பந்தூரானா மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பந்தூரானா மாவட்டம் (Pandhurna district) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் 55வது மாவட்டம் ஆகும். இது ஜபல்பூர் கோட்டத்தின் 9வது மாவட்டம் ஆகும். சிந்த்வாரா மாவட்டத்தின் மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டு 2023ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் பந்தூரானா நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக (49.70%) உள்ளனர்.
Remove ads
புவியியல்
1522.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பந்தூரானா மாவட்டத்தின் தென்கிழக்கில் மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டம், மேற்கில் மகாராட்டிராவின் அமராவதி மாவட்டம் மற்றும் பேதுல் மாவட்டம் மற்றும் வடக்கில் சிந்த்வாரா மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஜாம் ஆறு மற்றும் கங்கன் ஆறுகள் பாய்கிறது.[2]
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் பந்தூரானா மற்றும் சௌசர் என இரண்டு வருவாய் வட்டங்களையும், இரண்டு ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது. [3]மேலும் 5 நகராட்சிகளையும், 317 கிராமங்களையும் கொண்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கள் தொகை 3,74,310. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 948 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 37,456 (10.01%) மற்றும் 96,515 (25.78%) ஆக உள்ளனர்.[4]இம்மாவாட்ட மக்களில் தாய் மொழியாக மராத்தி மொழியை 49.70%, இந்தி மொழியை 20.37% , கோண்டி மொழியை 7.65%, போவாரி மொழியை 7.65% மற்றும் கொற்கு மொழியை 1.88% மற்றும் பிற மொழிகளை 0.90% பேர் பேசுகின்றனர்.[5]இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தை 88.20%, பௌத்தத்தை 4.92%, இசுலாமை 3.53% மற்றும் பிற சமயங்களை 3.35% பின்பற்றுகின்றனர்.
அரசியல்
இம்மாவட்டம் சிந்த்வாரா மக்களவைத் தொகுதிக்கும், பந்தூரானா மற்றும் சௌசர் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உட்பட்டது.
பொருளாதாரம்
இம்மாவட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தை கொண்டது. இம்மாவடடத்தில் ஆரஞ்சு பழத்தோட்டங்கள் அதிகம் கொண்டது. [6] ஆரஞ்சு பழச்சாற்றை மதிப்பு கூட்டி, டப்பாக்களில் அடைத்து விற்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
போக்குவரத்து
குஜராத்தையும், மகாராட்டிரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா) இம்மாவட்டத் தலைமையிடமான பந்துரானா நகரத்தின் வழியாகச் செல்கிறது. பந்துரானா நகரத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. [7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads