பாலி இராச்சியத்தின் அரசர்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலி இராச்சியத்தின் அரசர்கள் (ஆங்கிலம்: Monarchs of Bali; இந்தோனேசியம்: Raja Raja Bali; பாலினியம்: Lis Raja Bali) என்பது பாலி இராச்சியத்தின் அரசர்களின் ஆட்சிக் காலப் பட்டியல் ஆகும்.
இந்தோனேசியாவில் கிடைத்த கல்வெட்டுப் பதிவுகள்; பாலினிய நிகழ்ச்சிக் கோவைகள் (Babad); மற்றும் இடச்சு குடியேற்றவியச் சான்றுகளின் வழியாகக் கிடைக்கப் பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
Remove ads
பொது
1950-ஆம் ஆண்டுகள் வரை, பாலி தீவில் பாலினிய அரச பரம்பரைகளும் முடியாட்சிகளும் தொடர்ந்து இருந்தன; இருப்பினும், இந்தோனேசிய குடியேறவியத்திற்குப் பிந்தைய ஆட்சி; மற்றும் இந்தோனேசிய தேசிய புரட்சி; ஆகியவற்றுக்குப் பின்னர், பாலியின் அசல் ஆட்சியாளர்களின் சிறப்புரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இடச்சு படையெடுப்பாளர்கள்; இந்தோனேசிய மத்திய அரசு அதிகாரிகள்; மற்றும் இராணுவம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தபோதிலும், பாலி இந்து சமயம்; பாலினிய முடியாட்சி போன்றவை பாலினியப் பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகின்றன.
Remove ads
பண்டைய பாலி இராச்சியத்தின் அரசர்கள்

வருமதேவா அரச மரபு
- செரி கேசரி வருமதேவன் - (Sri Kesari Warmadewa) (914)
- செரி உக்கிரசேனன் - (Sri Ugrasena) (915-942)
- தவநேந்திர வருமதேவன் - (Tabanendra Warmadewa) (955-967)
- இந்திர ஜெயசிங்க வருமதேவன் - (:id:Indrajayasingha Warmadewa|) (960)
- சனசாது வருமதேவன் - (Janasadhu Warmadewa) (975)
- செரி விஜய மகாதேவி - (Śri Wijaya Mahadewi) (அரசி, 983)
- குணப்பிரியா தருமபத்தினி - (Gunapriya Dharmapatni|) (அரசி, 989-1007)
- உதயனா வருமதேவன் - (Udayana Warmadewa) (989-1011)
- செரி அஜனாதேவி - (Śri Ajñadewi) (அரசி, 1011 - 1016)
- மரகத பங்கஜன் - (Marakata Pangkaja) (1022 – 1049)
- ஏர்லங்கா - (Airlangga) (1025-1042)
- அனாக் உங்குஸ் - (Anak Wungsu) (1025-1077)
- மகாராஜா வளபிரபு - (id:Śri Maharaja Walaprabhu) (1079 - 1088)
- இலட்சுமிதர விஜயதுங்கதேவி - (Śri Laksmidhara Wijayottunggadewi) (அரசி, 1088-1101)
- மகாராஜா சூரதீபன் - (id:Śri Maharaja Sri Suradhipa) (1115-1119)
ஜெயா அரச மரபு
- ஜெயசக்தி - (Śri Jayaśakti) (1133-1150)
- இராகஜெயன் - (Ragajaya) (1155)
- ஜெயபங்கஜன் - (Jayapangus) (1178-1181)
- அருஜெய கீர்த்தனா - (Arjayadengjayaketana) (அரசி, 1200)
- ஏகஜெயாலன் - (Haji Ekajayalancana) (1200)
- செரி ஆதிகுந்திகேதனன் - (Bhatara Guru Śri Adikuntiketana) (1204)
- ஆதிதேவயாளன் - (Adidewalancana) (1260)
- ஏகஜெயலஞ்சனன் (Ekajayalancana) / அருசரியா ஜெயகீர்த்தனா (Sri Arjaryya Dengjayaketana) (Queen of Bali) (?–1284) சிங்காசாரி அரசின் படையெடுப்பில் ஆட்சி கவிழ்ப்பு)[2]
சிங்காசாரி அரசு
சிங்காசாரி அரசு பாலி ஆட்சியைக் கைப்பற்றுதல் 1284
- இராஜபதி மகா காசர் (Rajapatih Makakasar Kebo Parud) (1296-1300)
பூர்வீக ஆட்சியாளர்கள்
- மகாகுரு தருமதுங்க வருமதேவா (Mahaguru Dharmottungga Warmadewa) (1324-1328)
- வளஜெய கீர்த்தினகரன் (Walajayakertaningrat) (1328-?)
- செரி அசுதசூர இரத்தின பூமி (Śri Astasura Ratna Bumi Banten) (1332-1337)
மஜபாகித் ஆட்சி
- மயாபாகித்து பேரரசு பாலி ஆட்சியைக் கைப்பற்றுதல் (1343)
Remove ads
காட்சியகம்
- பாலி இராச்சியம் தொடர்பான காட்சிப் படங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads