மாரான் மாவட்டம்

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மாரான் மாவட்டம்map
Remove ads

மாரான் மாவட்டம் (ஆங்கிலம்: Maran District; மலாய்: Daerah Maran; சீனம்: 马兰县; ஜாவி: مارن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் மாரான்.

விரைவான உண்மைகள் மாரான் மாவட்டம், நாடு ...

முன்பு மாரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரா மாவட்டம் 1981-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.[1]

Remove ads

பொது

இந்த மாவட்டம் பகாங் மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதைச் சுற்றி குவாந்தான் மாவட்டம், பெக்கான் மாவட்டம், ரொம்பின் மாவட்டம், பெரா மாவட்டம், தெமர்லோ மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

முன்பு மாரான் மாவட்டம், பெக்கான் மாவட்டத்தின் கீழ் ஒரு நகராண்மைக் கழகமாக இருந்தது.[2]

1981 ஜனவரி மாதம்; மாரான் நகரம், தெமர்லோ மாவட்டத்தின் புக்கிட் செகும்பல் (Mukim Bukit Segumpal), செனோர் (Chenor), கெர்த்தாவ் (Kertau) ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு புதிய மாரான் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

Remove ads

நிர்வாகப் பிரிவுகள்

மாரான் மாவட்டத்தில் நான்கு முக்கிம்கள் உள்ளன:

  • புக்கிட் செகும்பால் - Bukit Segumpal
  • செனோர் - Chenor
  • கெர்த்தாவ் - Kertau
  • லூயிட் - Luit

மக்கள்தொகையியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

மேலதிகத் தகவல்கள் மாரான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இனம் ...

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads