வட்டுக்கோட்டை குருமடம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

9.7293°N 79.9479°E / 9.7293; 79.9479 வட்டுக்கோட்டை குருமடம் (Batticotta Seminary, பட்டிக்கோட்டா செமினறி) என்பது பிரித்தானிய இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்ற ஊரில் 1823 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இது அமெரிக்க இலங்கை மிசனினால் ஆரம்பிக்கப்பட்டது. இது 1855 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. சர் எமெர்சன் டெனன்ட் என்பவரின் பார்வையில் இக்கல்வி நிறுவனம் பல ஐரோப்பியக் கல்வி நிறுவனங்களின் தரத்துடன் ஒப்பிடக் கூடியதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இக்குருமடம் மூடப்பட்டது. பட்டிக்கோட்டா குருமடத்தின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல்[1] இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.[2]

Remove ads

பழைய மாணவர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads