மலாக்கா கலைக்கூடம்

From Wikipedia, the free encyclopedia

மலாக்கா கலைக்கூடம்map
Remove ads

மலாக்கா கலைக்கூடம் மலாய்: Balai Seni Lukis Melaka; ஆங்கிலம்:Malacca Art Gallery; சீனம்:马六甲美术馆) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும். மலேசியாவில் மிகப் பழைமையான கலைக்கூடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

1958-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் கலைக்கூடம், கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ளது. முதன்முதலில் 1640-ஆம் ஆண்டுகளில், இடச்சு மலாக்கா அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகமாகச் செயல்பட்டது.

தற்போது அதே கட்டிடத்தின் தரைத் தளத்தில் மலேசிய இளைஞர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டு உள்ளது.[2]

Remove ads

பொது

கலைக்கூடத்தின் நிரந்தரப் பகுதியில் ஏறக்குறைய 150 ஓவியங்கள் மற்றும் 30 சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மலேசியாவின் பிரபல ஓவியர்களான ரபி அப்துல் ரகுமான், வான் உய்-சியு, ரகமத் ரம்லி, ரபி அப்துல் கானி, செகான் சான் போன்றவர்கள் வரைந்த ஓவியங்கள் அந்தக் கலைக்கூடத்தில் சிறப்பு படைப்புகளாக உள்ளன.[3]

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜெரார்ட் வான் டென் ஓடெலார் என்பவரின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த ஓவியங்களைத் தவிர, கையெழுத்து கண்காட்சிகள், திரைப்படக் கண்காட்சிகள் போன்ற பிற கண்காட்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.[4]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads