மயிலம் முருகன் கோயில்

என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், மயிலம் என்ற ஊரில் உள்ள குன்றில் அமைந From Wikipedia, the free encyclopedia

மயிலம் முருகன் கோயில்map
Remove ads

மயிலம் முருகன் கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், மயிலம் என்ற ஊரில் உள்ள குன்றில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும்.

விரைவான உண்மைகள் மயிலம் முருகன் கோயில், ஆள்கூறுகள்: ...
Thumb
கோயிலின் நுழைவுவாயில்
Remove ads

அமைவிடம்

இக்கோயிலானது திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°07'47.4"N, 79°36'54.1"E (அதாவது, 12.129835°N, 79.615016°E) ஆகும்.

ஊர்

மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும். இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்துள்ளது. புதுச்சேரிக்கு அருகில் உள்ளது. இது பிராமணர்களுக்கு நன்கொடை அளித்த கிராமமாக இருந்தது.

கோயில்

நொச்சி மரங்கள் நிறைந்த குன்றில் இந்த முருகன் கோயில் அமைந்துள்ளது.கோயிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் கல்யாணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.[2]

தொன்மம்

சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கண்ணீருடனான வேண்டுதலால் மனம் மாறிய முருகக்கடவுள் மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சூரபத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும் போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. முருகன் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும், அதனால், இந்த மலை மயிலமலை என்றும் இந்த இடம் மயிலம் என்றும் குறிப்பிடப்படுவதாகத் தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

முருகனால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்ட போது அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி இந்தப்பகுதிக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்ததாகவும், தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்ததாகவும், அப்போது சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என முருகனிடம் வேண்டியதாகவும் மற்றொரு புராணத்தகவல் கூறுகிறது. மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் விளங்க வேண்டும் எனவும் முருகன் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சூரபத்மன் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முருகன் அவனிடம், ‘‘எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.[3]

Remove ads

நிருவாகம்

மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பாக கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் உள்ள மடம் கோவில் நிருவாகத்தைக் கவனித்து வருகிறது.[4]

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

Remove ads

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 1:00மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதிகள்

வான்வழி

பாண்டிச்சேரி விமான நிலையமே இதன் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். பாண்டிச்சேரி விமான நிலையம் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை விமான நிலையங்கள் இங்கிருந்து முறையே 205 கிலோமீட்டர் மற்றும் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.

இருப்புப்பாதை போக்குவரத்து

தெற்கு இரயில்வேயின் சென்னை-திண்டிவனம் முக்கிய இருப்புப்பாதை வழியில் மயிலம் அமைந்துள்ளது.

மயிலம் புகைவண்டி நிலையம் தினசரி 8 தொடர்வண்டிகளைக் (போக/வர) கையாள்கிறது. தினசரி சராசரியாக 12000 பயணிகளைக் கையாள்கிறது. தினசரி 4 புகைவண்டிகள் இந்த நிலையத்திலிருந்து புறப்பட்டு அல்லது கடந்து செல்கின்றன. அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டு உள்ளன.

மேலதிகத் தகவல்கள் வண்டி எண், புகைவண்டியின் பெயர் ...

இந்த தொடர்வண்டி நிலையம் திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை(335 கி.மீ), இராமேஸ்வரம்(575 கி.மீ), பெங்களூரு(340 கி.மீ), வாரனாசி (2371 கி.மீ) ஆகியவற்றுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

சாலைப் போக்குவரத்து

தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் திண்டிவனத்திலிருந்து இடைநில்லாப் பேருந்து வசதிகளும், விரைவுப்பேருந்து வசதிகளும் காணப்படுகின்றது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads