மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (Moovendar Munnetra Kazhagam) முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். மூ. மு. க. என்று சுருக்கமாக இக்கட்சி அறியப்படுகிறது. முக்குலத்தினர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின், தற்போதைய தலைவராக ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார்.[1]
2011 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.[2] பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.[3]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads