பாஞ்சாலதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாஞ்சாலதேசம் கோசலதேசத்திற்கு வடமேற்கிலும், குருதேசம், பாஹ்லிகதேசத்திற்கு நேர்கிழக்கிலும், இமயமலையின் தரணசு தலத்திற்கு வடக்கிலிருந்து தெற்கில் தாழ்த பூமியில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்
இந்த தேசமானது, சூரசேனதேசம் போன்றே மண் அமைப்புடையது. இமயமலையை அடுத்து இருப்பதால் குளிர், மழை, பனி எப்பொழுதும் விடாமல் பெய்து கொண்டே இருக்கும்.இது கற்பாறையும், மண்ணும் கலந்த பூமியாக இருக்கும்.[2]
பருவ நிலை
இமயமலயின் நடுபாகத்தில் உருவாகும் சரயூநதி, தமசாநதி, கங்காநதி என்னும் இம்மூன்றின் நீர் ஏறிப்போவதற்கு தகுந்த பூமி, குளிர், மழை விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும்.
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்தின் வடக்கில் உள்ள இமயமலையின் சிறு மலைத்தொடர்களே தெற்கு நோக்கி ஓங்கி நின்று பெரிய மலைகளாக நான்குபுறமும், சிறுமலைகளும், சிறிய காடுகளும், அவைகளில் கருங்குரங்கு, பெரிய மலைப்பாம்பு, கரடி, பன்றி, புலி, யானை ஆகிய கொடிய விலங்குகள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் நன்மையானபடியால் வளம் நிறைந்த தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாக இருக்கும்.[2]
நதிகள்
இந்த தேசத்தின் மேற்குபாகத்தில் செழிப்பான பகுதியில் கங்கைநதியும், இதற்கு கிழக்கில் தமசா நதியும், காஞ்சனாசம் என்னும் மலையிலிருந்து காஞ்சனாசி என்ற நதியும் ஓடுகிறது. ஹரித்துவார் என்னும் நகருக்கு நேர்தெற்கில் கபிலா என்ற நதி ஓடி காஞ்சனாசி நதியுடன் சேர்ந்து கங்கையுடன் இணைகிறது.[2]
விளைபொருள்
இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாமிரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
நகரம்
இந்த பாஞ்சாலதேசத்தின் வட எல்லையில்தான் மாயா என்னும் ஒரு பெரிய நகரமுள்ளது. இது புராணகாலத்தில் ஹரித்துவார் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பத்ரிகாசிரமம் என்னும் பத்ரி நாராயணனுடைய கோவிலும் உள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads