முடிவல்ல ஆரம்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முடிவல்ல ஆரம்பம் (Mudivalla Arambam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். மொகைதீன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமாகும்.[1] இதில் ராஜேஷ், ஜோதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Remove ads
கதைச் சுருக்கம்
ஒரு மலையோரக் கிராமத்தில் சாலையோரம் தேனீர்கடை நடத்தும் பெண்ணின் மகள் ராதா, பத்தாவதுவரை படித்தவள். கிட்டத்தட்ட பதினாறு வயதினிலே மயிலு போன்றவள். கண்ணையா, என்னும் சரக்குந்து ஓட்டுநர். செல்லும் வழியில் அடிக்கடி தேனீர்கடைக்கு வந்து செல்கிறவன். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். திருமணத்திற்கு முன்னரே இருவரும் உடலால் ஒன்று சேர்ந்துவிடுகின்றனர். இதனால் ராதா கர்ப்பமாகிவிடுகிறாள். திருமண நாள் தேதி குறித்துவிடுகிறார்கள். அதற்கு முன் தினம் இரவு தொழில் நிமித்தமாகச் சென்ற கண்ணையா திரும்பிவரவில்லை.
திருமணம் ஆகாமலேயே ராதா, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையை கருணை இல்லம் ஒன்றின் வாசலில், யாருமறியாத வகையில் விட்டுவிடுகிறாள், பின் தன் பெயரை சீதா எனச் சொல்லி அதே கருணை இல்லத்தில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறாள். அவளது குழந்தை ஜான் என்னும் பெயரிலேயே இங்கே வளர்கிறது. ராம் என்னும் மருத்துவருக்கு சீதா மீது காதல் அரும்புகிறது. ஒரு கட்டத்தில் சீதாவும் ஜானும் தாயும் மகனும் என்பது அனைவருக்கும் தெரியவந்து விடுகிறது. அதன் பின்னர், ராமுக்கும் சீதாவுக்கும் திருமணம் என்னும் சூழலில் ஒரு விபத்தில் கண் பார்வை பறிபோன நிலையில் கண்ணையா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்ணையாவின் கண் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சையை ராம் மேற்கொள்கிறார். கண்ணையாவின் பார்வை திரும்பியதா, சீதா கண்ணையாவுடன் சேர்ந்துவிட்டாளா இல்லை ராமுக்கும் அவளுக்கும் திருமணமா என்பதே இறுதிக் காட்சி.
Remove ads
நடிகர்கள்
- ராஜேஷ் - கண்ணையா, லாரி ஓட்டுநர்.
- ஜோதி - ராதா. டீ கடைக்காரர் பெண். கண்ணையாவின் காதலி.
- ரகுவரன்
- சரத் பாபு - மருத்துவர்.
- கல்லாப்பெட்டி சிங்காரம் - நோயாளி
- ரகுராமன் (ஜூனியர் பாலையா)
- குமரிமுத்து - லாரி ஓட்டுநர்.
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப் - லாரி ஓட்டுநர் கண்ணையாவின் உதவியாளர்
- வீரராகவன் - பாதர்
- இடிச்சபுள்ளி செல்வராஜ்
- சூரியகாந்த் விண்டோ - லோகு, நாயகி ராதாவை ஒரு தலையாக விரும்பும் நபர்
- மாஸ்டர் சுரேஷ்
- சதீஷ் ஸ்ரீ
- எஸ் என் பார்வதி
- சாந்தி
Remove ads
திரை குழு
- கதை சரண்தாஸ் ஷோக்
- பாடல்கள் - வைரமுத்து கங்கை அமரன் ரவி
- பாடியவர்கள் - பி சுசிலா சைலஜா ஜெயச்சந்திரன் மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் ரமேஷ் தீபன் சக்கரவர்த்தி கிருஷ்ண சந்தர் சாய்பாபா,சசிரேகா
- கலை பி சாய் குமார்
- நடனம் பாபு
- படத்தொகுப்பு வி ராஜகோபால்
- ஒளிப்பதிவு -ஆர். எம். ரமேஷ்
பாடல்கள்
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்களுக்கான பாடல் வரிகள் வைரமுத்து, கங்கை அமரன் மற்றும் ரவி ஆகியோரும் எழுதியுள்ளனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads