நோவசிபீர்சுக்

நோவசிபீர்சுக் மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

நோவசிபீர்சுக்map
Remove ads

நோவசிபீர்ஸ்க் (Novosibirsk உருசியம்: Новосиби́рск, பஒஅ: [nəvəsʲɪˈbʲirsk]) உருசியாவில் மிகுந்த மக்கள்தொகை உடைய நகரங்களில் மூன்றாவது ஆகும்; மாஸ்கோவும் சென். பீட்டர்ஸ்பேர்க்கும் முந்தியவையாம். ஆசிய உருசியாவில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது. 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை1,473,754.[10] தவிரவும் இந்நகரம் நோவசிபீர்சுக் மாகாணம் மற்றும் சைபீரிய கூட்டரசு மாவட்டம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைநகராக விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் Novosibirsk Новосибирск, நாடு ...

நோவசிபீர்சுக் நகரம் சைபீரியாவின் தென்மேற்குப் பகுதியில் ஓபு ஆற்றுப் பள்ளத்தாக்கை அடுத்து ஓபு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நோவசிபீர்சுக் புனல்மின் நிலையத்திற்காக அணை கட்டப்பட்டு நகரத்தின் அருகே பெரும் நீர்த்தேக்கமாக உள்ளது.[20] இந்த நகரம் பத்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பரப்பளவு 502.1 சதுர கி.மீ. (193.9 ச மை)[8] மாஸ்கோவிலிருந்து கிழக்கில் 2,800 கி.மீ (1,700 மை) தொலைவிலும் எக்கத்தரீன்பூர்க்கிலிருந்து கிழக்கே 1,400 கி.மீ. (870 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.

நோவசிபீர்சுக் என்ற பெயரை புதிய சைபீரியா என மொழியாக்கம் செய்யலாம். 1893 முதல் 1925 வரை இந்த நகரம் நோவோனிகோலயெவ்ஸ்க் என அழைக்கப்பட்டது.

இந்த நகரின் தெற்கே உள்ள உகோக் சமவெளி யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமான ஆல்டாய் தங்க மலைகளின் அங்கமாகும்.[21] இங்குள்ள வானிலை ஐரோப்பிய பெருநில வானிலையாகும். மிகவும் கடுமையான குளிரும் பனிப்பொழிவுமான குளிர்காலமும் வெப்பமான உலர் வேனிற்காலமும் கொண்டது. வேனிற்கால வெப்பநிலை 20 முதல் 25 °C (75 °F) வரையும் குளிர்கால வெப்பநிலை -18 முதல் -20 °C (0 °F) வரையும் நிலவுகிறது; குளிர்காலத்தில் வெப்பநிலை -40 °C (-40 °F) வரையும் வேனிற்காலத்தில் வெப்பநிலை 35-40 °C (100 °F) வரையும் செல்லலாம். மீயுயர் வெப்பநிலைக்கும் மீகுறை வெப்பநிலைக்கும் இடையேயான வேறுபாடு 88 °C (158 °F). பெரும்பாலும் சூரிய ஒளி காணப்படுகின்றது; சராசரியாக ஆண்டுக்கு 2880 மணிகள் சூரிய ஒளி கிடைக்கின்றது.

இயந்திரங்கள் தயாரிப்பு, உலோகவியல் ஆகியவை முதன்மை தொழில்களாக உள்ளன. நோவசிபீர்சுக் மாநிலப் பல்கலைக்கழகம் இங்குள்ளது. மற்றும் பல கல்வி நிறுவனங்களும் அறிவியல் ஆய்வகங்களும் அமைந்துள்ளன. நோவசிபீர்சுக்கின் ஓபரா, பாலே புகழ்பெற்றது; பல குழுக்களும் அரங்கங்களும் இங்குள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads