மகாதீர் ஏழாம் அமைச்சரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாதீர் ஏழாம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 20-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Malaysia 2018; ஆங்கிலம்: Seventh Mahathir Cabinet; சீனம்: 第七次马哈迪内阁); என்பது முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) தலைமையிலான மலேசியாவின் 20-ஆவது அமைச்சரவை ஆகும். மலேசியாவின் 7-ஆவது பிரதமராக மகாதீர் பின் முகமது நியமிக்கப்பட்ட பின்னர், 2018 மே மாதம் 10-ஆம் தேதி, இந்த 20-ஆவது அமைச்சரவை (20th Cabinet of Malaysia) அறிவிக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்ற பின்னர், மலேசியாவில் ஓர் அரசாங்கத்தை அமைக்கும்படி மலேசியப் பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகமது (Sultan Muhammad V) கேட்டுக் கொண்டதற்கு இணங்க மகாதீர் பின் முகமது புதிய அமைச்சரவையை அமைத்தார்.
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் மகாதீர் பின் முகமது இந்த 20-ஆவது அமைச்சரவையை அமைத்தார்.[1]
Remove ads
பொது
தொடக்கத்தில், மகாதீர் முகமதுவின் அமைச்சரவையானது பாக்காத்தான் அரப்பான் கட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் 10 முக்கிய அமைச்சுகளைக் கொண்டதாக இருக்கும் என்று மகாதீர் முகமது அறிவித்தார்.[2]
- பெர்சத்து (Malaysian United Indigenous Party) BERSATU
- பி.கே.ஆர் (People's Justice Party Malaysia) PKR
- ஜசெக (Democratic Action Party) DAP
- அமாணா (National Trust Party Malaysia) AMANAH
ஒரு பெரிய அமைச்சரவை என்பதை விட ஒரு சிறிய அமைச்சரவையாக அமையும் என்று பரிந்துரைத்தார்.[3][4]
பின்னர், 2018 மே மாதம் 21-ஆம் தேதி, அந்த அமைச்சரவை மேலும் கூடுதலாக 13 அமைச்சுகளால் விரிவடைந்தது. 2 ஜூலை 2018 சூலை 2-ஆம் தேதி, 13 அமைச்சர்கள் மற்றும் 23 துணை அமைச்சர்கள் பதவியேற்றனர்.[5]
24 பிப்ரவரி 2020-இல் மகாதீரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாக்காத்தான் அரப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடையும் வரையில் மகாதீர் முகமதுவின் ஏழாம் அமைச்சரவை 28 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக இருந்தது.[6][7]
Remove ads
அமைவு
கட்சி வாரியாக அமைச்சர்கள்
பி.கே.ஆர் (7) ஜசெக (6) பெர்சத்து (6) அமாணா (5) வாரிசான் (3) எம்ஏபி (1)
அமைச்சர்கள்
Remove ads
துணை அமைச்சர்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads