நெகிரி செம்பிலான் மலாய் மொழி

மலேசியாவில் ஒரு வழக்கு மொழி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெகிரி செம்பிலான் மலாய் மொழி (ஆங்கிலம்: Negeri Sembilan Malay; மலாய்: Bahasa Melayu Negeri Sembilan; ஜாவி: بهاس ملايو نڬري سمبيلن ; நெகிரி மலாய்: Baso Kelate; Baso Nismilan) என்பது ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.[2]

விரைவான உண்மைகள் நெகிரி செம்பிலான் மலாய் மொழி Negeri Sembilan Malay, நாடு(கள்) ...

மலேசியாவில் நெகிரி செம்பிலான், வடக்கு மலாக்காவில் உள்ள (அலோர் காஜா; ஜாசின் மாவட்டங்கள்) மற்றும் வடக்கு ஜொகூர் மாநிலத்தில் உள்ள சிகாமட் மாவட்டம் போன்ற இடங்களில் இந்த மொழி பரவலாகப் பேசப்படுகிறது.

Remove ads

பொது

14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தோனேசியா, சுமத்திராவில் இருந்து நெகிரி செம்பிலானுக்கு குடிபெயர்ந்த மினாங்கபாவ் மக்களின் வழித்தோன்றல்களால் இந்த மொழி பேசப்படுகிறது.[3]

நெகிரி செம்பிலான் மலாய் மொழி, பெரும்பாலும் மினாங்கபாவு மொழியின் மாறுபாடு அல்லது பேச்சுவழக்காகக் கருதப்படுகிறது; இருப்பினும், இந்த மொழி மினாங்கபாவு மொழியைக் காட்டிலும் மலேசிய மொழியுடன் நெருக்கமாகத் தொடர்புடையது என்பது ஒலியியல் ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.[4]

Remove ads

வரலாறு

மினாங்கபாவு மக்கள் சுமத்திரா மலைப்பகுதிகளில் இருந்து 14-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலேசியாவில் குடியேறத் தொடங்கினர். 15-ஆம் நூற்றாண்டிலிருந்து 16-ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெயர்வு அதிகரித்தது.[3][5]

அந்த காலக்கட்டத்தில், மலாக்கா நீரிணை வழியாக வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்தன; மற்றும் புலம்பெயர்ந்தோர் பலருக்குக்கு மலாக்கா சுல்தானகத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மலாக்கா துறைமுகங்களில் இருந்து, மினாங்கபாவ் குடியேறிகள் குழுக்கள் குழுக்களாக உள்நாட்டுப் பெருநிலடததிற்குள் செல்லத் தொடங்கினர். [6]

முதல் இடம்பெயர்வு

இதுவே மலாக்காவிற்கு மினாங்கபாவ் மக்களின் முதல் இடப்பெயர்வு அலையாகும். மினாங்கபாவ் குடியேறிகளில் பெரும்பாலோர் மேற்கு சுமத்திராவில் இருக்கும் லுகாக் தானா டாத்தார் மற்றும் லுகாக் லீமா பூலோ கோத்தா ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள்.

மினாங்கபாவ் மக்களின் முதல் இடம்பெயர்வு புதிய முக்கிம்கள் திறக்கப்படுவதற்கு வழிவகுத்தது. புலம்பெயர்ந்தோரின் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக உள்நாட்டிலும் மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் புலம்பெயர்ந்தோர் தனித்தனியான சொந்த சமூக குழுக்களாக எழுச்சி பெற்றனர். இந்த குழுக்கள் 12 மினாங்கபாவ் குலங்கள் உருவாக்கத்திற்கு வழிவகுத்தன.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads