மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தவர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தவர்கள் (ஆங்கிலம்: Ethnic Indians in the Cabinet of Malaysia; மலாய்: Etnik India dalam Kabinet Malaysia) என்பது 1955-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை மலேசிய அமைச்சரவைகளில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்கள்; துணை அமைச்சர்களைக் குறிப்பிடுவதாகும்.
மலாயா விடுதலை அடைவதற்கு முன்பு இருந்தே மலேசிய இந்தியர்கள், கடந்த 68 ஆண்டுகளாக மலேசிய அமைச்சரவையில் பணியாற்றியுள்ளனர். இது வரையிலும் 11 முழு அமைச்சர்கள்; 22 துணை அமைச்சர்கள் சேவை செய்து உள்ளனர்.
Remove ads
பொது
மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பதவி வகித்தவர்களில் துன் சாமிவேலு (Tun Samy Vellu) அவர்களும் ஒருவர். அவர் 1979 முதல் 2008 வரை மலேசிய பொதுப் பணி மற்றும் பயன்பாட்டு அமைச்சராக பதவி வகித்தார். அவர் அமைச்சரவையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான உள்கட்டமைப்புக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.[1]
மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தைச் சார்ந்தவர்களில் கோவிந்த் சிங் தியோ (Gobind Singh Deo) என்பவர் மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சர் ஆவார்.[2][3][4]
Remove ads
அமைச்சர்கள் பட்டியல்
மலேசிய அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பணியாற்றிய இந்திய இனத்தவர்களின் முழுப் பட்டியலில் கடந்த காலத்தில் பணியாற்றியவர்கள்; மற்றும் தற்போது தொடர்ந்து பணியாற்றி வரும் இந்திய இனத்தவர் அடங்குவர்.[5][6][7][8][9][10][11][12][13]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads