மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்

1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில் தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பக From Wikipedia, the free encyclopedia

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்map
Remove ads

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (ஆங்கிலம்: Federated Malay States (FMS); மலாய் மொழி: Negeri-negeri Melayu Bersekutu; சீனம்: 马来联邦; ஜாவி:نݢري٢ ملايو برسکوتو) என்பது 1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில், தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பகாங் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். அந்த நான்கு மாநிலங்களும் பிரித்தானிய மலாயா நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன.

விரைவான உண்மைகள் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்Federated Malay States, நிலை ...

1946-ஆம் ஆண்டில், அந்த நான்கு மாநிலங்களுடன், மலாக்கா; பினாங்கு நீரிணை குடியேற்ற மாநிலங்களும் (Straits Settlements); மற்றும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்களும் (Unfederated Malay States) ஒன்றாக இணைக்கப்பட்டு மலாயா ஒன்றியம் (Malayan Union) எனும் ஓர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மலாயா ஒன்றியம் எனும் அந்த அமைப்பு மலாயா கூட்டமைப்பு ஆனது. 1957-ஆம் ஆண்டில் மலாயா சுதந்திரம் அடைந்தது. இறுதியாக 1963-ஆம் ஆண்டில், வடக்கு போர்னியோ எனும் இன்றைய சபா மாநிலமும் சரவாக்; சிங்கப்பூர் மாநிலங்களும் இணைந்து மலேசியா எனும் பெரும் கூட்டமைப்பாக மாற்றம் கண்டன.

Remove ads

பொது

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் உண்மையான நிர்வாக அதிகாரங்கள் நான்கு உள்ளூர் பிரித்தானிய ஆளுநர்களிடமும் (British Residents); மற்றும் பிரித்தானிய தலைமை ஆளுநரிடமும் (Resident-General) மட்டுமே இருந்தன.

உள்ளூர் சுல்தான்களின் அதிகாரங்கள் "மலாய் மதம் மற்றும் பழக்கவழக்கங்களைத் தொடும்" (Malay Religion and Customs) விசயங்களில் மட்டுமே இருந்தன. அந்த வகையில் உள்ளூர் சுல்தான்களின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன.

இரண்டாம் உலக போரில், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களும்; மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்களும்; நீரிணை குடியேற்ற மாநிலங்களும் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

ஜப்பான் சரண் அடைந்து மலாயா விடுதலைக்குப் பிறகு, மலாயா கூட்டமைப்பு வடிவத்திற்குப் பதிலாக நடுவண் அரசு நிர்வாகம் (Federal Form of Government) அமல்படுத்தப் பட்டது.

Remove ads

விளக்கம்

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்

  1. சிலாங்கூர்
  2. பேராக்
  3. நெகிரி செம்பிலான்
  4. பகாங்

மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்

  1. ஜொகூர்
  2. கெடா
  3. கிளாந்தான்
  4. பெர்லிஸ்
  5. திராங்கானு

நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள்

  1. மலாக்கா
  2. பினாங்கு
  3. சிங்கப்பூர்
Remove ads

வரலாறு

உருவாக்கம்

1874 சனவரி 20-ஆம் தேதி, நீரிணை குடியேற்றங்களின் ஆளுநரான சர் ஆண்ட்ரூ கிளார்க் (Sir Andrew Clarke), பேராக் சுல்தானுடன், பாங்கோர் உடன்படிக்கையை (Treaty of Pangkor 1874) செய்து கொண்டார்.

அதன் மூலம் ஆளுநர் (ரெசிடென்ட்; Resident) எனும் ஒரு பிரித்தானிய அதிகாரிக்கு ஒரு பொருத்தமான குடியிருப்பை வழங்குவதற்குப் பேராக் சுல்தான் (Sultan of Perak) ஒப்புக் கொண்டார்.

பிரித்தானிய ஆளுநர் முறை

Thumb
1906-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

பேராக் மாநிலத்தில், மலாய் மதம் மற்றும் கலாசாரப் பழக்கவழக்கங்களைத் தொடும் விசயங்களைத் தவிர (Malay Religion and Customs) மற்ற எல்லா விசயங்களிலும் பிரித்தானிய அதிகாரியின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படவும் பேராக் சுல்தான் ஒப்புக் கொண்டார்.

இதே ஆளுநர் (ரெசிடென்ட்) முறை அதே 1874-ஆம் ஆண்டு சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களிலும் அமல் செய்யப்பட்டது. 1888-இல் பகாங்கிற்கும் நீட்டிக்கப்பட்டது.[2]

உண்மையான அதிகாரங்கள்

நிர்வாகத் திறனை அதிக அளவில் மேம்படுத்துவதற்காக, சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய நான்கு மாநிலங்களும் 1895-1896-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) என ஒன்றிணைக்கப்பட்டன.

இந்த அமைப்பு மிகவும் மையப்படுத்தப்பட்டது. உண்மையான அதிகாரங்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆளுநர்களின் கைகளில் இருந்தன. முதலில் தலைமைப் பிரித்தானிய ஆளுநரிடம் (Resident-General) அந்த அதிகாரம் இருந்தது. பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரிடம் (Chief Secretary of the British Government) ஒட்டு மொத்த கூட்டமைப்பு அதிகாரங்களும் போய்ச் சேர்ந்தன.[2]

மலாயா கூட்டரசு மன்றம்

Thumb
மலாயா கூட்டமைப்பு மாநிலங்களுக்கான தலைமைச் செயலாளரின் கொடி

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் கூட்டமைப்பை நிர்வகிப்பதற்காக 1898-ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் கூட்டரசுக் கழகம் எனும் கூட்டரசு மன்றத்தை (Federal Council) நிறுவினார்கள்.

இந்த கூட்டரசு மன்றத்திற்கு நீரிணைக் குடியேற்ற மாநிலங்களின் உயர் ஆணையர் (High Commissioner; The Governor of the Straits Settlement) தலைமை பொறுப்பை ஏற்றார். இவருக்கு உதவியாக தலைமைப் பிரித்தானிய ஆளுநர்; மாநிலச் சுல்தான்கள், நான்கு மாநில பிரித்தானிய ஆளுநர்கள் மற்றும் நான்கு நியமன உறுப்பினர்கள் (Nominated Unofficial Members) செயல்பட்டனர்.[3]

டிசம்பர் 8, 1941-இல் ஜப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமிக்கும் வரை இந்த மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் கூட்டமைப்பு முறை அமலில் இருந்தது. அதன் பின்னர் மலாயா ஒன்றியம் அமைப்பில் இந்தக் கூட்டமைப்பு முறை இணைக்கப்பட்டது. [4]

Remove ads

மலாயா கூட்டமைப்பு ஆளுநர்கள்

1896 முதல் 1936 வரை, உண்மையான அதிகாரம் பிரித்தானிய ஆளுநரின் (Resident-General) கைகளில் இருந்தது, பின்னர் அவர் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் (Chief Secretary of the Federation) என்று அழைக்கப்பட்டார்.

மேலதிகத் தகவல்கள் #, ஆளுநர்கள் ...
Remove ads

சிலாங்கூர் பிரித்தானிய முதல்வர்கள்

  • 1875–1876 ஜேம்ஸ் கத்ரி டேவிட்சன் (1837–1891)
  • 1876–1882 வில்லியம் புளூம்பீல்ட் டக்ளஸ் (1822–1906)
  • 1882–1884 பிராங்க் சுவெட்டன்காம் (1850–1946)
  • 1884–1888 ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர் (1851–1910)
  • 1889–1892 வில்லியம் எட்வர்ட் மேக்ஸ்வெல் (1846–1897)
  • 1892–1896 வில்லியம் ஊட் திரீச்சர் (1849–1919)
  • 1896–1902 ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர் (2nd time, 1851–1910)
  • 1902–1910 என்றி கான்வே பெல்பீல்ட் (1855–1923)
  • 1910–1913 ரெஜினால்ட் ஜார்ஜ் வாட்சன் (1862–1926)
  • 1913–1919 எட்வர்ட் ஜார்ஜ் பிராட்ரிக் (1864–1929)
  • 1919–1921 ஆர்தர் என்றி லெமன் (1864–1933)
  • 1921–1926 ஓசுவால்ட் பிரான்சிஸ் ஜெரார்ட் இசுடோனர் (1872–1940)
  • 1926–1927 என்றி வாக்ஸ்டாப் தாம்சன் (1874–1941)
  • 1927–1930 ஜேம்ஸ் லோர்னி (1876–1959)
  • 1930–1933 ஜெப்ரி கேட்டர் (1884–1973)
  • 1933–1935 ஜார்ஜ் எர்னஸ்ட் இலண்டன் (1889– 1957)
  • 1935–1937 தியோடர் சாமுவேல் ஆடம்ஸ் (1885–1961)
  • 1937–1939 இசுடான்லி வில்சன் ஜோன்ஸ் (1888–1962)
  • 1939–1941 ஜார்ஜ் மாண்ட்கோமெரி கிட்
  • 1941 நார்மன் ரோல்ஸ்டோன் ஜாரெட் (1889–1982)
Remove ads

பேராக் பிரித்தானிய முதல்வர்கள்

  • 1874–1875 ஜேம்ஸ் பர்ச் (1826–1875)
  • 1876–1877 ஜேம்ஸ் கத்திரி டேவிட்சன்
  • 1877–1889 இயூ லோ (1824–1905)
  • 1889–1896 பிராங்க் சுவெட்டன்காம் (1850–1946)
  • 1896–1902 வில்லியம் திரிச்சர் (1849–1919)
  • 1902–1903 ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர் (1851–1910)
  • 1905–1910 எர்னஸ்ட் உட்போர்ட் பர்ச் (1857–1929)
  • 1910–1912 என்றி கான்வே பெல்பீல்ட் (1855–1923)
  • 1912–1913 வில்லியம் ஜேம்ஸ் பார்க் இயூம் (1866–1952)
  • 1913–1919 ரெஜினோல்ட் ஜார்ஜ் வாட்சன் (1862–1926)
  • 1919–1920 வில்லியம் ஜார்ஜ் மெக்சுவெல் (1871–1959)
  • 1920–1921 வில்லியம் ஜேம்ஸ் பார்க் இயூம் (1866–1952)
  • 1921–1926 சிசில் வில்லியம் சேசு பார் (1871–1943)
  • 1926–1927 ஓசுவால்ட் பிரான்சிஸ் ஜெரார்ட் சுடோனர் (1872–1940)
  • 1927–1929 என்றி வாக்சுடாப் தாம்சன் (1874–1941)
  • 1929–1930 சார்லஸ் வால்டர் எமில்டன் காக்ரேன் (1876–1932)
  • 1931–1932 பெர்ட்ராம் வால்டர் எல்லெஸ் (1877–1963)
  • 1932–1939 செப்ரி எட்மண்ட் கேட்டர் (1884–1973)
  • 1939–1941 மார்கஸ் ரெக்ஸ் (1886–1971)
Remove ads

நெகிரி செம்பிலான் பிரித்தானிய முதல்வர்கள்

  • 1888–1891 மார்ட்டின் லிஸ்டர் (1857–1897)
  • 1891–1894 வில்லியம் பிரான்சிஸ் போர்ன் பால் (1844–1930)
  • 1894–1895 ராபர்ட் நார்மன் பிளாண்ட் (1859–1948)
  • 1895–1897 மார்ட்டின் லிஸ்டர் (1857–1897)
  • 1898–1901 எர்னஸ்ட் ஊட்போர்ட் பர்ச் (1857–1929)
  • 1901–1902 என்றி கான்வே பெல்பீல்ட் (1855–1923)
  • 1902–1903 வால்டர் எகர்டன் (1858–1947)
  • 1904–1910 டக்ளஸ் கிரகாம் கேம்பல் (1867–1918)
  • 1910–1911 ரிச்சர்ட் ஜேம்ஸ் வில்கின்சன் (1867–1941)
  • 1912–1919 ஆர்தர் என்றி லெமன் (1864–1933)
  • 1919–1921 ஜான் ரிச்சர்ட் ஆலிவர் ஆல்ட்வொர்த் (இடைக்காலம்) (1868–1948)
  • 1921–1925 எட்வர்ட் சா ஓஸ் (1871–1946)
  • 1925–1928 எர்னஸ்ட் சார்டெரிசு ஆல்போர்ட் வோல்ப் (1875–1946)
  • 1928–1932 ஜேம்ஸ் வில்லியம் சிம்மன்ஸ் (1877–19XX)
  • 1932–1937 ஜான் ஒயிட்டவுஸ் வார்டு இயூஸ் (1883–1946)
  • 1937–1939 கோர்டன் உலுப்டன் காம் (1885–1965)
  • 1939–1941 ஜான் வின்சென்ட் கௌகில் (1888–1959)
Remove ads

பகாங் பிரித்தானிய முதல்வர்கள்

  • 1888–1896 ஜான் பிக்கர்ஸ்கில் ரோட்ஜர் (1851–1910)
  • 1896–1900 இயூ கிளிபர்ட் (1866–1941)
  • 1900–1901 ஆர்தர் பட்லர் (18XX–1901)
  • 1901–டி. எச். வைஸ் (இடைக்காலம்)
  • 1901–1903 இயூ கிளிபர்ட் (1866–1941)
  • 1905–1908 செசில் ரே
  • 1908–1909 ஆர்வி செவாலியர் (இடைக்காலம்)
  • 1909–1910 எட்வர்ட் லூயிஸ் புரோக்மேன் (1865–1943)
  • 1910–1911 வாரன் டெலாபெரே பார்ன்ஸ் (1865–1911)
  • 1911–1917 எட்வர்ட் ஜான் புரூஸ்டர் (1861–1931)
  • 1917–1921 சிசில் வில்லியம் சேஸ் பார் (1871–1943)
  • 1921–1923 எப். ஏ. எஸ். மெக்லலாண்ட் (இடைக்காலம்) (1873–1947)
  • 1923–1925 என்றி வாக்ஸ்டாப் தாம்சன் (1874–1941)
  • 1926–1928 ஆர்தர் பர்லி ஓர்திங்டன் (1874–1964)
  • 1928–1930 சி. எப். ஜே. கிரீன்
  • 1930–1935 அக் குட்வின் ரசல் இலியோனார்ட் (1880–19XX)
  • 1935–1941 சி. சி. பிரவுன்
Remove ads

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் நிர்வாகப் பிரிவுகள்

Thumb
1939-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் நிர்வாகப் பிரிவுகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

குறிப்புகள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads