நான்காம் தாலமி

எகிப்திய பார்வோன் From Wikipedia, the free encyclopedia

நான்காம் தாலமி
Remove ads

நான்காம் தாலமி (Ptolemy IV Philopator)[note 1](பிறப்பு:கிமு 244 – இறப்பு:கிமு 204), பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் மன்னர் ஆவார். இவர் எகிப்தை கிமு 221 முதல் கிமு 204 முடிய 17 ஆண்டுகள் ஆண்டார்.

விரைவான உண்மைகள் நான்காம் தாலமி, பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சம் ...
Thumb
கிமு 218-இல் எகிப்தும், பிற மத்திய தரைக் கடல் நாடுகளும்
Thumb
நான்காம் தாலமியின் உருவம் பொறித்த நாணயம்
Remove ads

தபோசிரிஸ் மக்னா நகரத்தை நிறுவுதல்

பார்வோன் இரண்டாம் தாலமி மற்றும் நான்காம் தாலமி, வடக்கு எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் ஒசிரிசு கடவுள் வழிபாட்டிற்கு கோயில் கட்டவும், சமயச் சடங்குகள் நடத்தவும் கிமு 280-270களில் தபோசிரிஸ் மக்னா எனும் புதிய நகரத்தை நிறுவினர்.

அகழாய்வுகள்

பிப்ரவரி, 2021-இல் அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்த பண்டைய தபோசிரிஸ் மக்னா நகரத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான, தாலமி வம்ச காலத்து, 16 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு மம்மிகளின் வாயில் தங்க நாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது எகிப்தியக் கடவுள் ஒசிரிசுடன் பேசுவதற்காக இந்த நாக்கு பொருத்தியதாக அறியப்படுகிறது. [3][4][5][6]

Remove ads

நான்காம் சிரியா போர் (கிமு 219–217)

கிமு 221-இல் செலூக்கியப் பேரரசர் மூன்றாம் ஆண்டியோசூஸ் தாலமி பேரரசின் பகுதியான சிரியா மீது போர் தொடுத்தார். 217 -இல் நடைபெற்ற பெரும் போரில் நான்காம் தாலமி, செலூக்கியப் படைகளை வீழ்த்தி மூன்றாம் ஆண்டியோசூசுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்.

குறிப்புகள்

  1. வார்ப்புரு:Ptolemy

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads