மிளகாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிளகாய் (Capsicum) என்பது காய்கறிகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறாக அழைக்கப்படுகிறது. பச்சை மிளகாய், மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.[3] பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
Remove ads
கார அளவுகள்
உலகெங்கிலும் மிளகாய்களை வகைப்படுத்த சுகோவில் அளவு (Scoville Units) எனப்படும் முறையே பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
இனிப்பு மிளகாய்
இனிப்பு வகை மிளகாய்களின் காரத் தன்மை 0 முதல் 1000 சுகோவில் அளவு வரை இருக்கும். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய் மற்றும் செர்ரி மிளகாய் ஆகியவை இனிப்பு வகையை சார்ந்தவை.
மிதமான கார மிளகாய்
மிதமான கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 1000 முதல் 3000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா மற்றும் கஸ்காபெல் ஆகியவை மிதமான கார வகையை சார்ந்தவை.
இடைப்பட்ட கார மிளகாய்
இடைப்பட்ட கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 3000 முதல் 6000 சுகோவில் அளவு வரை இருக்கும். அலபீனோ மற்றும் மியாசால் ஆகியவை இடைப்பட்ட கார வகையைச் சார்ந்தவை.
கார மிளகாய்
கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 5000 முதல் 100,000 சுகோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை கார வகையைச் சார்ந்தவை.
அதீத கார மிளகாய்
அதீத கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 80,000 முதல் 300,000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு ஆகியவை அதீத கார வகையை சார்ந்தவை.
Remove ads
ஊட்டச்சத்து விவரம்
சிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் வைட்டமின் சியும் சிறிய அளவிளான கரோடீன் (carotene – provitamin A) பொருளும் உள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள மிளகாயில் இரண்டுமே குறைந்த அளவில் உள்ளது.
Remove ads
படத்தொகுப்பு
பல வேறுபட்ட மிளகாய் வகைகள் உள்ளன. மிளகாய்த் தாவரத்தின் காய்களே பயன்படுபவை. அந்தக் காய்கள் நீளமானவை, குறிகியவை, அகன்றவை, ஒடுங்கியவை, வட்டமனவை என பல்வேறு வடிவங்களில் இருப்பதுடன், காரத் தன்மையிலும் வேறுபடுகின்றன.
- காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
- காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
- காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
- செடியிலேயே இருக்கும் பழுத்த மிளகாய்
- பெரிய மிளகாய்கள்
- வட்ட வடிவமான சிவப்பு மிளகாய்கள்
- காய்ந்த மிளகாய் (செத்தல் மிளகாய்)
- பறித்து வைக்கப்பட்டிருக்கும் பழுக்காத (பச்சை), பழுத்த (சிவப்பு) மிளகாய்கள்
- அலங்காரமாக வளர்க்கப்படும் மிளகாய்ச்செடி
- மிளகாய்ச்செடி
- மிளகாயில் செய்யப்பட்ட பஜ்ஜி எனப்படும் உணவு
- மிளகாய்ப்பொடி இட்டு செய்யப்படும் காரம் கூடிய நண்டு உணவு
- மிளகாய் வற்றல்
- மிளகாய்ச் செடியின் பூ
- மிளகாய்
வகைகள்
- குடை மிளகாய்
- பிமென்டோ மிளகாய்
- ரெல்லானோ மிளகாய்
- இனிப்பு பனானா மிளகாய்
- பொப்பிலானோ/ஆன்சோ மிளகாய்
- பெர்முடா கார மிளகாய்
- ஆர்டேகா மிளகாய்
- பப்பிரிகா மிளகாய்
- கார பனானா மிளகாய்
- ரோகோடில்லோ மிளகாய்
- அலபீனோ மிளகாய்
- கயன் மிளகாய்
- டபாஸ்கோ மிளகாய்
- செர்ரானோ மிளகாய்
- சில்டிபின் மிளகாய்
- ஆபெர்னரோ மிளகாய்
- ரொகோடோ மிளகாய்
- தாய்லாந்து மிளகாய்
இந்திய வகைகள்
- சன்னம் மிளகாய்
- LC 334 மிளகாய்
- படகி மிளகாய்
- அதிசய கார மிளகாய்
- ஜுவலா மிளகாய்
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads