஆவர். மேலும், 19% சமயசார்பற்றவர்கள், 13% இறைமறுப்பாளர்கள், 3% ஏனைய சமயப் பற்றாளர்கள்.[12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads