சூரியகாந்த்
தமிழ் நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரியகாந்த் (Suryakanth) என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இதுவரை 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், பல எதிர்மறை, நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, மண்வாசனை, கிழக்குச் சீமையிலே போன்ற குறிப்பிடத்தக்க பல படங்களில் நடித்துள்ளார். இவர் 1981 இல் வெளிவந்த எம். ஏ. கஜாவின் வசந்த காலம் படத்தில் அறிமுகமானார்.[1]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
சூர்யகாந்தின் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் பக்கிரி ஆகும். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, குலதெய்வம் ராஜகோபால் நடித்த ஒரு படத்தின் பாடல் காட்சிகள் பூண்டி அணை பகுதியில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பைக் கண்ட பிறகு. இவர் படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார். இவர் இளங்கலை படிக்க கல்லூரியில் இணைந்தார், ஆனால் படிப்பை முதல் ஆண்டு தொடர இயலவில்லை. துவக்க காலத்தில் போலி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தார். அவர்களினால் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமார்ந்தார். இவரின் தற்போதைய பெயரை இவருக்கு இட்டவர் மறைந்த சாண்டோ எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆவார். ரஜினிகாந் நடித்த தாய் மீது சத்தியம் படத்தின் படப்பிடிப்பின் போது சின்னனப்பபா தேவரை இவர் சந்தித்துள்ளார். தேவர் இவரின் பெயர் கேட்டபோது. சூரிய பிரசாத் என்று கூறினார். தேவர் அது தெலுங்கு பெயரைப் போல உள்ளதாக கூறி சூரிய பிரசாத் பெயரை சூரியகாந்த் என்று மாற்றினார்.[2]
Remove ads
திரைப்பட வாழ்க்கை
துவக்கத்தில் இவர் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடினார். தூறல் நின்னு போச்சு படத்தில் நடிக்க இயக்குநர் பாக்யராஜ் இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கினார். இவர் படத்தில் ஒரு அமைதியான எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். திரைப்படம் வெளியான பிறகு விமர்சகர்களிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் பெரும் பாராட்டைப் பெற்றது. பின்னர், பாக்யராஜ் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக தனது பெரும்பாலான படங்களில் வாய்ப்பு அளித்தார்.[3]
Remove ads
திரைப்படவியல்
இது ஒரு பகுதி திரைப்படவியலாகும். நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1980 கள்
1990 கள்
2000 கள்
2010 கள்
Remove ads
தொலைக்காட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads