புத்ராஜெயா சென்ட்ரல்
புத்ராஜெயா & சைபர்ஜெயா வானூர்தி இணைப்பு நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புத்ராஜெயா சென்ட்ரல் (ஆங்கிலம்: Putrajaya Sentral (KLIA); மலாய்: Stesen Putrajaya Sentral) என்பது மலேசியா, புத்ராஜெயா, வளாகம் 7-இல் (Precinct 7) அமைந்துள்ள ஒரு பேருந்து மையம்; மற்றும் ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடம்; மற்றும் புத்ராஜெயா-சைபர்ஜெயா இஆர்எல் வழித்தடம் எனும் இரு வழித்தடங்களால் சேவை செய்யப்படுகிறது.[1]
புத்ராஜெயா & சைபர்ஜெயா எனும் பெயரில் இஆர்எல் சேவையின் இரண்டு வழித்தடங்களான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து மூலம் சேவை செய்வதாகவும் அறியப்படுகிறது.[2]
புத்ராஜெயா சென்ட்ரல் நிலையம், இஆர்எல் & எம்ஆர்டி சேவைகளைத் தவிர பிற பல்வகை போக்குவரத்துச் சேவைகளையும் வழங்குகிறது. அந்தச் சேவைகளில் முடிக்கப்படாத புத்ராஜெயா மோனோரயில் நிலையம், வாடகை ஊர்திகள் மையம் மற்றும் ஒரு பேருந்து நிலையம் ஆகியவை அடங்கும். இந்த பேருந்து மையம் தற்போது ரேபிட் கேஎல் (Rapid KL) மற்றும் நாடி புத்ரா (Nadi Putra) பேருந்துகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பேருந்துகளுடன், விரைவுச் சேவை பேருந்துகள், இன்டர்சிட்டி எனும் நகரிடை பேருந்துகள் புத்ராஜெயாவிற்குச் சேவை செய்கின்றன.[3] புத்ராஜெயா சென்ட்ரல் வளாகத்தில் உணவகங்கள் மற்றும் துணிக் கடைகளும் உள்ளன.
Remove ads
புத்ராஜெயா சென்ட்ரல் நிலையக் கட்டிடம்
இந்த நிலையத்தில் கேஎல்ஐஏ போக்குவரத்து தளங்கள் மற்றும் கோலாலம்பூர் மோனோரெயில் தளங்கள் இரண்டிற்கும் ஒரு பொதுவான இணைப்புவழி (Concourse) உள்ளது. புதிதாக கட்டப்பட்ட எம்ஆர்டி நிலைய வளாகத்தின் கிழக்குப் பகுதியில் பாதசாரிகள் நடைபாதை (Pedestrian Walkway) உள்ளது. அந்த நடைபாதை பிரதான கட்டிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேஎல்ஐஏ 1 நிலையம்
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தைக் கட்டும் போதே முதல் இஆர்எல் சேவை தொடருந்து நிலையத்தையும் கட்டிவிட்டார்கள். அதன் அப்போதைய பெயர் கேஎல்ஐஏ 1 நிலையம். தற்போது கேஎல்ஐஏ T1 நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2014 மே 1-ஆம் தேதி மலிவுவிலை வானூர்திச் சேவைகளுக்காக (Low Cost Carrier Terminal) (LCCT) ரிங்கிட் 4 பில்லியன் செலவில், அசல் வானூர்தி நிலையத்திற்கு 2 கிமீ அப்பால் இரண்டாவது வானூர்தி முனையம் கட்டப்பட்டது. அந்த முனையத்திற்காக மற்றும் ஒரு புதிய தொடருந்து நிலையமும் கட்டப்பட்டது. அந்த நிலையத்தின் தற்போதைய பெயர் கேஎல்ஐஏ T2 நிலையம் (KLIA T2) ஆகும்.
Remove ads
பேருந்து சேவைகள்
புத்ராஜெயா சென்ட்ரல் நிலையம்; நான்கு முனையங்களைக் கொண்ட ஒரு பேருந்து முனையமாகும். மலேசிய எரியட்-வாட் பல்கலைக்கழகத்திற்கு (Heriot-Watt University) இன்டர்சிட்டி விரைவுப் பேருந்து சேவைகள்; மற்றும் துரிதப் பேருந்து சேவைகள் முனையம் B வழியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.[4]
அனைத்துப் பேருந்துகளும் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள முனையம் D-இல் இயங்குகின்றன. எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தடம் திறக்கப்பட்டதும், ஐந்து ஊட்டி பேருந்துகள் புத்ராஜெயாவின் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படத் தொடங்கின.
நிலைய வளாகத்தில் செயல்படும் அனைத்து எம்ஆர்டி ஊட்டி பேருந்துகளும் ரேபிட் பேருந்துகளால் இயக்கப்படுகின்றன. அதே வேளையில் அந்தப் பேருந்துகள் அனைத்தும் மிகக் குறைந்த கட்டணமான RM 1 கட்டண முறையைப் பயன்படுத்துகின்றன.
ஊட்டி பேருந்துகள்
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

