பகவல்நகர் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

பகவல்நகர் மாவட்டம்
Remove ads

பகவல்நகர் மாவட்டம் (Bahawalnagar District), பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் பகவல்நகர் நகரம் ஆகும். இது மாகாணத் தலைநகரான லாகூருக்கு தெற்கில் 260 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கில் 512 கிலோமீட்ட்ர் தொலைவிலும் உள்ளது. இந்தியப் பிரிவினைக்கு முன்னர் இம்மாவட்டம் பகவல்பூர் இராச்சியத்தில் இருந்தது. இம்மாவட்டத்தின் மேற்கில் சத்லஜ் ஆறு பாய்கிறது.

விரைவான உண்மைகள் பகவல்நகர் மாவட்டம் ضلع بہاولنگر, நாடு ...
Remove ads

மாவட்ட எல்லைகள்

Thumb
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் மாவட்டங்கள்

பகவல்பூர் மாவட்டத்தின் கிழக்கில் இந்தியாவின் பிகானேர் மாவட்டம் மற்றும் பெரோஸ்பூர் மாவட்டங்களும்[3]தெற்கில் பகவல்பூர் மாவட்டம், வடக்கில் ஒக்ரா மாவட்டம், வடமேற்கில் பாக்பட்டான் மாவட்டம் மற்றும் மேற்கில் வெகாரி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

Thumb
பகவல்பூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்

8,878 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகவல்நகர் மாவட்டம் 5 வருவாய் வட்டங்களும், 118 ஒன்றியக் குழுக்களும் கொண்டுள்ளது.[4]

மேலதிகத் தகவல்கள் வருவாய் வட்டம், பரப்பளவு (km²) ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 557,616 குடியிருப்புகள் கொண்ட பகவல்நகர் மாவட்ட மக்கள் தொகை 35,50,342.[8] . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 108.27 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 57.01% ஆகும்.[1][2] 971,921 (27.42% of the surveyed population) are under 10 years of age.[9] 974,118 (27.44%) live in urban areas.[1]

சமயங்கள்

இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் 99.45% மற்றும் சமயச் சிறுபான்மையோர் 19,653 (0.55%) உள்ளனர்.[10]

மொழிகள்

இம்மாவட்ட மக்களில் 94.08% பஞ்சாபி மொழியையும், 3.35% பேர் உருது மொழியையும், 1.74% மக்கள் சராய்கி மொழியைப் பேசுகின்றனர்.[11]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads