மலேசிய ஒப்பந்தம்

மலேசியா எனும் கூட்டமைப்பை உருவாக்க செய்து கொண்ட ஒப்பந்தம் From Wikipedia, the free encyclopedia

மலேசிய ஒப்பந்தம்
Remove ads

மலேசிய ஒப்பந்தம் (ஆங்கிலம்: Malaysia Agreement (MA63); மலாய்: Perjanjian Malaysia சீனம்: 马来西亚协定) என்பது ஐக்கிய இராச்சியம் (United Kingdom of Great Britain), வடக்கு அயர்லாந்து (Northern Ireland), மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya), வடக்கு போர்னியோ (North Borneo), சரவாக் (Sarawak) மற்றும் சிங்கப்பூர் (Singapore) ஆகிய நிலப்பகுதிகள்; மலேசியா எனும் ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கு செய்து கொண்ட ஓர் ஒப்பந்தமாகும்.[3]

விரைவான உண்மைகள் ஐக்கிய இராச்சியம், வடக்கு அயர்லாந்து, மலாயா கூட்டமைப்பு, வடக்கு போர்னியோ, சரவாக், சிங்கப்பூர் நிலப் பகுதிகளுக்கு இடையே மலேசியா தொடர்பான ஒப்பந்தம், வரைவு ...

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo); பிரித்தானிய சரவாக் முடியாட்சி (Crown Colony of Sarawak); சிங்கப்பூர் காலனி (Colony of Singapore); மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) ஆகிய நிலப்பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன. அந்த ஒன்றிணைப்பின் மூலமாக மலேசியா (Malaysia) எனும் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.[4][5]

Remove ads

பொது

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்பது மலேசியா (Malaysia) என்று 1963 செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி புதிய பெயரைப் பெற்றது.[6]

மலேசியாவின் ஒரு மாநிலமாக இருந்த சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து 1965 ஆகத்து மாதம் 9-ஆம் தேதி வெளியேற்றப் பட்டது. பின்னர் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடாக அறிவித்தது.[7]

பின்னணி

1946-ஆம் ஆண்டில், மலாயா ஒன்றியம் எனும் மலாயன் யூனியன் பிரித்தானிய மலாயாவால் (British Malaya). நிறுவப்பட்டது. இந்த ஒன்றியத்தில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) (FMS):[8]

  1. சிலாங்கூர்
  2. பேராக்
  3. நெகிரி செம்பிலான்
  4. பகாங்

மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் (Unfederated Malay States):

  1. ஜொகூர்
  2. கெடா
  3. கிளாந்தான்
  4. பெர்லிஸ்
  5. திராங்கானு
  1. மலாக்கா
  2. பினாங்கு
  3. சிங்கப்பூர்

மேற்காணும் மாநிலங்களை இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் மலாயா ஒன்றியம் உருவானது. ஐக்கிய இராச்சியம் மற்றும் மலாயா ஒன்றியம் இடையிலான தொடர் ஒப்பந்தங்களின் மூலம் 1946 ஏப்ரல் 1-ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

சிங்கப்பூர் முடியாட்சி காலனி

அதன் ஆளுநராக சர் எட்வர்டு ஜென்ட் (Sir Edward Gent) என்பவர் பதவி ஏற்றுக் கொண்டார். மலாயா ஒன்றியத்தின் தலைநகரம் கோலாலம்பூர் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1 பிப்ரவரி 1948-இல் மலாயா ஒன்றியம் கலைக்கப்பட்டு, மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்று மாற்றம் கண்டது.

முன்னாள் நீரிணைக் குடியேற்ற மாநிலங்களில் ஒன்றான சிங்கப்பூர் தனி ஒரு முடியாட்சிக் காலனி (Crown Colony of Singapore) என்றும் அறிவிக்கப்பட்டது.[9]

மலேசிய சட்டம் 1963

ஐக்கிய இராச்சியம் மற்றும் மலாயா கூட்டமைப்பு ஆகிய இரு தரப்புகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட மலேசிய ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூர், சரவாக் மற்றும் வடக்கு போர்னியோ (இப்போது சபா) மீதான இறையாண்மைக் கட்டுப்பாட்டை கைவிட ஐக்கிய இராச்சியம் ஒரு சட்டத்தை இயற்றும் என்று அறிவிக்கப்பட்டது.[10]

மலேசிய சட்டம் 1963, சரத்து 1(1) (Malaysia Act 1963, Clause 1(1) இயற்றப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. 31 ஆகத்து 1957-இல் மலாயா சுதந்திரம் அடைந்தது. அன்றைய நாள், ஐக்கிய இராச்சியத்தின் இறையாண்மையும் அதிகார வரம்பும் கைவிடப்பட்டன.[5]

Remove ads

மலேசிய அரசியலமைப்பு

மலேசிய அரசியலமைப்பு (Constitution of Malaysia) என்பது மலேசியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். 1957-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 183 சட்டப் பிரிவுக் கூறுகளைக் கொண்டுள்ளது.[11] மலேசிய அரசியலமைப்பு என்பது ஓர் உச்சக்கட்ட சட்ட ஆவணமாகும்.

  1. மலாயா ஒப்பந்தம் 1948
  2. சுதந்திர அரசியலமைப்பு 1957

ஆகிய இரண்டு ஆவணங்களும் ஏற்கனவே மலாயாவில் உருவாக்கப்பட்ட சட்ட ஆவணங்களாகும். மேலே குறிப்பிடப்பட்ட முந்தைய சட்ட ஆவணங்களைச் சார்ந்த நிலையில் தான் புதிய மலேசிய அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்று அழைக்கப்பட்டது. சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயா மாநிலங்கள், கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இணைந்த போது, மலேசியா எனும் பெயர் உருவானது.[12]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads