நல்லாம்பாளையம், கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நல்லாம்பாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

விரைவான உண்மைகள் நல்லாம்பாளையம், கோயம்புத்தூர், நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 460 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நல்லாம்பாளையம் ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 11°02'57.8"N, 76°57'20.5"E (அதாவது, 11.049400°N, 76.955700°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்

கோயம்புத்தூர், காந்திபுரம், டாடாபாத், ஆர். எஸ். புரம், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, ஆவாரம்பாளையம், கணபதி, கவுண்டம்பாளையம், துடியலூர், சின்னவேடம்பட்டி, பாப்பநாயக்கன் பாளையம், மணியகாரன்பாளையம் மற்றும் சித்தாபுதூர் ஆகியவை நல்லாம்பாளையத்துக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் நல்லாம்பாளையம் பகுதிக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

தொடருந்து போக்குவரத்து

நல்லாம்பாளையத்திலிருந்து சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையமும், சுமார் 7 கி.மீ. தொலைவில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவையும் உள்ளன.

வான்வழிப் போக்குவரத்து

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், இங்கிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

கல்வி

பள்ளி

அமிர்தா வித்யாலயம் என்ற தனியார் பள்ளி ஒன்று நல்லாம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. மாதா அமிர்தானந்தமயி மடம் கட்டுப்பாட்டிலுள்ளது இப்பள்ளி. இப்பள்ளி வளாகத்தில் பிரம்மஸ்தான ஆலயம் ஒன்று உள்ளது. இத்தலத்தின் பிரம்மஸ்தான மகோற்சவம் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இதில் இந்திய ஆன்மீகவாதியும், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் நிறுவனருமான மாதா அமிர்தானந்தமயி தேவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.[2] நாமக்கல் மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சி. பி. எஸ். இ. பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவில் நடைபெற்ற கபடி போட்டி மாணவர் பிரிவில் கலந்து கொண்ட நல்லாம்பாளையம் அம்ரித வித்யாலயம் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மூன்றாம் இடமும், மாணவிகள் பிரிவில், அப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று இரண்டாம் இடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.[3] மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஒன்றும் நல்லாம்பாளையத்திலுள்ளது.

Remove ads

ஆன்மீகம்

கோயில்

ஓம் என்ற அமைப்பில் கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் ஒன்று நல்லாம்பாளையத்திலுள்ளது.[4]

தொழில்

நல்லாம்பாளையம் மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள சபரி டிரேடிங் கார்ப்பரேஷன் மற்றும் எம். எம். கிச்சன் என்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியன சமையலறை சம்பந்தப்பட்ட உபகரணங்கள் தயாரிக்கின்றன.[5]

காவல்துறை

கவுண்டம்பாளையத்தில் விரைவில் அமையவிருக்கும் ஒரு காவல் நிலையம் மூலமாக நல்லாம்பாளையம், கவுண்டம்பாளையம் மற்றும் அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள் பயனடைய இருக்கின்றன.[6]

அரசியல்

நல்லாம்பாளையம் பகுதியானது, கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் அம்மன் கே. அர்ஜுனன். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக பி. ஆர். நடராஜன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads