பண்டார் செரி பரமேசுவரி

கோலாலம்பூர் மாநகர மையத்தில் உருவாக்கப்பட்ட நகரம் From Wikipedia, the free encyclopedia

பண்டார் செரி பரமேசுவரிmap
Remove ads

பண்டார் செரி பரமேசுவரி (ஆங்கிலம்; மலாய்: Bandar Sri Permaisuri) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தின் தென்கிழக்கில், ஏறக்குறைய 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு திட்டமிடப்பட்ட நகரமாகும். செராஸ் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இந்த நகரம்; அதன் சீரான நகர்ப்புறத் திட்டமிடல், பசுமைமாறா இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து நெடுஞ்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது.[1]

விரைவான உண்மைகள் பண்டார் செரி பரமேசுவரி Bandar Sri Permaisuri கோலாலம்பூர், நாடு ...

பண்டார் துன் ரசாக் மற்றும் சாலாக் செலாத்தான் நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பண்டார் செரி பரமேசுவரி நகரம், பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதிக்குள் உள்ளது. நடுத்தர வருமானக் குடும்பங்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடையே பிரபலமான ஒரு நவீன குடியிருப்புப் பகுதியாக பண்டார் செரி பரமேசுவரி விளங்குகிறது.[2]

பண்டார் செரி பரமேசுவரி நகரம் 2000-ஆம் ஆண்டு குடியிருப்பு வீட்டுவசதிக்காகத் திறக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கூட்டுரிமை குடியிருப்புகள் போன்றவை அங்குள்ள முக்கிய வீட்டு வகைகள் ஆகும்.[1]

Remove ads

பெயர்

பண்டார் செரி பரமேசுவரி என்பதற்கு மலாய் மொழியில் இராணியின் நகரம் என்று பொருள்படும். மலேசியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், நவீனத்தை உள்ளடக்கிய நகர்ப்புற அடையாளத்தையும் அந்தப் பெயர் குறிக்கின்றது. காலப்போக்கில், பண்டார் செரி பரமேசுவரி பன்முகத்தன்மை கொண்ட மலேசிய மக்களை ஈர்த்து வருகிறது; துடிப்பான மற்றும் சமூகத்தை மையமாகக் கொண்ட சூழலுக்கும் பங்களித்து வருகிறது.[2]

வரலாறு

கோலாலம்பூர் மாநகருக்கு அருகில் மலிவு விலையில் நவீன வீடுகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பண்டார் செரி பரமேசுவரியின் உருவாக்கம் 1990-களின் பிற்பகுதியில் தொடக்கப்பட்டது. இது கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி நிறுவனம் (DBKL Holdings) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுத் திட்டமாகும். அந்தக் காலக்கட்டத்தில், செராஸ் பகுதிகளில் பயன்படுத்தப்படாத நிலங்களைத் தெரிவு செய்து; அவற்றை தன்னிறைவு பெற்ற குடியிருப்பு வணிக மையங்களாக மாற்றுவதே அந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது.[2]

Remove ads

போக்குவரத்து

சாலைகள்

பண்டார் செரி பரமேசுவரி நகரத்தை கீழ்க்காணும் முக்கிய விரைவுச் சாலைகள்; மற்றும் சாலைகள் வழியாக அணுகலாம்.

E2  கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை
E9  சுங்கை பீசி விரைவுச்சாலை
E20  மாஜு விரைவுச்சாலை
E37  கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை
28 கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2)[3]

தொடருந்து

கேடிஎம் கொமுட்டர் தொடருந்து/மெட்ரோ நிலையங்கள்:

பேருந்து

ரேபிட் கேஎல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads