மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு

From Wikipedia, the free encyclopedia

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
Remove ads

மத்திய ஆபிரிக்கக் குடியரசு (அல்லது நடு ஆப்பிரிக்கக் குடியரசு, Central African Republic, பிரெஞ்சு: République Centrafricaine, IPA: ʀepyblik sɑ̃tʀafʀikɛn/ அல்லது Centrafrique IPA: /sɑ̃tʀafʀik/) மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே சாட், கிழக்கே சூடான், தெற்கே கொங்கோ குடியரசு மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மேற்கே கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 620,000 சதுர கிலோமீட்டர்கள் (240,000 sq mi) ஆகும். மக்கள்தொகை 4.4 மில்லியன் (2008). இதன் தலைநகரம் பாங்கி.

விரைவான உண்மைகள் மத்திய ஆபிரிக்கக் குடியரசுRépublique CentrafricaineKödörösêse tî Bêafrîka, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...

இந்நாட்டின் பெரும்பகுதி சூடான்-குயினியன் புல்புதற்காடுகளால் ஆனது. ஆனால் வடக்கே சஹெலோ-சுடான் நிலமும் தெற்கே நடுவரைக் கோட்டு காடுகளும் உள்ளன. கொங்கோ ஆற்றில் பாயும் உபாங்கி ஆற்றின் கரைகளில் இந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அமைந்துள்ளது. மீதி ஒரு பங்கு சாரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது. இதனால் இந்நாட்டை ஆண்ட பிரெஞ்சுக்காரர் இதனை உபாங்கி-சாரி என அழைத்தனர். சாரி ஆறு வடக்கே பாய்ந்து சாட் ஏரியுள் கலக்கின்றது.

Thumb
மத்திய ஆபிரிக்கக் குடியரசும் அதன் எல்லை நாடுகளும்

பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகவிருந்த இந்நாடு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1958 ஆம் ஆண்டில் பிரான்சின் சுயாட்சி-உரிமை பெற்ற நாடாக ஆனது. பின்னர் 1960 ஆகத்து 13 ஆம் நாள் பிரான்சிடம் இருந்து முழுமையான விடுதலை அடைந்து தற்போதைய பெயரைப் பெற்றது. விடுதலை அடைந்த நாளிலிருந்து மூன்று தசாப்த காலமாக இந்நாட்டை மக்களால் சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்படாத அதிபர்களே ஆட்சி நடத்தினர். பனிப்போரின் முடிவில், உலக நாடுகளின் அழுத்தங்களை அடுத்து, 1993 இல் முதலாவது மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆன்சு-பீலிக்சு பத்தாசே அரசுத்தலைவர் ஆனார். இவர் மக்களின் செல்வாக்கை இழக்கவே, 2003 இல் பிரான்சின் ஆதரவு பெற்ற இராணுவப்-புரட்சி மூலம் இராணுவ ஜெனரல் பிரான்சுவா பொசீசே ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் 2005 மே மாதத்தில் நிகழ்ந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.[1] அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பணம் நிலுவையில் இருந்ததால் 2007 ஆம் ஆண்டில் நாட்டில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, ஃபாஸ்டின்-அர்ச்சான்சு தோடேரா என்பவர் தலைமையில் புதிய அரசு ஒன்றை பொசீசே அமைத்தார். அரசுத்தலைவர் தேர்தல் பல முறை பின்போடப்பட்டு 2011 சனவரி, மார்ச்சு மாதங்களில் இடம்பெற்றது. பொசீசேயும் அவரது கட்சியினரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். பொசீசே ஆட்சியில் ஊழல், அபிவிருத்தியின்மை, தம் குடும்பத்தினருக்குத் தனிச்சலுகை காட்டுதல், எதேச்சாதிகாரம் போன்ற காரணங்களால் சேலேக்கா என்ற ஆயுதக்குழுவினரால் திறந்த ஆயுதக் கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியை அடுத்து 2013, மார்ச் 24 ஆம் நாள் பொசீசேயின் அரசு கவிழ்க்கப்பட்டது. பொசீசே நாட்டை விட்டு வெளியேறினார். கிளர்ச்சிக் குழுவின் தலைவர் மிசேல் ஜொட்டோடியா என்பவர் அரசுத்தலைவர் ஆனார்.

மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகவும், ஆபிரிக்காவின் 10 வறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் 43வது பெரிய நாடாகும். இதன் மக்கள் தொகை 4,303,356 ஆகும். இவர்களில் 11 விழுக்காடு எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். பரணிடப்பட்டது 2007-12-12 at the வந்தவழி இயந்திரம் 80 இனக் குழுக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். அனைத்து இனக்குழுக்களும் தமது மொழியைக் கொண்டுள்ளன.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads