வாம்பைர்

From Wikipedia, the free encyclopedia

வாம்பைர்
Remove ads

வாம்பைர் (ரத்த காட்டேரி) என்பது மேற்குலக தொன்மவியல் நாட்டார் கதைகளில் இடம்பெறும் மனித இரத்தை உறிஞ்சி குடிக்கும் ஒரு அகறினைகள் ஆகும். ஒரு கதையின் படி இவை இறந்து மனிதர்களே எதோ ஒரு காரணத்தால் வாம்பைர் ஆக மாறுகின்றன. இவை வௌவால்கள் போல இரவிலேயே இரை தேடி நடமாடும். இவை புராணம் அல்லது கிராமியப் புனை கதைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவை உயிருடன் இருக்கும் ஜீவராசிகளை, அல்லது இறக்காத அல்லது உயிருடன் வாழும் மனிதகளை அவர்களின் இரத்தம் குடித்து தங்கள் பசியாற்றி ஜீவித்திருப்பவை.[1][2][3][4][5][6]

Thumb
தி வாம்பயர் பை ஃபிலிப் ஃபர்ன் ஜோன்ஸ், 1897.

இந்த வாம்பயர்கள் தாங்கள் மிகவும் விரும்புகிற மனிதர்களை அடிக்கடி சந்திக்கும் என்றும், தாங்கள் உயிருடன் இருந்த போது வாழ்ந்த இடங்களுக்குச் சென்று அங்கு தொல்லைகளை உருவாக்கி, சாவுகளையும் உண்டாக்கும் என்றும் கிராமியப் புனைக் கதைகளில் சித்தரிக்கப்படுகின்றன. இவை ஒரு பெரிய துணியைப் போர்த்திக் கொண்டு, சிவந்த அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதாக அடிக்கடி விவரிக்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஆரம்பித்த நவீன புனைகதைகளில் வாம்பயர்களின் உருவம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் பெற்று அவை ஒல்லியாகவும், வெளிறிய உருவுடனும் சித்தரிக்கப்பட்டன. வாம்பயர்கள் இருப்பதாக பல கலாசாரங்களிலும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், "மனிதன் எத்தனை பழமையானவனோ அத்தனை பழமையானவை வாம்பயர்களும்" என்று இலக்கிய சரித்திர நூலாசிரியர் பிரியன் ஃப்ராஸ்டின் கூற்று இருந்தாலும், அதன்படி இது "[7] சரித்திர காலத்திற்கு முந்தையதாக" இருந்தாலும், 18ஆம் நூற்றாண்டு வரை வாம்பயர் என்ற சொல் அத்தனை பிரபலமாக இல்லை. 18ஆம் நூற்றாண்டில் வாம்பயர்களைப் பற்றிய மூட நம்பிக்கைகள் மேற்கு ஐரோப்பாவிற்குள் வாம்பயர்களைப் பற்றிய கதைகள் அதிகம் புழங்கிய இடங்களான பால்கன்ஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பா[8] ஆகிய இடங்களிலிருந்து வெள்ளமெனக் கிளம்பி வந்தன. உள்ளுர் வாம்பயர்கள் வேறு வேறு பெயர்களால அறியப்பட்டன. செர்பியா மற்றும் பல்கேரியாவில் வாம்பிர் (вампир) என்றும், கிரேக்க நாட்டில் ரைகோலாகஸ் என்றும், ரொமேனியாவில் ஸ்ட்ரிகோய் என்றும் வழங்கப்பட்டன. ஐரோப்பாவில் வாம்பயர்கள் பற்றிய மூட நம்பிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, பொது மக்களிடத்தில் பெரும் அச்சவெறி உண்டாயிற்று. . இதன் விளைவு பல இடங்களில் சடலங்களைக் கொளுத்துவதிலும், மக்களில் பலர் வாம்பயர்கள் என்று குற்றம் சுமத்தப்படுவதிலுமாக முடிந்தது.

நவீன புனைகதைகளின் கவர்ச்சியான, ஆடம்பரமான வாம்பயர் 1819ஆம் வருடம் ஜான் போலிடோரி எழுதிய தி வாம்பயர் என்னும் நாவலின் பிரசுரித்தின்போதுதான் பிறந்தது. இந்தப் புனை கதை மிகப் பெரும் வெற்றி பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாதிடும் அளவு மிகுந்த பாதிப்பை உண்டாக்கிய வாம்பயர் நூலாகவும் இருந்தது.[9] இருப்பினும், 1897ஆம் ஆண்டு வெளி வந்த ப்ராம் ஸ்டோக்கரின் டிராகுலா தான் வாம்பயர் நாவல்களின் சாராம்சமாகவும், நவீன வாம்பயர் புனைகதைகளுக்கு அடித்தளம் அமைத்ததாகவும் நினைவு கூறப்படுகிறது. டிராகுலா , பண்டைய காலத்திய மனித ஓநாய் பற்றிய புராணக் கதைகளிலிருந்தும், "ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் அச்சங்களை வெளிப்படுத்திய" அதைப்போன்ற கற்பனை வேதாளங்களிலிருந்தும் மற்றும் "விக்டோரியா காலத்திய தலைமையின் பின்னாட்களின் அச்சங்களிலிருந்தும்" உருவாகி "ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் குரலானது".[10]

இந்தப் புத்தகத்தின் வெற்றி வாம்பயர் என்ற ஒரு புதிய கலைப் பிரிவையே உருவாக்கி விட்டது. இது இந்த 21ஆம் நூற்றாண்டிலும் புத்தகங்கள், திரைப்படங்கள், விடியோ விளையாட்டுக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரபலமாக இருக்கிறது. சரித்திர நூலாசிரியர் சுசான் செல்லர்ஸ், தற்போதைய வாம்பயர் புனைகதைகளை "அச்சமான இரவுகளின் மாயத்தோற்றங்களில் ஒரு ஒப்புமை செய்யக் கூடிய பாதுகாப்பு" என்று குறிப்பிடும் அளவிற்கு, பயங்கரக் கதை இனத்தில் வாம்பயர் முன்னணியில் இருக்கிறது.[10]

Remove ads

பெயரின் மூலம்

1745ஆம் வருடம் ஹார்லேயன் மிஸ்சலனி யில் வெளியான டிராவல்ஸ் ஆஃப் திரீ இங்க்லீஷ் ஜெண்டில்மென் என்ற பயணக் கட்டுரையில் வாம்பயர் என்ற சொல் ஆங்கிலத்தில் 1734ஆம் வருடத்தில் முதன் முதலாக அறிமுகமானதாக ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி கூறுகிறது.[11][11] ஜெர்மன் இலக்கியத்தில் வாம்பயர்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டிருந்தன.[12] 1718ல் வடக்கு செர்பியா மற்றும் ஒல்டெனியா ஆகியவ்ற்றை ஆஸ்டிரியா {தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, சடலங்களைத் தோண்டி எடுப்பதும் "வாம்பயர்களைக் கொல்வதும்" உள்ளுர் வழக்கமாக இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.{1/}[23] 1725 முதல் 1732 வரை எழுதப்பட்ட இந்த அறிக்கைகள் மிகப் பெரும் அளவில் விளம்பரம் பெற்றன.[12]

ஆங்கிலச் சொல் (ஒருவேளை ஃபிரஞ்ச் மொழியின் வாம்பைர் வழியாக) ஜெர்மன் சொல்லான வாம்பிர் என்பதிலிருந்து வந்ததாகும். இது செர்பியன் சொல்லான вампир வாம்பிர் என்பதலிருந்து 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தது.[13][14][15][16][17] செர்பியன் சொல், ஏறத்தாழ எல்லா ஸ்லேவிக் மொழிகளிலும் இணையான ஒரு சொல்லைக் கொண்டுள்ளது: அவை பல்கேரியனில் вампир(வாம்பிர் ),செக் அண்ட் ஸ்லொவாக்கில் உபிர் , போலிஷ் வாபியர்ஸ் மற்றும் கிழக்கு ஸ்லேவிக் பாதிப்பில் உபையோர் , யும்ப, யுபையர். உக்ரேனியனில் யும்பிப், (உபிர்) பழங்குடி ரஷ்யாவின் вампир (உபிர்) பெலாருசியன் упыр,(உபிர்) , உக்ரேனியனின் упирь ''(உபிர்)'' <nowiki></nowiki> என்பவையாகும். (இவற்றில் பல மொழிகள் பிற்காலத்தில் மேலை நாடுகளிலிருந்தும் வாம்பிர்/வம்பர்" என்ற சொற்களை கடன் வாங்கியுள்ளன என்பதை குறித்துக் கொள்ளவும்; இவை இந்த சிருஷ்டிக்கு உள்ளுரில் முதன் முதலாக வழங்கப்பட்ட பெயர்களிலிருந்து மாறுபட்டதாகும்) பெயர் வந்த வரலாறு மிகச் சரியாகத் தெரியவில்லை.[18] தற்போது வழங்கப்படும் ப்ரோட்டோ- ஸ்லேவிக் உருவங்கள் *ǫpyrь மற்றும் *ǫpirь.[19] கொஞ்சம் பழமையான, அவ்வளவாக பரவாத ஒரு கருத்து என்ன கூறுகிறதென்றால், ஸ்லேவிக் மொழிகள் இந்தச் சொல்லை டர்கிக் மொழியில் "விச்" (உதா: டார்டார், உபிர் ) என்னும் சொல்லில் இருந்து கடன் வாங்கியதாக குறிப்பிடுகிறது.[19][20]

6555(கிபி 1047)காலத்திய பழைய ஆவணம் ஒன்றில்தான் வாம்பயர்களுக்கான பழம் ரஷ்யச் சொல்லான Упирь உபிர் 'முதன் முதலாக பதிவு செய்யப்பட்டதாகப் பொதுவாக நம்பப்படுகிறது.[21] புக் ஆஃப் சாம்ஸ் எழுதிய ஒரு மத குரு நோவாகார்டியன் இளவரசன் விளாடிமிர் யாரோஸ்லேவொவிச்சிற்காக க்ளேகோலிடிக்கிலிருந்து கிரிலிக் மொழியில் அதை மொழி மாற்றம் செய்தபோது அந்த கையெழுத்துப் பிரதியில் அது ஒரு பெயர் முத்திரையாக இருந்தது.[22] அந்த மத குரு தன் பெயர் "உபிர் லிக்கய் " என்று எழுதுகிறார். இதன் பொருள் கிட்டத்தட்ட "பொல்லாத வாம்பயர்" அல்லது "மோசடி வாம்பயர்" என்பதாகும்.[23] கொஞ்சம் விசித்திரமான இந்தப் பெயர், தற்போதிருக்கும் பேகனிஸம் மற்றும் புனை பெயர்களை சொந்தப் பெயர்களாக வைத்துக் கொளவது ஆகியவற்றிற்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது.[24]

மற்றொரு பழம் ரஷ்யன் சொல் 11–13 நூற்றாண்டுகளில் பேகன்களுக்கு (கடவுளை நம்பாதவர்கள்) எதிராக எழுதப்பட்ட "வேர்ட் ஆஃப் செயின்ட் க்ரிகோரய்" என்னும் நூலில் உள்ளது.இதில் பேகன்கள் உபிரி யை வழிபடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.[25][26]

இந்த சொல் உருவானதன் மூலமாக மற்றொரு கோட்பாடு : ஆல்பினியன் சொற்களான டெம்ப (பற்கள்) மற்றும் பையர் (உறிஞ்சுவது)இது பெறப்பட்டது என்பதாகும்.

Remove ads

கிராமப்புற நம்பிக்கைகள்

பல நூற்றாண்டுகளாக வாம்பயர் பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன. உதாரணமாக மெசபடோமியாயர்கள், ஹெப்ரூக்கள், பழம் க்ரீக்குகள் மற்றும் ரோமானியர்கள் ஆகியோர் நவீன வாம்பயர்களுக்கு முன்னோடிகளாகக் கருதப்படும் ஆவிகள் மற்றும் வேதாளம் ஆகியவை பற்றிய கதைகளைக் கொண்டிருந்தார்கள். வாம்பயரைப் போன்ற ஒன்று பழைய நாகரிகங்களில் இருந்ததாகத் தென்பட்டாலும், இன்று நாம் கூறும் வாம்பயருக்கான கிராமியப் புனை கதை கிட்டத்தட்ட 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் கிழக்கு ஐரோப்பாவில்,[8] பல பழங்குடிகளின் வாய்மொழியாக வழங்கிய பழக்க வழக்கங்கள் பதிவு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டபோதுதான் முழுவதுமாக வெளியானது. பொதுவாக வாம்பயர்கள் என்பவை தீயவ்ர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரின் ஆவிகள்தாம். ஆனால், அது ஒரு சடலத்தின் மேலேறிய கெட்ட ஆவியாலும் அல்லது ஒரு வாம்பயரால் கடிபட்டவராலும் கூட உருவாகும். இது போன்ற கட்டுக்கதைகளில் ஏற்பட்ட நம்பிக்கை, பொது மக்களிடையே பெரும் வெறிக் கிளர்ச்சியை ஏற்படுத்தி வாம்பயர்கள் என்று நம்பப்பட்டவர்களை பொது இடங்களில் கொன்று போடுவது வரை கொண்டு சென்று விட்டது.[27]

Remove ads

வர்ணனையும் மற்றும் பொதுவானதாகக் கூறப்படும் குணங்களும்.

ஐரோப்பிய கிராமியக் கதைகளுக்கு பொதுவான தன்மைகள் பல இருந்தாலும், பல கிராமியக் கதைகளிலும் வழங்கும் வாம்பயரை ஒரு குறிப்பிட்ட வர்ணனையால் விளக்குவது கடினம். பொதுவாக வாம்பயர்கள் வீங்கிய தோற்றத்துடன், ரத்தச் சிவப்பாக, பழுப்பு நிறமாக, அல்லது கருமையாகவோ இருப்பதாக அறிவிக்கப்பட்டன; இது வெகு அண்மையில் அவை ரத்தத்தை உறிஞ்சியதால் வந்த நிலையாகக் கொள்ளப்பட்டன். பல நேரங்களில் அவை சவப் பெட்டியில் அல்லது துணியால் மூடப்பட்டு இருக்கும்போது அவற்றின் வாயோரம் மற்றும் மூக்கில் ரத்தம் ஒழுகுவதைப் பார்த்ததாகச் சொல்லப்படுவதுண்டு.[28] அது புதைக்கப்பட்ட நேரத்தில் அணிவிக்கப்பட்டிருந்த லினன் போர்வையில் இருக்கும். கோரைப் பற்கள் என்பது பொதுவான ஒரு குறியாக இல்லாவிடினும், அதன் பற்கள், முடி மற்றும் நகங்கள் கொஞ்சம் வளர்ந்திருக்கும்.[29]

வாம்பயர்களின் உருவாக்கம்

வாம்பயர் என்ற ஒரு பரம்பரை உருவானதற்கு காரணங்கள் கிராமியப் புனை கதைகளில் பலவாறாகவும் வேறுபட்டனவாகவும் உள்ளன. ஸ்லேவிக் மற்றும் சீன பாராம்பரியங்களில், ஒரு சடலத்தின் மீது ஒரு விலங்கு, குறிப்பாக நாய் அல்லது பூனை, தாவிக் குதித்தால், அது இறவாத ஒன்றாக மாறிவிடும் என்று அஞ்சப்பட்டது.[30] கொதிக்கும் நீர் கொண்டு குணமாக்கப்படாத ஒரு காயத்தைக் கொண்டிருந்த உடலும், இந்த ஆபத்திற்கு உள்ளானது. ரஷ்ய கிராமத்துக் கதைகளின்படி, தாங்கள் வாழ்ந்த காலத்தில் சர்ச்சுக்கு எதிராக கலகம் செய்தவ்ர்களும், சூனியக்காரர்களும் வாம்பயர்களானதாக கூறப்பட்டது.[31]

பல கலாசாரங்களில் உள்ள வழக்கங்களும் தங்கள் அன்புக்கு உரியவர் ஒருவர் இறந்த பின் அவர் ஒரு பிசாசாக மாறாமல் தடுப்பதற்காக உருவானவையே. ஒரு சடலத்தைத் தலை கீழாகப் புதைப்பது பரவலாக இருந்தது. அதைப் போலவே , பூதங்கள் அந்த உடலுக்குள் நுழையாமல் அவற்றைத் திருப்தி செய்வதற்கும் என்றும் அல்லது இறந்தவர்களை திருப்திப்படுத்தி அவை சவப்பெட்டியிலிருந்து மீண்டும் எழாத வண்ணம் தடுக்க பூமியின் பொருட்களான அரிவாள், அறுப்புக் கத்தி ஆகியவற்றை சமாதியின் அருகே வைக்கும் பழக்கமும் இருந்தது. இந்த முறைமையானது பாதாளத்தில் இருக்கும் ஸ்டைக்ஸ் நதியைக் கடப்பதற்கு கட்டணம் கொடுப்பதற்காக பிணத்தின் வாயில் ஒபோலுஸ் என்னும் நாணயத்தை வைக்கும் பழம் கிரேக்க வழக்கத்தைப் போன்றது. இருப்பினும், நாணயத்தை பிணத்தின் வாயில் வைப்பது அதனுள் துஷ்ட ஆவிகள் புகாமல் தடுப்பதற்கே என்றும் ஒரு வாதம் இருந்தது. இதன் மூலம் பின்னர் வாம்பயர் பற்றிய புனைகதைகள் தோன்றியிருக்கலாம்.[32] இது ரைகோகோகாஸ் பற்றிய நவீன கிரேக்க கிராமிய புனைகதைகளிலும் தொடர்ந்தது. இதில் சடலத்தின் மேல் மெழுகாலான ஒரு சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் உருவையும், "ஏசு கிருஸ்து வெல்வார்" என்று எழுதப்பட்ட ஒரு பானையையும் வைப்பது அந்த உடல் ஒரு வாம்பயர் ஆகாமல் தடுக்கும் என்று நம்பப்பட்டது.[33] ஐரோப்பாவில், பொதுவாக கடைப்பிடிக்கப்பட்ட மற்ற முறைமைகள், கால் முட்டிகளில் உள்ள நரம்புகளை அறுப்பது, பாப்பி விதைகள், கம்பு போன்ற தானிய வகைகளை அல்லது மணலை வாம்பயர் என்று நம்பபட்டவரின் புதை குழிக்கு அருகே வைப்பது ஆகியவற்றை உள்ளிட்டிருந்தது; இரவு முழுதும் வாம்பயர் அந்த தானியங்களை எண்ணிக் கொண்டிருப்பதிலேயே கழித்து விடும் என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.[34] இதைப் போலவே வாம்பயர் போன்ற ஒன்று ஒரு அரிசி மூட்டையின் அருகில் வந்தால், அது ஒவ்வொரு அரிசியாக எண்ணித்தான் ஆக வேண்டும் என்று சீனக் கதைகள் கூறுகின்றன; இந்தக் கருத்து சூனியக்காரர்கள், மற்றும் தீய, துஷ்ட ஆவிகளைப் பற்றி இந்தியத் துணைக்கண்டத்திலும் மேலும், தென் அமெரிக்காவிலும் வழங்கும் கதைகளிலும் காணப்படுகிறது.[35]

வாம்பயர்களை அடையாளம் கண்டு கொள்வது

ஒரு வாம்பயரை அடையாளம் கண்டு கொள்ள பல விஸ்தாரமான சடங்குகள் செய்யப்பட்டதுண்டு. வாம்பயர்களின் சமாதியைக் கண்டுபிடிக்கும் ஒரு வழி: ஒரு கன்னிப் பையனை ஒரு கன்னிக் குதிரையின் மீதேற்றி இடுகாடு அல்லது சர்ச் மைதானம் ஆகியவற்றின் வழியாகக் கொண்டு செல்வதாகும். கேள்விக்குறிய சமாதிக்கு அருகில் வந்ததும் இது தடஙகலுக்கு உள்ளாகும்.[31] பொதுவாக கருப்புக் குதிரைகள்தாம் தேவைப்பட்டன. ஆனாலும், அல்பேனியாவில் அது வெள்ளைக் குதிரையாக இருக்க வேண்டியிருந்தது.[36] ஒரு சமாதிக்கு மேல் உள்ள தரையில் ஓட்டைகள் இருந்தால், அது அதற்குள் வாம்பயர் இருப்பதற்கான அறிகுறியாகக் கொள்ளப்பட்டது.[37]

வாம்பயர்களாக மாறிவிட்ட சடலங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, கொஞ்சம் கூட சிதையாத நிலைமையிலும், குண்டாகவும் இருப்பதாகப் பொதுவாக வர்ணிக்கப்பட்டன.[38] சில வேளைகளில், சந்தேகத்துக்குரிய கல்லறைகளைத் திறந்தபோது, அதில் இருந்த சடலங்கள் புதிதாகவும், இரையான ஒருவரின் புதிய ரத்தத்தைக் குடித்ததால், அதன் முகம் முழுதும் ரத்தமயமாகவும் இருந்ததாகவும் கிராமத்தார் வர்ணித்ததுண்டு.[38] ஒரு குறிப்பிட்ட பகுதியில் கால் நடைகள், ஆடுகள், உறவினர் மற்றும் சுற்றார் ஆகியோரின் இறப்பு நிகழ்ந்தால், அது அங்கு வாம்பயர் இருப்பதற்கான ஆதாரமாக கொள்ளப்பட்டது. கிராமியப் புனை கதைகளில் வாம்பயர்கள், கூரையில் கல் எறிவது, வீட்டில் இருக்கும் [39] சாமான்களை இடம் மாற்றுவது, தூங்கும் மனிதர்களின் மீதேறி அவர்களை அழுத்துவது போன்ற சின்னச் சின்ன பைசாச நடவடிக்கைகள் மூலமாகவும் தங்கள் இருப்பைக் காட்டின.[40]

பாதுகாப்பு

பூண்டு[41], போன்ற சாதாரணமான அல்லது புனித நீர் போன்ற புனிதப் பொருட்களும் துஷ்ட ஆவிகளை விரட்டும் சக்தி கொண்ட பொருட்களாக வாம்பயர் பற்றிய கிராமியப் புனை கதைகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இந்தப் பொருட்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன: ஒரு காட்டு ரோஜாக் கிளை மற்றும் முட்செடி ஆகியவை வாம்பயர்களுக்குத் தீங்கிழைப்பதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பாவில், ஒரு வீட்டின் கூரையில் கடுகு விதைகளைத் தூவுவது வாம்பயர்களை தூர வைத்திருக்கும் என்று கூறப்பட்டது.[42] மற்ற ஆவியகற்றும் பொருட்கள் புனிதப் பொருட்களாக இருந்தன உதாரணமாக சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் உருவம், ஜபமாலை அல்லது புனித நீர் ஆகியவற்றை உள்ளிட்டன. சர்ச் அல்லது கோயிலின் தரை அல்லது குறுக்கு நெடுக்காக ஒடும் நீர் போன்ற புனிதமாக்கப்பட்டவற்றின் மேல் வாம்பயர்களால் நடக்க முடியாதென்றும் சொல்லப்படுகிறது.[43] பாராம்பரியப்படி ஒரு ஆவியகற்றும் பொருளாக இல்லாவிடினும் கதவை நோக்கி கண்ணாடிகளை வைப்பதும் வாம்பயரை அணுக விடாதிருப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.(சில கலாசாரங்களில் வாம்பயர்களுக்கு பிரதிபலிக்கும் பிம்பம் உண்டு; சில வேளைகளில் அவற்றிற்கு நிழல் கிடையாது. ஒருவேளை இது வாம்பயருக்கு ஆத்மா கிடையாது என்பதனால் இருக்கலாம்).[44] இவ்வாறு கூறப்படுபவை எல்லாம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. இருப்பினும், பிரதிபலிக்கும் பிம்பம், நிழல் இரண்டையும் கொண்டதாக (க்ரீக்கின் ரைகோலோகாஸ்/ டிம்பனியோஸ் ) பிராம் ஸ்டோக்கர் பயன்படுத்திய டிராகுலா , பின்னாட்களில் வந்த கதாசிரியர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் பிரபலமாக இருந்து வந்துள்ளது.[45] ஒரு வீட்டிற்குள் அதன் உரிமையாளர் அழைக்காவிட்டால், வாம்பயரால் நுழைய் முடியாதென்றும் சில நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆயினும், ஒரு முறை அழைக்கப்பட்டு விட்டால், அதன் பிறகு அவை விரும்பும்போதெல்லாம் வந்து போகலாம். கிராமியப் புனைகதைகளின் வாம்பயர்கள் இரவு நேரங்களில் அதிக தாக்கம் கொண்டவையாக இருப்பினும், சூரிய ஒளிக்கு அவை அஞ்சும் நிலைமை கொண்டிருந்ததாகப் பொதுவாகக் கருதப்படவில்லை.[45]

வாம்பயர் என்று சந்தேகிக்கப்பட்டதை அழிக்கும் வழிகள் பல்வேறு பட்டவையாக இருந்தன. மரக்குச்சி ஒன்றால் அதன் இதயத்தில் குத்திக் கொல்வது என்பது, குறிப்பாக தென் ஸ்லேவிக் கலாசாரங்களில் மிகவும் பொதுவாகக் காணப்பட்ட முறையாக இருந்தது.[46] ரஷ்யாவிலும் பால்டிக் மாநிலங்களிலும்[47] , மரத்துக்குப் பதிலாக சாம்பல் தெரிவு செய்யப்பட்டது. செர்பியாவில்[48] முட்செடியும் சைலஷியாவில் ஓக் ம்ரப்பட்டையும் இதற்கு பயன்பட்டன.[49] வாம்பயாராகும் சாத்தியம் கொண்டவை அவற்றின் இதயத்தில் குத்தப்பட்டன. ரஷ்யாவிலும் வடக்கு ஜெர்மனியிலும்[50][51] வாயைக் குறி வைத்தனர்; வடகிழக்கு செர்பியாவில்[52] வயிறு இலக்கானது. மார்பின் தோலை கிழித்தெடுப்பது என்பது வீங்கிப் போன வாம்பயரின் "காற்றைப் பிடுங்குவதற்கு" ஒப்பான ஒரு வழியாக இருந்தது. இது அரிவாள் போன்ற கூரான கருவிகளை சடலங்களுடன் புதைப்பதற்கு சமமான ஒரு காரியமாகும். இதற்குக் காரணம், சடலம் வீங்கி ஒரு பைசாசமாக மாறினால், இவை அதன் தோலைக் கிழித்து விடும் என்பதுதான்.[53] ஜெர்மனியில் தலையை வெட்டுவது என்பது தெரிவு செய்யப்பட்ட ஒர் முறையாக இருந்தது. மேற்கு ஸ்லேவிக் பகுதிகளில், கால்களுக்கு இடையில், பின்புறத்திற்கு பின்னால், அல்லது உடலிலிருந்து தொலைவில் இருக்குமாறு தலையைப் புதைக்கும் வழக்கம் இருந்தது.[46] இது மரணத்திற்குப் பின் தன் உடலைச் சுற்றி வரும் ஆவியை விரைவில் அனுப்பி வைக்கும் ஒரு முறையாக சில கலாசாரங்களில் காணப்பட்டது. மேலும் வாம்பயரின் தலை, உடல், அல்லது உடைகளையும் குச்சியால் தரையோடு தரையாகக் குத்தி அவை மீண்டும் எழும்பாத வண்ணம் செய்யப்பட்டன.

ஜிப்சிக்கள் இறந்த உடலைப் புதைக்கும்பொழுது அதன் இதயப்பகுதியில் எஃகு அல்லது இரும்பு ஊசிகளை நுழைத்தும், வாயிலும், கண்களின் மீதும், விரல்களுக்கு இடையிலும் எஃகுத் துண்டுகளை வைத்தும் புதைத்தனர். சடலத்தின் காலுறையில் ஒரு முட்செடியை வைத்தனர் அல்லது அதன் கால்களுக்கு இடையில் முட்குச்சியை நுழைத்தனர். 16ம் நூற்றாண்டில் வெனிஸ் நகரின் அருகே, வாயில் செங்கல்லை நுழைத்துப் புதைக்கப்பட்ட ஒரு பெண் பிணத்தை 2006ஆம் ஆண்டு கண்டெடுத்த புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் அது வாம்பயரை அழிக்கும் ஒரு சடங்காக இருந்ததாக அறிவிக்கின்றனர்.[54] கொதிக்கும் நீரைக் கல்லறைக்கு மேலே ஊற்றுவது அல்லது முற்றிலுமாக எரித்து விடுவது ஆகியவை மற்ற முறைகளாக இருந்தன. பால்கன் பிரதேசத்தில், ஒரு வாம்பயரை சுட்டு அல்லது நீரில் மூழ்கடித்து அல்லது ஈமச் சடங்குகளை மீண்டும் மீண்டும் செய்வதால், அல்லது புனித நீரை அதன் உடல் மீது தெளிப்பதால், அல்லது பேயோட்டுவதால் அதை அழித்து விட முடியும். ரொமேனியாவில், வாயில் பூண்டு வைக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டு வரை, சவப்பெட்டியை துப்பாக்கியால் துளைப்பது என்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட எடுக்கப்பட்டு வந்தது. இதற்கும் அடங்காதவைகளுக்கு, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, அந்தத் துண்டுகளை எரித்து, நீருடன் கலந்து அதை குடும்பத்தினருக்கு ஒரு நிவாரணமாகக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது. ஜெர்மனியின் சாக்ஸான் பகுதிகளில், வாம்பயர் என்று சந்தேகிக்கப்படுபவரின் வாயில் ஒரு எலுமிச்சை வைக்கப்பட்டது.[55]

Remove ads

பழங்கால நம்பிக்கைகள்

Thumb

ஜான் கோலியரின், லிலித் (1982).]] உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக, அநேகமாக எல்லா கலாசாரங்களிலும், அமானுஷ்ய சக்திகள் உயிருடன் இருப்பவர்களின் ரத்தம் குடிப்பது அல்லது சதையைத் தின்பது போன்ற கதைகள் காணப்படுகின்றன.[56] இன்று நாம் அவற்றை வாம்பயர்களோடு தொடர்புபடுத்துகிறோம். ஆனால், பழங்காலத்தில் வாம்பயர் என்ற சொல் இருக்கவில்லை; ரத்தம் குடிப்பதும் அதைப் போன்ற இதர செயல்களும் ரத்தம் குடித்து சதையைத் தின்னும் ஆவிகள் அல்லது வேதாளங்களின் செயல்களாக கருதப்பட்டன; சாத்தான் கூட வாம்பயர் போலத்தான் கருதப்பட்டது.[57] அநேகமாக ஒவ்வொரு நாடும், ரத்தம் குடிப்பதை ஏதாவது ஒரு வகை பைசாசம் அல்லது வேதாளத்துடன், சில சமயம் ஒரு கடவுளுடன் தொடர்பு படுத்தியே வந்திருக்கின்றன. உதாரணமாக, விக்ரமாதித்ய ராஜா நழுவிச் செல்லும் வேதாளத்தைப் பிடிக்கச் சென்ற இரவு நேர சாகசக்கதைகளைக் கூறும் கதாசரித்சாகரா என்ற பெயர் கொண்ட நூலில் பைதாள் பசிசி என்னும் பிரபலமான கதையில் இந்தியாவின், சவங்களைச் சுற்றும் பிணம் தின்னிப் பிசாசுகளைப் பற்றி காணக் கிடைக்கிறது.[58] பைசாசம் என்னும், தீயவர்கள் அல்லது பைத்தியம் பிடித்து இறந்தவர்கள் ஆகியோரின் ஆவி திரும்பும்போதும் அது வாம்பயரின் குண நலன்களை ஒத்ததாக இருந்திருக்கிறது.[59] இந்தியாவின் பழம் கடவுளான, கோரைப் பற்களும், சவங்கள் அல்லது மண்டையோடுகளாலான மாலையும் அணிந்த காளி என்னும் தெய்வமும் ரத்தம் குடிக்கும் செயலுடன் நெருக்கமாகத் தொடர்பு படுத்தப்படுகிறது.[60] பண்டைக்கால எகிப்தில், செக்மெட் என்னும் பெண் தெய்வம் ரத்தம் குடித்தது.[61]

ரத்தம் குடிக்கும் வேதாளங்களைப் பற்றி முதன் முதலில் கதைகளைப் புனைந்தது ஆரம்ப கால நாகரிகங்களில் ஒன்றான பர்சியாவின் மக்களாவார்கள். தோண்டியெடுக்கப்பட்டிருக்கும் மண்பாண்டங்களின் உடைந்த துண்டுகளில், மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்க முயலும் ஜந்துக்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.[62] பழங்கால பாபிலோனியாவில் இதிகாச லிலிடு[63] வைப் பற்றி இருந்த கதைகள் பின்னாளில் லிலித்தை ஒத்ததாக ஹெப்ரூ வேதாளவியலில் ஹெப்ரூ மற்றும் அவளது மகள் லிலு ஆகியோரைப் படைப்பதாக அமைந்தது. லிலிடு என்பது ஒரு வேதாளமாகவும், அநேக சமயங்களில் குழந்தைகளின் ரத்தததைக் குடித்து வாழ்வதாகவும் சித்தரிக்கப்பட்டது. ஆனால்,அவற்றை ஒத்த யூத ஜந்துக்கள், ஆண், பெண், அப்போதுதான் பிறந்த குழந்தை என அனைவரையும் உண்டு மகிழ்ந்தன.[63]

பண்டைக்கால கிரேக்கத்திலும், ரோமானியர்களின் இதிகாசத்திலும், எம்புசா[64], லமியா[65] மற்றும் ஸ்ட்ரிஜெஸ் பற்றி விவரிக்கப்பட்டது. காலப் போக்கில் முதல் இரண்டும் முறையே சூனியக்காரர்கள் மற்றும் வேதாளங்களைக் குறிக்கும் பொதுச் சொற்களாக மாறின. எம்புசா ஹெகேட் என்னும் கடவுளின் மகளாகவும், வேதாள குணமும், வெண்கலக் காலும் உடையவளாகவும் சித்தரிக்கப்பட்டாள். அவள் இளம் பெண்ணாக உருவெடுத்து, ஆண்களை மயக்கி, அவர்கள் உறங்குகையில், அவர்களின் ரத்தத்தைக் குடித்து விருந்துண்டாள்.[64] லாமியா, இரவு வேளைகளில், இளம் குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போது அவர்களின் குருதியைக் குடித்தது. கெல்லௌடெஸ் அல்லது கெல்லோ என்பதும் இதைத்தான் செய்தது.[65] லாமியாவைப் போல், ' ஸ்ட்ரிஜெஸ்/0} குழந்தைகளை விருந்தாக உண்டது; ஆனால் அது இளம் வாலிபர்களையும் தனக்கு இரையாக்கியது. இவை பொதுவாக காக்கை அல்லது பறவைகளின் உடலைக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டன. பிறகு, அவை ரோமானியர்களின் இதிகாசத்தில் ஸ்ட்ரிக்ஸ் என்னும் மனிதரின் சதை மற்றும் ரத்தம் குடித்து வாழும் ஒரு வகையான இரவுப் பறவையாக உரு மாற்றம் பெற்றன.[66]

Remove ads

இடைக்காலத்திய மற்றும் பிற்கால ஐரோப்பிய கிராமியப் புனைகதைகள்

வாம்பயர்களைப் பற்றிய பல தொன்மங்கள் இடைக்காலத்தில்தான் உருவாயின. 12ஆம் நூற்றாண்டில்,வால்டர் மாப் மற்றும் வில்லியம் ஆஃப் ந்யூபர்க் போன்ற சரித்திர ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆவிகளைப் பற்றி உலவி வந்த கதைகளைப் பதிவு செய்துள்ளனர்.[27][67] ஆயினும், இதற்குப் பிறகு வாம்பயர்களைப் பற்றிய கட்டுக்கதைகளின் பதிவுகள் இன்று வரை, ஆங்கிலத்தில் மிகக் குறைவுதான்.[68] இந்தக் கதைகள் பின்னாளில் 18ஆம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவில் வழங்கப்பட்ட புனைகதைகளைப் போன்றவையே. இவையே பின்னாளில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் நுழைந்து அங்கே மேலும் அலங்காரங்கள் பெற்று பிரபலம் அடைந்தன.

18வது நூற்றாண்டில், கிழக்கு ஐரோப்பாவில் வாம்பயரைப் பார்த்ததாக கூறப்பட்ட செய்திகள் ஜுரம் போலப் பரவின. இது பைசாசங்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களுக்காக அடிக்கடி கல்லறைகள் தோண்டப்படுவதிலும், சடலங்கள் மார்பில் குத்தப்படுவதிலும் முடிந்தது; அரசாங்க அதிகாரிகள் கூட இந்த வாம்பயர் வேட்டையிலும், அவ்ற்றின் மார்பில் குத்துவதிலும் ஈடுபட்டார்கள்.[69] இந்தக் கால கட்டம் ஏஜ் ஆஃப் என்லைட்மெண்ட்(அறிவொளி பெற்ற காலம்) என்று கூறப்பட்டாலும், இந்த கால கட்டத்தில் அநேக கட்டுக்கதைகள் அடக்கப்பட்டாலும், வாம்பயர்கள் பற்றிய நம்பிக்கை மிகவும் அதிகமாக வளர்ந்து கொண்டே செல்லலாயிற்று. இதனால் ஐரோப்பா முழுதும், பொதுமக்களிடையே வெறி போன்றதொரு கிளர்ச்சி உண்டாயிற்று.[27] இந்த அச்ச உணர்வு கிழக்கு ப்ரஷ்யாவில் 1721ஆம் வருடம் வாம்பயர் வேட்டையுடன் தொடங்கி, 1725 முதல் 1734 வரை ஹாப்ஸ்பர்க் முடியாட்சியில் இருந்தது; பிறகு மற்ற பகுதிகளுக்கும் பரவலானது. முதன் முறையாக அதிகார பூர்வமாக வாம்பயர்களைப் பற்றிய இரண்டு பதிவுகள் பீட்டர் ப்லொகோஜோவிட்ஜ் மற்றும் செர்பியாவின் அர்னால்ட் பௌல் ஆகியோரின் சடலங்களைப் பற்றியதாகும். பீட்டர் ப்லொகோஜோவிட்ஜ் தனது 62வது வயதில் இறந்ததாகக் கூறப்பட்டார். ஆனால், இறந்த பிறகு திரும்ப வந்து தன் மகனிடம் உணவு கேட்டாராம். அதற்கு மறுத்த மகன் , மறு நாள் இறந்து காணப்பட்டான். பீட்டர் ப்லொகோஜோவிட்ஜ் மீண்டும் திரும்பி வந்து அக்கம்பக்கத்தினரையும் தாக்கினாராம்; அவர்கள் ரத்த இழப்பால் உயிர் இழந்தனராம்.[69] இரண்டாவது நிகழ்வில், முன்னாள் ராணுவ வீரராக இருந்து விவசாயியாக ஆன பௌல், அவர் பல வருடம் முன்பு வைக்கோல் காய வைக்கும்போது வாம்பயரால் தாக்கப்பட்டாராம். அவர் இறந்த பின் அருகாமையில் இருக்கும் பகுதிகளில் எல்லாம் மக்கள் இறக்கத் தொடங்கினர். பௌல்தான் மீண்டு வந்து தன் அக்கம்பக்கத்தினரை தனக்கு இரையாக்கிக் கொண்டதாக பரவலாக நம்பப்பட்டது.[70] ஒரு நீராலையில் இருந்து கொண்டு ஆலையில் இருந்தவர்களைக் கொன்று அவர்கள் ரத்தம் குடித்த சவா சவானொவிக் பற்றி வாம்பயர்களைப் பற்றிக் கூறும் ஒரு பிரபலமான செர்பியக் கதை உரைக்கிறது. இந்தக் கதைதான் பிற்காலத்தில் செர்பிய எழுத்தாளரான மிலோவன் கிலிசிக் எழுதிய கதையின் புனைப்பாத்திரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. லெப்டிரிகா என்ற 1973ஆம் வருடத்து செர்பிய திகில் திரைப்படத்திற்கும் இதுதான் அடிப்படையானது.

இரண்டு சம்பவங்களும் திறம்படப் பதிவு செய்யப்பட்டுள்ளன: அரசாங்க அதிகாரிகள் சவங்களைத் தோண்டி எடுத்தனர், அறிக்கைகளை எழுதினர், ஐரோப்பா முழுவதிலும் புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டன.[70] "18ஆம் நூற்றாண்டு வாம்பயர் சர்ச்சை" என்று கூறப்படும் ஒரு வெறிக் கிளர்ச்சி, ஒரு தலைமுறைக்கு கொழுந்து விட்டெரிந்தது. கிராமப்புறங்களில் வாம்பயர்களை வேட்டையாடுவதாகக் கூறப்பட்ட கட்டுக்கு மீறிய செயல்களால் பிரச்சினை மிகுதியானது. சந்தேகமில்லாமல், கிராமப்புற மக்களின் மூட நம்பிக்கைகளாலும், உள்ளூர்க்காரர்கள் சவங்களைத் தோண்டியெடுத்து, சில சமயங்களில் அவற்றின் மார்பில் குத்துவதில் ஈடுபட்டதாலும் ஏற்பட்டதுதான் இது. இந்தக் கால கட்டத்தில் பல அறிவு ஜீவிகள் வாம்பயர்கள் இல்லை என்றும் இவற்றிற்கெல்லாம் காரணம் இறப்பதற்கு முன்பே புதைத்து விடுவது மற்றும் ரேபிஸ் நோய்தான் காரணம் என்றும் உரைத்த பொழுதிலும், மூட நம்பிக்கைகள் அதிகரிக்கலாயின. 1746ஆம் வருடம் மிகவும் மதிக்கப்பட்டவரும், ஃபிரெஞ்சு நாட்டு இறைவியலாளரும், அறிவாளியுமான டோம் அகஸ்டின் கால்மெட் ஒரு முழுமையான ஆய்வறிக்கையை அளித்தார். அது வாம்பயர்களின் இருப்பை அறிவிப்பதில் சந்தேகத்திற்கிடமின்றி இருந்தது. கால்மெட், வாம்பயர் சம்பவங்கள் பலவற்றையும் பற்றி அறிக்கைகளைத் திரட்டினார்; வால்டர் போன்ற விமரிசகர் மற்றும் வேதாள ஆராய்ச்சியாளரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அந்த ஆய்வறிக்கை வாம்பயர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதாக கோரினர்.[71] தனது தத்துவ அகராதி யில் வால்டர் எழுதினார்:[72]

These vampires were corpses, who went out of their graves at night to suck the blood of the living, either at their throats or stomachs, after which they returned to their cemeteries. The persons so sucked waned, grew pale, and fell into consumption; while the sucking corpses grew fat, got rosy, and enjoyed an excellent appetite. It was in போலந்து, அங்கேரி, Silesia, Moravia, ஆஸ்திரியா, and Lorraine, that the dead made this good cheer.

ஆஸ்டிரியாவின் அரசியான மரியா தெரசாதனது சொந்த மருத்துவரான ஜெரார்டு வான் ஸ்வைடெனை வாம்பயர்களாகக் கூறப்படுபவர்களைப் பற்றி புலனாய்வதற்காக அனுப்பிய்தும்தான், இந்த சர்ச்சை ஒய்ந்தது. அவர் வாம்பயர்கள் இல்லை என்று முடிவு செய்தார். கல்லறைகளைத் திறப்பதையும், உடல்களைச் சேதப்படுத்துவதையும் தடை செய்து அரசி சட்டங்கள் பிறப்பிக்கவும், வாம்பயர் தொடர்பான வெறிச் செயல்கள் ஒரு முடிவுக்கு வந்தன. இந்தக் கண்டனத்திற்குப் பிறகும், வாம்பயர் கலை வடிவங்களிலும், உள்ளூரில் நிலவும் மூட நம்பிக்கைகளிலும் வாழ்ந்து வந்தது.[71]

ஐரோப்பா அல்லாத இதர பகுதிகளின் நம்பிக்கைகள்

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில், வாம்பயரின் திறன்களோடு உள்ள பைசாசங்களைப் பற்றிப் பல புனைகதைகள் உண்டு. மேற்கு ஆப்பிரிக்காவில், அஷாந்தி மக்கள் இரும்புப் பல் கொண்டு மரத்தில் வாழும் அசன்போசம் [73] பற்றிக் கூறுகிறார்கள். அட்ஜ் பகுதியின் ஈவே மக்கள்நெருப்புப் பூச்சி வடிவெடுத்துக் குழந்தைகளை வேட்டையாடும்[74] என்று சொல்கிறார்கள். கிழக்கு கேப் பகுதியில் அதுவே, இம்புண்டுலு என்னும் பெரிய வாலுடைய பறவையாக மாறி, மின்னலையும், இடியையும் வரவழைக்கும். மடகாஸ்கரின் பெட்டிசிலோ மக்கள் ரமங்கா பற்றிக் கூறுகிறார்கள். இது பிரபுக்களின் ரத்தத்தைக் குடித்து நகத்துண்டுகளைத் தின்று வாழும் நாடுகடத்தப்பட்ட அல்லது ஒரு வாழும் வாம்பயர்.[75]

அமெரிக்க நாடுகள்

பல நம்பிக்கைகள் ஒன்றாகச் சேரும்போது அது எப்படி ஒரு வாம்பயர் பற்றிய நம்பிக்கையாகிறது என்பதற்கு லூகாரு ஒரு உதாரணம். இதோ ஃபிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்க வூடு அல்லது வோடு ஆகியவற்றின் கலவை. லூகாரு என்னும் சொல் ஒரு வேளை லௌ-கரௌ என்னும் ஃபிரெஞ்சு சொல்லிலிருந்து வந்திருக்கலாம் (இதன் பொருள் "ஓநாய் மனிதன்"). இது மொரிஷியஸ் கலாசாரத்தில் மிகவும் பொதுவாகக் காணப்படுவது. இருப்பினும் லூகாரு பற்றிய கதைகள் கரிபியத் தீவுகளிலும், அமெரிக்காவின் லௌசியானாவிலும் பரவலாக இருக்கின்றன.[76] இதைப்போல பெண் பைசாசங்கள் டிரினாட்டின் கிராமியப் புனைவுகளில் சௌகௌயாண்ட் , கொலம்பியாவின், டுண்டா மற்றும் படசோலா ஆகியவையாக உள்ளன. தென் சிலியின் மாபசௌவில் ரத்தத்தை உறிஞ்சும் ப்யூசென் [77] என்னும் பாம்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஒரு கதவுக்கு அருகில் பின்பக்கமாகத் தொங்க விடப்படும் அலோவேரா (சோற்றுக் கத்தாழைச் செடி) வாம்பயரை விரட்டும் சக்தி கொண்டதாக தென் அமெரிக்காவில் மூட நம்பிக்கைகள் உண்டு.[35] ஆஜ்டெக் இதிகாசங்கள் சிஹௌடெடியோ என்னும் எலும்பு முகம் கொண்ட ஆவிகளைப் பற்றி விவரிக்கின்றன. இவை, குழந்தை பிறக்கும்போது இறந்தவர்கள் எலும்பு முகம் கொண்டும், குழந்தைகளைத் திருடுவதாகவும், உயிருடன் இருப்பவர்களுடன் உடலுறவு கொண்டு அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்க வைப்பதாகவும் நம்பிக்கைகள் உண்டு.[31]

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19ஆம் நூற்றாண்டிலும், வாம்பயர்களைப் பற்றிய நம்பிக்கை புதிய இங்கிலாந்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக, ரோட் தீவு, கிழ்க்கு கானெடிகட் ஆகிய பகுதிகளில், பரவலாக இருந்தது. இறந்து போனவர்களை "வாம்பயர்" என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கம் இல்லை என்றாலும், பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் விளைந்த சுகவீனங்களுக்கும், மரணங்களுக்கும் இறந்து போன தங்கள் அன்புக்குரியவர்கள் வாம்பயர்கள் என்றெண்ணி, அவர்களின உடலை தோண்டியெடுத்து இதயத்தை அகற்றியதாக பல பதிவுகள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் "உருக்கு நோய்" என்றறியப்பட்ட காச நோய் என்னும் பயங்கர வியாதி, அந்த நோய் கண்டு இறந்தவர்கள் இரவு வேளைகளில் வருவதாலேயே, குடும்பத்தில் உள்ளோருக்கு ஏற்படுவதாகக் கருதப்பட்டது.[78] 1892ஆம் வருடம் எக்சிடர், ரோட் தீவில் பத்தொன்பதே வயதில் இறந்து போன மெர்சி பிரௌன் வரலாறுதான் சந்தேகத்திற்கிடமான வாம்பயராக அண்மையில் பதிவான, மிகவும் பிரபலமானதாகும். அவள் இறந்ததற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவள் தந்தை தன் குடும்ப மருத்துவரின் உதவியுடன் அவள் கல்லறையிலிருந்து சடலத்தை அகற்றி, அதன் இதயத்தைக் கிழித்து, எரித்துச் சாம்பலாக்கினார்.[79]

ஆசியா

பழம் கட்டுக் கதைகளை வேராகக் கொண்டு வாம்பயர்களைப் பற்றிய நவீன நம்பிக்கைகள் ஆசியாவெங்கும் பரவத் தொடங்கின. ஆசியாவின் பிரதான பகுதிகளில் பிணம் தின்னிப் பிசாசு போன்றவை தொடங்கி, தென் கிழக்குஆசியாவில் வாம்பயர்கள் வரை பல்வேறு உருவங்களில் இவை பரவின. இந்தியாவிலும் வாம்பயர் தொடர்பான கட்டுக் கதைகள் உருவாயின. பூதம் அல்லது பிரேதம் என்பது அல்பாயுசாக இறந்த ஒருவரது ஆத்மாவாகக் கருதப்பட்டது. இது ராத்திரி வேளைகளில் சடலங்களை சுற்றி வந்து அவற்றிற்கு இயக்கத்தைக் கொடுக்கும், பிணம் தின்னிப் பிசாசைப் போலவே, உயிருடன் இருக்கும் மனிதர்களைத் தாககும்.[80] வட இந்தியாவில் வாம்பயரைப் போலவே பிரம்மராக்ஷசன் என்ற அரக்க உருவம் இருந்தது. இதன் தலை குடல்களாலும், ரத்தத்தை ஏந்திக் குடிக்கும் ஒரு மண்டையோட்டாலும் சூழப்பட்டிருந்தது. ஜப்பானிய திரைப்படங்களில், 1950கள் தொடங்கி வாம்பயர்கள் தலைகாட்டத் துவங்கினாலும், அதன் கிராமியப் புனைவுகள் மேற்கத்திய பாதிப்பில் துவங்கியவையே.[81] ந்யூகேகுபி என்பதன் தலை உடலிலிருந்து கழன்று கொண்டு விடும்; இது இரவுகளில் மனித இரை தேடிப் பறந்து செல்லும்.[82]

ஃபிலிப்பைன்ஸ்,மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும், தம் உடல் பாகங்களைக் கழற்றிக் கொள்ளும் வாம்பயர் போன்றவற்றைப் பற்றிய கதைகள் உண்டு. ஃபிலிப்பைன்சில், வாம்பயரை ஒத்த இரண்டு உண்டு: தகலோக் மண்டுருகொ ("ரத்த உறிஞ்சி" ) மற்றும் விசயான் மனனங்கல் ("உடல் பாகங்களைக் கழற்றிக் கொள்வது") மண்டுருகோ என்பது ஆஸ்வாங்கின் ஒரு வேறுபாடு; இது பகல் வேளைகளில் அழகான இளம்பெண்ணின் உருவத்தைக் கொள்ளும்; இரவுகளிலோ, இதற்கு இறக்கைகள் முளைத்து, நீளமான, வெற்றான, நூல் போன்ற நாக்கு நீண்டு விடும். தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட மனிதனின் ரத்தத்தை இந்த நாக்கு உறிஞ்சிக் கொள்ளும். மனனங்கல் என்பது சற்று வயதான, அழகான் பெண். இது இரவு வேளைகளில் தன் உடலின் மேல் பாகததைக் கழற்றி விட்டு விட்டு வௌவால் போன்ற இறக்கைகளுடன், தங்கள் வீட்டில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை தனக்கு இரையாக்கிக் கொள்ளும். இவை யானையின் துதிக்கை போல நீளும் தங்கள் நாக்கைக் கொண்டு, இந்த கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் கருவை உறிஞ்சி விடும். இவை மனிதர்களின் உடற்பாகங்கள் (குறிப்பாக,இதயம், ஈரல் மற்றும் நோயாளிகளின் கபம் ஆகியவறறை விரும்பி உண்ணும்.[83]

மலேசியாவின் பெனங்கலன் அழகான ஒரு இளம் பெண்ணாகவோ அல்லது சற்று வயதான பெண்ணாகவோ காட்சி அளிக்கும் இது மாய வேலைகள் மற்றும் அமானுஷ்ய செயற்களின் மூலம் தனது அழகைப் பெற்றது. இது ஒரு கரும் பைசாசமாகவே புனைகதைகளில் பொதுவாகச் சித்தரிக்கப்படுகிறது. இவளால் நச்சுப் பற்கள் கொண்ட தன் தலையைத் தனியாக அகற்ற முடியும். இரவுகளில் குறிப்பாக கர்ப்பிணிகளின் குருதி தேடி அலைவாள்.[84] மலேஷியர்கள் தங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைச் சுற்றி ஜெருஜு (விஷ்ணு கிரந்தம்) செடிகளை தொங்க விடுவார்கள். இதனால் பெனங்கலன் தன் குடல், செடியின் முட்களில் மாட்டிக் கொண்டு விடும் என்ற அச்சம் காரணமாகத் தங்கள் வீட்டினுள் நுழையாது என்று நம்புகிறார்கள்.

பாலினிக்களின் புனை கதைகளில் வரும் லெயக் என்பதும் இதை ஒத்த ஒன்றுதான்.[85] இந்தோனேசியாவின்[86], குண்டிலனக் அல்லது மடியானக் அல்லது மலேசியா[87] வின் பொண்டியானக் அல்லது லங்க்ஸ்யூர் என்பது மகப்பேறின்போது இறந்து, ஆவியாகப் போய்விட்ட ஒரு பெண். இது கிராமத்தாரைப் பயமுறுத்திப் பழி வாங்குமாம். இவள் நீண்ட கூந்தல் கொண்ட கவர்ச்சியான ஒரு பெண்ணாகத் தோன்றுவாள். அந்தக் கூந்தல் அவள் கழுத்தின் பின்புறம் உள்ள ஒரு ஓட்டையை மறைத்திருக்கும். அந்த ஓட்டை வழியாகத்தான் அவள் குழந்தைளின் ரத்தத்தை உறிஞ்சுவாள். அந்த ஒட்டையை அவளுடைய கூந்தலால் மூடுவது, அவளை விரட்டி விடும்.

ஒரு லங்க்ஸ்யூர் ஆகாமல் இருப்பதற்காக, சவங்களின் வாயில் கண்ணாடி சிறுமணிகளும், கக்கங்களில் முட்டைகளும், உள்ளங்கைகளில் ஊசிகளும் வைக்கபப்ட்டன.[88]

(விரைத்த சடலம் எனப் பொருள்படும்) ஜியாங்க் ஷிஎளிய சீனம்: 僵尸; மரபுவழிச் சீனம்: 僵屍 or 殭屍; பின்யின்: jiāngshīமேற்கத்தியர்களால் சில சமயம் "சீன வாம்பயர்" என்றழைக்கப்படுகிறது. இவை உயிரூட்டப்பட்ட சடலங்களாகும், இவை சுற்றித் திரிந்து உயிருள்ள மனிதர்களைக் கொன்று அவர்களின் ஜீவ சகதியை (க்வி) உறிஞ்சி விடும். ஒரு மனிதனின் ஆத்மா (魄 போ ) அவன் உடலை விட்டுச் செல்லத் தவறிவிடும்போது இது உருவாவதாக கூறப்படுகிறது.[89] சிலர் வாம்பயருடன் ஜியாங்க் ஷி ஒப்பிடப்படுவதை ஒப்புக் கொள்வதில்லை. காரணம், ஜியாங்க் ஷி க்களுக்கு யோசிக்கும் திறனோ, புத்தியோ கிடையாதாம்.[90] இதன் அசாதாரணமான ஒரு அம்சம் வெள்ளை மற்றும் பச்சை நிறம் கலந்த அதன் ரோமத் தோலாகும். இது சடலங்களின் மேல் வளரும் பூஞ்சனம் மற்றும் காளான்களால் உண்டாவது.[91]

Remove ads

நவீன கால நம்பிக்கைகள்.

நவீன புனைகதைகளில் வாம்பயர் ஒரு நளினமான, கவர்ச்சி வில்லனாக சித்தரிக்கபபடுகிறது.[29] பொதுவாக வாம்பயர்கள் பற்றிய மூட நம்பிக்கைகள் அகன்று விட்டாலும், இன்னும் வாம்பயர்களைப் பார்த்ததாகச் சொலவ்து அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக சமூக காரணங்களுக்காகவே பிரதானமாக அமைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் வாம்பயர்களை வேட்டையாடும் சங்கங்கள் இன்னும் இருக்கின்றன.[27] 2002ம் ஆண்டின் இறுதி மற்றும் 2003ம் ஆண்டின் துவக்கத்தில் கூட வாம்பயர்களைத் தாக்குவது பற்றிய புகார்கள் ஆப்பிரிக்க நாட்டின் மலவிபகுதியில் இருந்தன. இதில் ஒரு தனி நபரை ஒரு கும்பல் கற்களால் அடித்துக் கொல்வதும், மேலும், அரசாங்கமே வாம்பயர்களுடன் கைகோர்த்துள்ளது என்ற நம்பிக்கையில் கவர்னர் எரிக் சிவாயா உள்ளிட்ட குறைந்த பட்சம் நான்கு பேரைத் தாக்கிய நிகழ்வும் நடந்தன.[92]

1970களின் துவக்கத்தில் லண்டன் ஹைகேட் சிமெட்ரியில் வாம்பயர்கள் உலவுவதாக உள்ளுர் பத்திரிகைகள் வதந்திகளைக் கிளப்பின. கற்றுக்குட்டி வாம்பயர் வேட்டைக்காரர்கள் அந்த சிமெட்ரிக்குப் படையெடுத்தனர். இதைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றில் முதலில் வெளிவந்தது, ஷான் மான்செஸ்டர் என்னும் உள்ளுர் ஆசாமி எழுதியது. இவ்ர்தான் ஹைகேட் வாம்பயர் இருப்பதாக முதலில் தகவல் சொன்னவர். பின்னாளில் இவர் அந்தப் பகுதியில் ஒரு வாம்பயர் கூட்டத்தையே தான் பேயாட்டி விரட்டி விட்டதாக கூறினார்.[93] 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பகுதியில் ஒருவர் பல பேரைத் தாக்கிக் கடித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஒரு வாம்பயர் தெருக்களில் உலவுகிறதோ என்ற அச்சத்தை இது அதிகரித்தது. ஆனால், அப்படி ஒரு குற்றம் எதுவும் நிகழவில்லை என்றும், இது வெறும் நகர்ப்புற கட்டுக்கதை என்றும் உள்ளூர் காவல் துறையினர் அறிவித்தனர்.[94]

நவீன காலத்தில் வாம்பயர் தொடர்பான நிகழ்ச்சிகளில் மிகவும் குறிப்பிட்டுக் கூறப்பட்ட ஒன்று, ப்யுயர்டோ ரிகோ மற்றும் மெக்சிகோவின் சுபாகாப்ரா ("ஆடு உறிஞ்சி"). இது வீட்டுக் கால் ந்டைகளின் சதை மற்றும் ரத்தத்தை உறிஞ்சுவதாக கூறப்பட்டது. இதுவும் ஒருவிதமான வாம்பயரோ என்று சிலரை எண்ண வைத்து விட்டது. இந்த "சுபாகாப்ரா அச்ச வெறி" 1990களின் இடைக் காலப் பகுதியில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்பட்டது.[95]

வாம்பயர் பற்றிய கட்டுக்கதைகள் மிக அதிகமான அளவில் உருவான ஐரோப்பாவில், பல சமூகங்கள் பொருளாதார நோக்கங்களுக்காக ஆவிகளைத் தழுவிக் கொண்டாலும், வாம்பயர் ஒரு கற்பனைப் பாத்திரமாகவே கருதப்படுகிறது. பல நிகழ்வுகளில், குறிப்பாக சிறிய பகுதிகளில், இந்த மூட நம்பிக்கை இன்னும் பெரிய அளவில் நிலவுகிறது. வாம்பயர்களைப் பார்த்ததாகவும், அவை தாக்கியதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. 2004ஆம் வருடம் ஃபிப்ரவரி மாதம்,ரொமானியாவில், டோமா பீட்டர் என்பவரின் உறவினர்களில் பலர் அவர் ஒரு வாம்பயராக மாறிவிட்டதாக அஞ்சினர். அவர் சடலத்தைத் தோண்டியெடுத்து, அதன் இதயத்தைப் பிளந்து அதை எரித்தனர். அந்த சாம்பலைக் குடிப்பதற்காக அதை நீருடன் கலந்தனர்.[96]

நவீன காலத்தில் அக்கல்ட் எனப்படும் மாயவித்தை இயக்கங்களின் ஆவி சார்ந்த ஒரு பகுதியாக வாம்பயரிசம் காணப்படுகிறது. வாம்பயர் பற்றிய கதைகள், அதன் மாய வித்தைக் குணங்கள், அதன் ஆசை காட்டி மயக்கும் வசீகரம், மிருகத்தனமான குணம் ஆகியவை ஆன்மீக அமைப்பின் சடங்குகள், சக்தியளித்தல் மற்றும் மாயவித்தைகள் ஆகியவ்ற்றில் சுவீகரிக்கப்படுவதற்கான சாத்தியத்திற்கு பலமான குறியீடுகளைக் கொண்டுள்ளன.[97] பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவின் அக்கல்ட் சொசைட்டியில் வாம்பயர் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. அது அமெரிக்க துணைக் கலாசாரத்திலும் ஒரு பத்தாண்டு காலத்திற்கும் மேலாகப் பரவி நியோ கோதிக் ஈஸ்தடிக்ஸின் பாதிப்புக்குள்ளாகி அதனுடன் கலந்து விட்டது.[98]

வாம்பயர் பற்றிய நம்பிக்கைகளின் மூலம்

Thumb

லெ வாம்பைர்,லித்தோகிராஃப் பை ஆர் டெ மொரைன் இன் ஃபெவெல் (1851-1852)]]

வாம்பயர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் சில சமயங்களில் வாம்பயர்களை எதிர்க்க உருவான சமூகம் தழுவிய ஒரு வெறிச்செயல் ஆகியவற்றிற்கு மூல காரணங்களாகப் பல வாதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இறப்பதற்கு முன்பே புதைத்து விடுதல் தொடங்கி, மரணத்திற்குப் பின் மனித உடல் இயற்கையிலேயே சிதைவடையும் சுழற்சி பற்றிய ஆரம்ப கால அறியாமை வரை வாம்பயர் பற்றிய மூட நம்பிக்கைகளுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஸ்லேவிக் ஆன்மீகம்

கிழக்கு ஐரோப்பாவின் வாம்பயருக்கு ஈடான மூட நம்பிக்கைகளை அநேக கலாசாரங்கள் கொண்டிருந்தாலும், ஸ்லேவிக் வாம்பயர்தான் பிரபலமான கலாசாரங்களின் வாம்பயர் பற்றிய கருத்துகளுக்கு உட்புகுந்த ஆவி பற்றிய மூட நம்பிக்கை. ஸ்லேவிக் கலாசாரத்தில் வாம்பயர் பற்றியுள்ள நம்பிக்கைகள் பெரும் அளவில் கிருஸ்துவ மதத்திற்கு மாறுவதற்கு முன்னால் இருந்த அவர்களின் ஆன்மீக நம்பிக்கைகள மற்றும் பழக்க வழக்கங்கள் மற்றும் மரணத்திற்குப் பின் வாழ்வு என்பதைப் பற்றிய அவர்களின் புரிதலையுமே சார்ந்தவை. கிரிஸ்துவ மதத்திற்கு மாறுவதற்கு முன்பான"பழைய மதம்" பற்றி மிகக் குறைவான ஸ்லேவிக் எழுத்துக்களே இருந்த போதிலும், பல பேகன் ஆன்மீக நம்பிக்கைகளும், சடங்குகளும், அந்த மக்கள் கிருஸ்துவத்திற்கு மாறிய பின்னரும் தழைத்தன.

அத்தகைய நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில், மூதாதையரை தொழுவது, வீட்டு ஆவிகள் மற்றும் மரணத்திற்குப் பின்னர் ஆத்மா போன்ற நம்பிக்கைகள் உதாரணமாகும். ஸ்லேவிக் பகுதிகளின் வாம்பயர் பற்றிய நம்பிக்கையின் மூலங்களாக நாம் சிக்கலான ஸ்லேவிக் ஆன்மீகத்தை அறியத் தலைப்பட வேண்டும்.

தொழில்மயத்திற்கு முற்பட்ட ஸ்லேவிக் சமுதாயத்தில் பைசாசங்களும், ஆவிகளும் முக்கிய இடம் வகித்தன, அவை மனித வாழ்விலும் அவர்கள் உலகத்திலும் மிகுந்த அளவில் ஊடாடுவதாகவும் கருதப்பட்டன. சில ஆவிகள் நன்மை பயப்பனவாய் இருந்தன. அவை மனிதர்களுக்கு அவர்கள் முயற்சியில் உதவின' வேறு சில ஆவிகளோ தீயவையாய், அழிவுச் சக்தியாக இருந்தன. அத்தகைய ஆவிகளுக்கு உதாரணமாக, டொமொவொய், ருசல்கா, விலா, கிகிமொரா, பொலுட்னிட்சா மற்றும் வொடியானொய் ஆகியவற்றைச் சொல்லலாம். இந்த ஆவிகளும் மூதாதையர் மற்றும் இறந்த சில மனிதர்களிடமிருந்து வந்ததாகக் கருதப்பட்டன. இவை தம் விருப்பப்படி, விலங்குகள் மற்றும் மனிதர்கள் உள்ளிட்ட, வெவ்வேறு உருவங்களில் தோன்றும் திறன் கொண்டவை. இவற்றில் சில மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில், உதாரணமாக மனிதர்களை மூழ்கடிப்பது, அறுவடையைத் தடுப்பது அல்லது கால்நடைகளின் ரத்தத்தை, சில சமயங்களில் மனிதர்களின் ரத்தத்தையும, உறிஞ்சுவது ஆகியவற்றில், ஈடுபடுபவை. இதனால், இந்த ஆவிகள் தங்களுடைய எசகுபிசகான அழிவு வேலைகளைச் செய்யாதிருக்கும் வண்ணம் அவைகளைத் திருப்திப்படுத்த ஸ்லாவ்கள் கடமைப்பட்டிருந்தார்கள்.[99]

பொதுவான ஒரு ஸலேவிக் நம்பிக்கை உடலுக்கும் ஆத்மாவுக்கும் உறுதியான ஒரு வேறுபாட்டைக் காட்டுகிறது. ஆத்மா என்பது அழிவில்லாததாகக் கருதப்படுகிறது. மரணத்திற்குப் பின்னர் ஆத்மாவானது உடலை விட்டு வெளியேறி விடும் என்றும், அது நிரந்தரமாக வாழ்வை விட்டு நீங்குவதற்கு முன்னால் 40 நாட்களுக்குத் தான் வாழ்ந்த இடம், வேலை செய்த இடம் ஆகியவற்றைச் சுற்றி வரும் என்றும் ஸ்லேவ்கள் நம்பினார்கள்.[99] இதனால், ஆத்மா தனக்கு வேண்டியபோது வெளியேறுவதற்கு வசதியாக வீட்டில் ஒரு கதவையோ அல்லது ஜன்னலையோ திறந்து வைப்பது அவசியமாகக் கருதப்பட்டது. இந்த நாட்களில் ஆவியானது இறந்து விட்ட உடலுக்குள் மீண்டும் புகுந்து விடும் சக்தி கொண்டதாக நம்பப்பட்டது.

முன்னர் கூறப்பட்ட ஆவிகளைப் போல, வெளியேறுகிற ஆத்மாவானது, தன் குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தாருக்கு இந்த 40 நாட்களில், ஆசியும் வழங்கலாம், அல்லது அழிவையும் உண்டாக்கலாம். ஒரு நபர் இறந்துவிட்டால், அப்பொழுது உடலை விட்டு வேளியேறும் ஆத்மாவின் தூய்மை மற்றும் நிம்மதியை உறுதி செய்வதற்காக, அவரைப் புதைக்கும் சடங்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஞானஸ்நானம் அளிக்கப்படாத ஒரு குழந்தை, ஒரு துர்மரணம் அல்லது அல்பாயுசில் மரணம், அல்லது (மந்திரவாதி அல்லது கொலைகாரனைப் போன்ற)ஒரு மோசமான பாவியின் மரணம் ஆகியவை ஆத்மாவின் தூய்மையைக் களங்கப்படுத்தும் காரணிகளாகக் கருதப்பட்டன. உடலை முறையாகப் புதைக்காவிட்டால், அதுவும் ஆத்மாவின் தூய்மையைக் கெடுத்து விடக் கூடும். இதற்கு மாறாக, முறையாகப் புதைக்கப்படாத ஒரு உடலில், மற்ற தூய்மையற்ற ஆத்மாக்களும், ஆவிகளும் புகுந்து கொள்ளவும் கூடும். ஒரு தூய்மையற்ற ஆத்மாவிடம் ஸ்லேவ்கள் மிகவும் அஞ்சினர், காரணம் அது பழி வாங்குவதற்கான சாத்தியம்தான்.[100]

இதுபோன்ற மரணம் மற்றும் ஆத்மா பற்றிய வேரூன்றிய நம்பிக்கைகளிலிருந்து வரப்பெற்றதுதான், வாம்பிர் பற்றிய ஸ்லேவிக் நம்பிக்கை. வாம்பயர் என்பது சிதைந்துவிட்ட உடல் கொண்ட ஒரு தூய்மையற்ற ஆத்மாவின் வெளிப்பாடு. இறந்து போகாத இந்த ஜீவராசி மிகுந்த பழியுணர்ச்சி கொண்டதாகவும், உயிருடன் இருப்பவர்களிடத்தில் பொறாமை மிக்கதாகவும், தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள இதற்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் கருதப்பட்டது.[101] வாம்பயரைப் பற்றிய இந்தக் கருத்து ஸ்லேவிக் நாடுகள் அனைத்திலும் மற்றும் ஸ்லேவிக் அல்லாத சில அண்டை நாடுகளிலும் சிறிது மாறுபட்ட வடிவங்களில் காணப்பட்டாலும், வாம்பயர் நம்பிக்கையின் தடயத்தை கிரிஸ்துவத்திற்கு முன்பாக ஸ்லேவிக் பகுதிகளில் நிலவிய ஸ்லேவிக் ஆன்மீகத்தில் கண்டு கொள்வது சாத்தியமே.

ரத்தவியல்

சிதைவடைதல்

தொழில்மயமாவதற்கு முந்தைய சமுதாயத்தில், இயற்கையாக நிகழும், ஆனால் அவர்களுக்குப் புரியாதிருந்த மரணம் மற்றும் உடல் சிதைந்து போகும் செயல்பாடுகளின் விளைவாகவே வாம்பயர் பற்றிய நம்பிக்கைகள் பிறந்ததாக பால் பார்பர் தமது வாம்பயர், பரியல் அண்ட் டெத் (மரணமும் புதைப்பும்) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.[102]

புதைக்கப்பட்ட ஒரு சடலத்தை தோண்டி எடுக்கும்போது அது பொதுவாக சடலங்கள் சிதைவதைப் போல அல்லாமல் சற்று அசாதாரணமாக தோற்றமளித்தால், வாம்பயர் என்று மக்கள் சில சமயங்களில் எண்ணினார்கள். இருப்பினும் ஒரு சடலம் சிதைவது என்பது அந்தப் பகுதியின் வெப்ப நிலை, மண்ணின் குணம் ஆகிய பல காரணிகளுக்கு உட்பட்டது. இதில் பல காரணிகள் சிறிதே அறியப்பட்டவை. இதனால் வாம்பயர் வேட்டைக்காரர்கள் இறந்த உடல் சிதையவில்லை என்றும், வேடிக்கையாகச் சொன்னால், சிதைந்த ஒரு உடல் இன்னும் உயிர் இருப்பதன் அடையாளமென்றும் நம்பினார்கள்.[103] சிதைவதனால் உண்டாகும் வாய்வு சடலங்களை ஊத வைக்கிறது. அதிக அழுத்தம் காரணமாக வாய் மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வடிகிறது. இதனால் உடல் "குண்டாக"வும் "நன்றாகத் தின்றதை"ப் போலவும், "சிகப்பாக" மாறியும் காணப்படுகிறது. வாழும் காலத்தில் ஒல்லியாகவும், வெளிறியும் இருந்த ஒருவரின் சடலத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் அது மேலும் அதிகமாகக் கவனத்திற்கு உள்ளாகின்றன. அர்னாடு பௌல் வழக்கில், ஒரு வயதான பெண்மணியின் சடலத்தை தோண்டிப் பார்த்தபோது, அவளது அக்கம்பக்கத்தார் அவள் உயிருடன் இருந்தபோது காணப்பட்டதை விட அதிகமாக, அது குண்டாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டதாக தீர்மானித்தனர்.[104] தோண்டி எடுக்கப்பட்ட சடலத்திலிருந்து வெளிப்பட்ட ரத்தம் அது அண்மைக்காலம் வரை வாம்பயர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைப் போல ஒரு தோற்றம் அளித்தது.[38] தோல் கருமையாவதும் உடல் சிதைவதனால் நிகழும்.[105] ஒரு ஊதிப் போன சிதைந்த உடலை கத்தி அல்லது மரக்குச்சியால் குத்தினால், அந்த உடலில் ரத்தம் கசியும், மேலும் அதனுள் தங்கியிருக்கும் வாய்வு வெளியேறவும் வழி வகுக்கும். இதனால் அந்த வாய்வு குரல் வளை வழியாக வெளியேறும்போது, முனகுவது போன்ற ஒரு ஒலி எழலாம்; அல்லது ஆசனவாய் வழியே வாய்வு பிரியும்போது ஏற்படும் ஒலி போன்ற ஒரு ஒலி எழலாம். பீட்டர் லொகோஜோவிட்ஜ் வழக்கில் அறிக்கை அளித்த அதிகாரி கூறுகிறார்: "மிகுந்த மரியாதையின் பேரில் மற்ற பயங்கரமான குறிகளை நான் விட்டு விடுகிறேன்."[106]

மரணத்திற்குப் பிறகு, தோல் மற்றும் ஈறுகளிலிருந்து திரவங்கள் வெளியேறி விடுகின்றன. இதனால் அவை சுருங்கி, முடி, நகங்கள் மற்றும் முகவாயால் மூடப்பட்டிருந்த பற்களின் வேர்களை வெளிக் காண்பிக்கின்றன. இதனால், முடி, நகங்கள் மற்றும் பற்கள் வளர்ந்து விட்டதைப் போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படக் கூடும். ஒரு கால கட்டத்திற்குப் பிறகு, உடலிலிருந்து நகங்கள் விழுந்து விடும், தோல் உரிந்து விடும். லொகோஜோவிட்ஜ் வழக்கில் உட்தோல், நகக் கண் ஆகியவை வெளிப்பட்டது "புதிய தோல்" என்றும் "புது நகங்கள்" என்றும் கூறப்பட்டன.[106]

இறப்பதற்கு முன்னால் புதைத்தல்

அந்தக் காலத்தில் நிலவிய மருத்துவ அறிவுக் குறைபாடுகளின் காரணமாக சில தனி நபர்கள் இறப்பதற்கு முன்பே இறந்து விட்டதாகக் கருதப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டதும், வாம்பயர் கதைகள் உருவாவதற்கு ஒரு காரணம் என்று ஒரு கருத்து நிலவுவதுண்டு. சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட சவப்பெட்டியிலிருந்து சத்தங்கள் கேட்பதாக மக்கள் கூறவும், அதை பிறகு திறந்து பார்த்த பொழுது அதில் அடைபட்டிருந்த பாதிக்கப்பட்டவர் தப்பிப்பதற்கு செய்த முயற்சியாக சவப்பெட்டியின் உட்பகுதியில் நகக் குறிகள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டதுண்டு. வேறு சில வேளைகளிலோ, உள்ளே இருப்பவர் தமது தலை, மூக்கு அல்லது முகத்தை மோதுவார்; இது பெட்டிக்குள் அவர் "உண்டு கொண்டிருப்பதைப்" போல தோற்றமளிக்கும்.[107] இந்த வாதத்தில் ஒரு பிரச்சினை உள்ளது. இறந்ததாகக் கருதப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் எப்படி உணவு, தண்ணீர் அல்லது சுத்தமான காற்று எதுவுமின்றி அத்தனை காலத்திற்கு உயிருடன் இருந்தார்கள் என்பதுதான் கேள்வி. இந்த ஓசைகளுக்குக் காரணம் இயற்கையாகச் சிதையும் உடல்களிலிருந்து வாய்வு தப்பித்துப் போகும் ஒலி என்று ஒர் மாற்று விளக்கமும் இருந்தது.[108] சமாதிகள் ஒழுங்கற்று காணப்பட்டமைக்கு கல்லறைத் திருட்டு மற்றொரு சாத்தியமான காரணம்.[109]

நோய் பரவுதல்

கிராமப்புறக் கதைகளில் வாம்பயர் பற்றியவை மர்மமான நோய்களால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதுடனேயே தொடர்பு கொண்டிருந்தன. இது பொதுவாக ஒரே குடும்பம் அல்லது ஒரு சிறிய சமூகத்தில் நிகழ்ந்துள்ளது.[78] கொள்ளை நோயை ஒரு காரணமாகக் குறிப்பிடலாம் என்பது பீட்டர் ப்லொகோஜோவிட்ஜ் மற்றும் அர்னால்ட் பௌல் ஆகிய இருவரது பிரபலமான வரலாறிலும் தெரியவரும். மெர்சி பிரௌன் வரலாற்றிலும் இப்படித்தான். பொதுவாகவே, ந்யூ இங்கிலாந்தில், காச நோய் போன்ற கொள்ளை நோய்களை வாம்பயர்களுடன் தொடர்பு படுத்தும் ஒரு போக்கு இருந்தது புபானிக் பிளேக்கின் நிமோனியா வடிவத்தில், நுரையீரலில் திசு உடைந்து விடும். இது உதட்டில் ரத்தம் கசிவதாகத் தோற்றமளிக்கும்.[110]

மரபு வழி நோய்கள்

1985ஆம் வருடம் உயிரியல் வேதியியல் ஆய்வாளர் டேவிட் டோல்ஃபின், போர்ஃபிரியா என்ற அரிதான ஒரு ரத்த முறையின்மைக்கும், வாம்பயர் பற்றிய நம்பிக்கைகளுக்கும் தொடர்பு ஒன்றை வெளிப்படுத்தினார். இந்த நோய் நிலைக்கு ரத்த நாளங்கள் வழியாக இரும்புச் சத்து அளிக்கப்படுவதைக் குறிப்பிட்ட அவர், அதிக அளவில் ரத்தம் செலுத்தப்படுவது ஹெம் என்னும் இரும்புச் சத்தை மையத்தில் கொண்ட ப்ராஸ்தடிக் குழுமம் வயிற்றுச் சுவர் வழியாக ரத்த ஓட்டத்தில் கலந்து விடக் கூடுமென்றார். ஆகவே, வாம்பயர்கள் எனப்பட்டவர்கள் இந்த போர்ஃபிரியா நோய்க்கு ஆளாகி, இந்த ஹெம்மை அகற்றுவதற்கு முயன்றவர்களே.[111] ஆனால், மருத்துவ ரீதியாக இந்த வாதம் ஒப்புக் கொள்ளப்படவில்லை. போர்ஃபிரியா நோயால் அவதிப்படுபவர்கள் மனித ரத்தத்திற்கு ஏங்குபவர்கள் என்றும், அவ்வாறு மனித ரத்தத்தை அருந்துவது போர்ஃபிரியா வியாதியின் அறிகுறிகளை அகற்றி விடும் என்றும் கூறுவது அந்த நோயைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்வதன் அடிப்படையிலானது. மேலும், டால்ஃபின் புனை கதைகளில் வரும் ரத்தம் உறிஞ்சும் வாம்பயர்களுடன், கிராமிய நம்பிக்கையான வாம்பயர்களை குழப்பிக் கொண்டதாக குறிப்பிடப்படுகிறார். இவற்றில் பல ரத்தத்தை அருந்தியதாகக் குறிப்பிடப்படவில்லை.[112] மேலும் இதற்கு ஆளானவர்கள் சூரிய ஒளிக்கு மிகு உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதால், வாம்பயர்களுக்கு இணையாக்கப்பட்டார்கள். ஆயினும், இது கதைகளில் மட்டுமே வாம்பயர்களுடன் தொடர்பு படுத்தப்பட்டதாகும், கிராமப்புற புனைகதை வாம்பயர்களுடன் அல்ல. எப்படியோ, டால்ஃபின் தன் கருத்தை மேலும் பரவலாகப் பிரசுரிக்கவில்லை.[113] மருத்துவ நிபுணர்களால் மறுக்கப்பட்ட போதிலும், இது ஊடங்களின் கவனிப்பைப்[114] பெற்று, நவீன புனைகதையில் இடம் பெற்று விட்டது.[115]

ராபீஸ்

வாம்பயர் பற்றிய புனை கதைகளுடன் ராபீசும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் விகொவில் ஜெரால் மருத்துவ மனையில் ஒரு நரம்பியலாளராக இருந்த டாக்டர். யுவான் கோமெஜ்- அலோன்சோ, தமது நரம்பியல் பற்றிய ஒரு அறிக்கையில், இந்த சாத்தியத்தை ஆராய்ந்தார். பூண்டு மற்றும் வெளிச்சம் ஆகியவற்றைக் கண்டு மிரள்வது மிகு உணர்ச்சியினால் இருக்கக் கூடும், இது ராபிசின் ஒரு அறிகுறியாகும். இந்த நோய் மூளையின் பகுதிகளையும் தாக்கலாம். இதனால், சாதாரணமான உறக்க நிலைகளில் தொல்லைகள் உருவாகலாம் (இதனால் ராத்திரி வேளைகளில் சுற்றலாம்) மற்றும் பாலியல் மிகு உணர்ச்சி உண்டாகலாம். ஒரு மனிதன் தன் பிரதிபலிப்பைப் பார்க்க முடிந்தால் அவன் ராபிட் அல்ல என்று புனைகதைகள் கூறியதுண்டு. (இது வாம்பயர்களுக்கு பிரதிபலிப்பு கிடையாது என்பதன் உருவகமாகும்) வாம்பயர்களுடன் தொடர்பு படுத்தப்படும் ஒநாய்களும், வௌவால்களும் ராபீஸ் நோயைக் கடத்துபவையாக இருக்கலாம். இந்த நோய் கண்டவர்களுக்கு மற்றவர்களைக் கடிக்க வேண்டுமென்ற வெறியும், வாயோரம் ரத்தம் கொப்புளிப்பதும் ஏற்படலாம்.[116][117]

உளவியல் முறையில் புரிந்து கொள்ளுதல்

வெல்ஷ் நாட்டு உளவியல் நிபுணர் எர்னஸ் ஜோன்ஸ் 1931ஆம் வருடம் ஆன் தி நைட்மேர் என்ற தமது ஆய்வறிக்கையில், வாம்பயர்கள் என்பது தம்மையறியாமல் ஆழ்மனத்தில் உருவாகும் தற்காப்பு இயக்கமுறையின் வெளிப்பாடேயாகும் என்று குறிப்பிட்டார். காதல், குற்றவுணர்வு, வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளே கல்லறையிலிருந்து திரும்ப வருபவர்களைப் பற்றிய கருத்துக்களுக்கு உரமிட்டது. இறந்து போன தங்கள் அன்புக்குரியவர் ஒருவருடன் மீண்டும் இணைவதற்கு ஏங்குபவர்கள் இறந்து போனவரும் அவ்வாறே ஏங்கி மீண்டும் வருவதாக ஒரு கருத்தை வெளிப்படுத்தக் கூடும். இதிலிருந்தே கிராமப் புறங்களில் வாம்பயர் மற்று பைசாசங்கள் பற்றிய புனை கதைகளும், அவை உறவினர்களை, குறிப்பாக முதலில் தமது வாழ்க்கைத் துணையை, சென்று பார்ப்பதுமான நம்பிக்கை உருவானது.[118] இருப்பினும், குற்ற உணர்வு கொண்டிருந்த உறவு முறைகளில், மீண்டும் இணைவதற்கான இந்த ஆவல் மன உளைச்சலாக மாற்றுரு பெற்றது. இது உணர்வுகளை மனத்தில் அடக்கி வைத்துக் கொள்வதில்முடியலாம். இதை அச்ச நோய் (மார்பிட் ட்ரெட்)[119] உருவாவதுடன் ஃபிராய்ட் தொடர்புபடுத்தினார். இந்த விஷயத்தில் முதலில் இருந்த (உடலுறவுக்கான) மீண்டும் இணையும் ஆசை முற்றிலும் மாறிவிடும் என்று ஜோன்ஸ் எடுத்துரைத்தார்: ஆசைக்குப் பதிலாக அச்சம் வந்து விடுகிறது, காதலுக்குப் பதிலாக துன்புறுத்திப் பாலியல் மகிழ்ச்சி பெறும் குணம் வந்து விடுகிறது; பிரியமான நபர் அல்லது பொருளுக்குப் பதிலாக அறியாத ஒன்று வந்து விடுகிறது. இதில் உடலுறவு தொடர்பான அம்சம் இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்.[120] நவீன விமர்சகர்கள் இன்னும் எளிமையான ஒரு கருத்தைச் சொல்கிறார்கள்: மனிதர்கள் வாம்பயர்களை இறப்பின்மையோடு தொடர்பு படுத்துவதன் காரணம், தாற்காலிகமாவது அவர்கள் மரணம் பற்றிய அச்சத்திலிருந்து விடுபட விரும்புவதுதான்.[121]

ரத்தத்தை உறிஞ்சும் செயலின் உள்ளீடாக உள்ள பாலியல் உணர்வை, இங்குபஸ் (ஆணுருவம் கொண்டு பெண்களின் மீது படுத்து உடலுறவு கொள்ளும் ஒரு பிசாசு) போன்ற நடத்தையுடன் மற்றும் நரமாமிசம் உண்பதுடன் குறிப்பாக இணைப்பதில் அறியலாம். தங்களுக்கு இரையான மனிதர்களிடமிருந்து வேறு பல திரவங்களையும் இவை கறந்து விடுவதாகவும் பல கதைகள் கூறுகின்றன. இதில் நம்மையும் அறியாமல் இது விந்துடன் இதனைத் தொடர்பு படுத்தப்படுவது நன்றாகத் தெரிகிறது. முடிவாக ஜோன்ஸ் குறிப்பிடுகிறார்: சாதாரணமான பாலியல் அம்சங்கள் அழுத்தப்படும்போது, அவற்றின் வக்கிரமான வடிவங்கள் வெளிவரும். உதாரணமாக மற்றவர்களைத் துன்புற்த்தி அதன் மூலம் பாலியல் மகிழ்ச்சியைப் பெறும் சாடிசம்; இதில் வாய்வழி சாடிசம் என்பது வாம்பயர் நடத்தையில் முக்கியமான அங்கம் என்று கருத்து கொண்டிருந்தார்.[122]

அரசியல் ரீதியான விளக்கம்

நவீன கால கட்டத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட வாம்பயர் கட்டுக்கதைகளில் அரசியல் ரீதியான மேலோட்டங்களும் இல்லாமல் இல்லை.[123] தனியானதொரு மாளிகையில், பைசாசங்களாக மாறிவிட்ட சிலருடன் மட்டுமே, இரவில் மட்டும் தோன்றி தனது குடியானவர்களைத் தின்று வாழும் செல்வந்தரான கௌண்ட் டிராகுலா, மற்றவர்களை உறிஞ்சி வாழும் அன்சியன் அடக்கு முறை ஆட்சி யின் குறியீடு. வெர்னர் ஹெர்ஜோக் தனது நோஸ்ஃபெரடு தி வாம்பயர் என்னும் நூலில், அதன் கதாநாயகனான எஸ்டேட் ஏஜண்ட் அடுத்த வாம்பயராகும்போது, இந்த அரசியல் மேலோட்டத்திற்கு மேலும் ஒரு வேடிக்கையான திருப்பம் தருகிறார்; இந்த வழியில்தான் முதலாளி வர்க்கமான பூர்ஷ்வாக்கள் அடுத்த மனித உறிஞ்சு வர்க்கமாக மாறுகிறார்கள்.[124]

மன நோய் ஆய்வு

பல கொலைகள் அதற்கு இரையானவர்களின் மீது வாம்பயர் சடங்குகள் போலத் தோற்றமளிக்கும் செயல்களைச் செய்தபின் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தொடர் கொலைகாரர்களானபீட்டர் குர்டென் மற்றும் ரிச்சர்ட் ட்ரெண்டன் சேஸ் ஆகிய இருவரும், தங்களால் கொலையுண்டவர்களின் ரத்தத்தைக் குடிப்பது கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, "வாம்பயர்கள்" என்று சிறு செய்தித் தாள்களில் அழைக்கப்பட்டார்கள். இதைப் போலவே 1932ஆம் வருடம், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் தீர்வு காணப்படாத ஒரு கொலை வழக்கு, பலியானவரின் மரணம் நிகழ்ந்த சூழ்நிலைகளின் காரணமாக[125], "வாம்பயர் கொலை" என்றே செல்லப்பெயரிடப்பட்டது. 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஹங்கேரியன் குறு நில அரசியும் (கௌண்ட்ஸ்), பெரும் அளவில் மக்களைக் கொன்றவளுமான எலிசபெத் பதோரி அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டவைகளில், மிகக் கேவலமான முறையில், தனது அழகையும், இளமையையும் தக்க வைத்துக் கொள்வதற்காக தனக்கு இரையானவர்களின் குருதியில் குளித்ததாகச் சித்தரிக்கப்பட்டாள்.[126]

சமீபத்திய பிரபல கலாசாரம் முதல் சடங்கு சார்ந்த அறிகுறிகளை அடியொற்றி வந்த திகில் படங்கள், ஆன் ரைஸ் எழுதிய புனை கதைகள் மற்றும் விக்டோரியன் இங்கிலாந்தின் வாழ்வு முறைமைகள் ஆகியவற்றின் பின்னணி அடுத்தவர்களின் ரத்தத்தை சும்மா ஒரு ஜாலிக்காக் குடிக்கும் கோத் துணைக் கலாசாரத்திற்குள் பெருமளவில் இருக்கும் தற்போதைய ஒரு துணைக் கலாசாரத்திற்கான ஒரு பிரயோகம், "வாம்பயர் வாழ்வு முறை" என்பதாகும்.[127] வாம்பயர் துணைக் கலாசாரத்திற்கு உட்பட்ட வாம்பயரிசத்தில் சாங்குவின் வாம்பயரிசம்ப ராணிக் சக்தியால் ஊட்டம் பெறுவதாகக் கூறப்படும் சைக்கிக் வாம்பியரிசம் ஆகிய இரண்டுமே அடங்கும்.[128]

வாம்பயர் வௌவால்கள்

Thumb
பெருவில் ஒரு வாம்பயர் வௌவால்

பல கலாசாரங்களில் இவைகளைப் பற்றிய கதைகள் இருந்தாலும், வாம்பயர் வௌவால்கள் வெகு அண்மையில்தான் வாம்பயர் பாராம்பரிய புனைகதையின் முக்கிய அங்கமாயின. சொல்லப்போனால், 16வது நூற்றாண்டில் தென் அமெரிக்காவின் மெயின்லாண்டில் இவை கண்டு பிடிக்கப்பட்டபோதுதான், இந்த வாம்பயர் வௌவால்கள் வாம்பயர் புனைகதைகளுடன் இணைக்கப்பட்டன.[129] ஐரோப்பாவில் வாம்பயர் வௌவால்கள் இல்லாவிடினும், அமானுஷ்யம் மற்றும் சகுனம் ஆகியவ்ற்றுடன் ஆந்தைகள் நெடுங்காலமாகவே தொடர்பு படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இதற்குக் காரணம் அவைகளுக்குள்ள இரவில் நடமாடும் பழக்கம்தான்.[129][130] நவீன ஹெரால்டிக் பாராம்பரியத்தில் ஆந்தை என்பதற்கு "இருள் மற்றும் குழப்பம் ஆகியவற்றின் சக்தி பற்றிய அறிநிலை" என்று பொருளாகும்.[131]

உண்மையான வாம்பயர் வௌவால்களின் மூன்று இனங்களும் லத்தீன் அமெரிக்காவில் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படுபவைதாம். மனித அறிவிற்கு எட்டிய வரையில் அவற்றிற்கு புராதான உலகில் உறவினர்கள் யாரும் இருந்ததைக் குறிப்பிடும் வகையில் சாட்சியம் ஏதும் இல்லை. எனவே, வாம்பயர் வௌவாலைப் பற்றிய ஒரு நினைவை அல்லது முறைமாற்றப்பட்ட ஒரு அளிப்பைத்தான் புனைகதை வாம்பயர் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது சாத்தியமே அல்ல. வாம்பயர் கதைகளை ஒட்டித்தான் வௌவால்கள் பெயரிடப்பட்டனவே தவிர, அவற்றையொட்டி வாம்பயர் கதைகள் வரவில்லை; ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி யில் பாராம்பரியப் புனைகதை வடிவில் வாம்பயர் என்ற சொல் 1734ஆம் வருடத்திலிருந்து புழக்கத்தில் உள்ளது. மிருகத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாக அது பயன்படுத்தப்பட்டது 1774ஆம் ஆண்டிலிருந்துதான். ஒரு வாம்பயர் வௌவாலின் கடி ஒருவருக்கு அப்படி ஒன்றும் மிகப் பெரிய தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், அது மனிதர்களையும், மிகுந்த அளவில் கால்நடைகளையும் தனக்கு இரையாக்கிக் கொள்வதாக அறியப்பட்டது. அடிக்கடி அது தனது குறியான இரண்டு பற்குறிகளை பலியானவரின் தோலில் விட்டுச் செல்வதாகவும் அறியப்பட்டது.[129]

இலக்கிய டிராகுலா நாவலில் பல சமயங்களில் வௌவாலாக உரு மாற்றம் கொள்கிறது, இரண்டு முறை வாம்பயர் வௌவால்களே குறிப்பிடப்படுகின்றன. நாவலைத் தொடர்ந்து 1927வது ஆண்டு மேடை நாடகமாகத் தயாரிக்கப்பட்ட டிராகுலா வில் டிராகுலா ஒரு வௌவாலாக மாறியது. இதை போலவே திரைப்படத்திலும், பெலா லுகோசி ஒரு வௌவாலாக மாறுகிறார்.[129] இந்த வௌவாலாக மாறுகின்ற காட்சி மீண்டும் சன் ஆஃப் டிராகுலா திரைப்படத்தில் லோன் ஷானி ஜூனியரால் பயன்படுத்தப்பட்டது.[132]

Remove ads

நவீனப் புனைகதைகளில்

தற்போது பிரபல புனைகதையில் வாம்பயர் என்பது நிரந்தரமான ஒரு அங்கமாகி விட்டது. இத்தகைய புனைகதைகள் பதினெட்டாம் நூற்றாண்டில் துவங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறுகதைகள் வரை தொடர்ந்தன. இவற்றில் முதன் முதலாக வெளியானதும், மிகுந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதுமானது, வாம்பயர் லார்ட் ருத்வென் பாத்திரத்தைக் கொண்டிருந்த ஜான் பாலிடொரி எழுதிய தி வாம்பையர் என்பதாகும் (1819). தொடர்ந்து அவன் எதிர்மறை நாயகனாகத் தோன்றிய தொடர் வாம்பயர் நாடகங்களிலும் லார்ட் ருத்வென்னின் அட்டகாசங்கள் மேலும் விஸ்தாரமாக விவரிக்கப்பட்டன. வாம்பயர் கதைக் கருத்து தொடர்ந்து பென்னி ட்ரெட்ஃபுல் என்பதிலும், தொடர் பிரசுரங்களாக வார்னே தி வாம்பயர் (1847) போன்றவற்றில் தொடர்ந்து எல்லாக் காலங்களுக்கும் மிகப் பிரதானமான வாம்பயர் நாவலான 1897ம் வெளியான ப்ராம் ஸ்டோக்கரின் "டிராகுலா " நாவலில் சிகரத்தை அடைந்தது.[133] காலப்போக்கில், தற்போது முக்கிய அங்கமாகக் கருதப்படும் சில அம்சங்கள் வாம்பயரின் தோற்ற வடிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டன: வார்னே தி வாம்பயர் மற்றும் கௌண்ட் டிராகுலா இரண்டிலும் முன்பக்கம் நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள்[134] இருந்தமை மற்றும் முர்னௌவின் நொஸ்ஃபெரடு வில் சூரிய ஒளியைக்[135] கண்டு அஞ்சுவது ஆகியவற்றைத் தொடர்ந்து கோரைப் பற்கள் மற்றும் சூரிய ஒளியைக் கண்டு அஞ்சுவது ஆகிய இரண்டும் 19வது நூற்றாண்டின்போது வாம்பயரின் உடல் மற்றும் குண அம்சங்களாக உருவாயின. வாம்பயரின் நீளமான உடை 1920களின் மேடை நாடகங்களில் உருவானது. நாடகாசிரியர் ஹாமில்டன் டீன் அறிமுகப்படுத்திய உயர்ந்து நிற்கும் காலர், நாடக மேடையில் டிராகுலா சட்டென்று மறைவதற்கு உதவியது.[136] பாராம்பரிய புனைகதைகளில் இதைப் போல ஒன்றும் காணப்படாவிட்டாலும், லார்ட் ருத்வென் மற்றும் வார்னே இருவரும் நிலவொளியில் குணமடையும் திறன் பெற்றிருந்தார்கள்.[137] புனைகதைகளில் வெளிப்படையாக இன்றி உட்கருத்தாக கூறப்பட்டிருந்த இறவாமை வாம்பயர் திரைப்படங்களிலும், இலக்கியங்களிலும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாக இருந்தது. தன் முந்தைய வாழ்வில் தனக்கு சமமாக இருந்தவர்களின் ரத்தத்திற்கான வேட்கை, முடிவில்லாத வாழ்க்கைக்கான விலையாக மிக அதிகமாக குறிப்பிடப்பட்டது.[138]

இலக்கியம்

Thumb

டி.ஹெச் ஃப்ரிஸ்டனின் "கார்மில்லா", 1872, தி டார்க் ப்ளுவிலிருந்து]]

வாம்பயர் அல்லது ஆவி பிசாசு என்பது முதலில் ஹென்ரிச் அகஸ்ட் ஒஸ்ஸென்ஃபெல்டெர் எழுதிய தி வாம்பயர் (1748), கோட்ஃப்ரைட் அகஸ்ட் பர்கர் எழுதிய லெனொர் (1773), ஜோஹன் வுல்ஃப்கேங்க் வொன் கதே எழுதிய டை ப்ரௌட் வொன் கொரிந்த் , தி ப்ரைட் ஆஃப் கொரிந்த் (1797) சாமுவேல் டெய்லர் கொலரிட்ஜின் முடிவடையாத க்ரிஸ்டாபெல் மற்றும் லார்ட் பைரன் எழுதிய தி கையௌர் (1813) போன்ற கவிதைகளில் தோன்றியது.[139] வாம்பயர் பற்றிய முதல் உரைநடை புனைகதையை உருவாக்கிய பெருமையும் பைரனுக்குக் கிடைத்தது: தி வாம்பயர் (1819). இருப்பினும் உண்மையில் இதன் ஆசிரியர், தன் ஒப்பற்ற நோயாளியின் புதிரான அரைகுறைக் கதையை தொகுத்து முழுமைப்படுத்திய பைரனின் மருத்துவர் ஜான் பொலிடொரிதான்.[27][133] பைரனின் காதலி லேடி கரோலின் லாம்ப் தனது புகழ்ச்சியற்ற ரொமான்-அ-க்ளெஃப், க்ளெனர்வோன் (பைரனின் காட்டுத்தனமான வாழ்க்கையின் அடிப்படையிலான ஒரு கோதிக் மாயக்கதை) என்பதில் விவரித்த பைரனின் சொந்த ஆளுமைக் குணமே பொலிடொரியின் இறவாத நாயகன் லார்ட் ருத்வெனுக்கான மாதிரியாக பயன்படுத்தப்பட்டது. தி வாம்பயர் மிகுந்த அளவில் வெற்றியடைந்தது. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாம்பயர் இலக்கியங்களில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது.[9]

ஜேம்ஸ் மால்கம் ரைமர் எழுதிய வார்னே தி வாம்பயர் விக்டோரிய இடைக் காலத்திய மிகப் பெரிய பிரபல எழுத்தாகச் சுட்டப்படும் கோதிக் திகில் கதையாக திகழ்ந்தது. ( இதற்கு மாறாக இந்தப் புகழ், 1845 முதல், 1847 வரை தொடர் பிரசுரங்களாக வெளிவந்த, தாமஸ் ப்ரெஸ்கெட் ப்ரெஸ்ட் ஆக்கமான பென்னி தி ட்ரெட்ஃபுல்ஸ் என்பதற்கும் , அதன் மலிவான விலை மற்றும் பயங்கரமான உட்பொருள்களின் காரணமாக அளிக்கப்படுகிறது) இந்தக் கதை 1847ஆம் வருடம் இரண்டு பத்திகளாக 868 பக்கங்கள் கொண்ட புத்தக வடிவில் பிரசுரிக்கப்பட்டது. இது குறிப்பிடத்தக்க முறையில், மர்மமான எழுத்து நடையும், வார்னே பலி கொள்ளும் சாகசங்களை விவரிக்கும் விபரமான உருவகக் காட்சிகளும் கொண்டிருந்தது.[137] இந்த இனத்தில் முக்கியமாகச் சேர்ந்த ம்ற்றொன்று, ஷெரிடன் லெ ஃபனுவின் லெஸ்பியன் வாம்பியர் கதையான கார்மிலா (1871). தனக்கு முன்னம் இருந்த வார்னேயைப் போல, வாம்பயர் கார்மிலாவும் அவளது நிர்ப்பந்தமான நிலையை எடுத்துக் காட்டிய விதத்தில், சற்று இரக்கத்தைத் தூண்டும் வகையிலேயே சித்தரிக்கப்பட்டாள்.[140]

ப்ராம் ஸடோக்கரின் டிராகுலா(1897) வைப்போல வேறு எந்த ஒரு பிரபல புனைகதையும் வாம்பயர்களை செல்வாக்காகவும், உறுதியானதாகவும் சித்தரிக்கவில்லை.[141] அது வாம்பயரிசத்தை ஒரு பைசாசம் உடலில் புகுவதால் தொற்றும் ஒரு நோய் போல, நீரோட்டமாக பாலியல் குறிகளுடனும், ரத்தம் மற்றும் மரணம் ஆகியவற்றைச் சித்தரித்த முறை காச நோயும் மேக நோயும் (சிஃபிலிஸ்) சாதாரணமாக இருந்த விக்டோரிய காலத்து ஐரோப்பாவில் உடனடியாக ஏற்கப்பட்டது. ஸ்டோக்கர் தனது கதையில் வாம்பயரின் குணங்களாகச் சித்தரித்திருந்தவை பாராம்பரியப் புனைகதைகளுடன் ஒத்திருந்து அவற்றையும் விட மேலோங்கியிருந்தது. இறுதியில் நவீன வாம்பயர் புனைகதையாகவே உருவாகி விட்டது. தி வாம்பயர் மற்றும் கார்மிலா போன்ற முந்தைய எழுத்துகளின் தொடர்ச்சியாக 1880களின் இறுதியில் ஸ்டோக்கர் தனது புதிய புத்தகத்திற்கான ஆராய்ச்சியைத் தொடங்கினார். இதற்காக அவர் எமிலி ஜெரால்ட் எழுதிய தி லேண்ட் பியாண்ட் தி ஃபாரஸ்ட் மற்றும் ட்ரான்சில்வானியா மற்றும் வாம்பயர்களைப் பற்றிய மற்ற புத்தகங்களையும் படித்தார். லண்டனில் அவருடன் பணி புரிந்த ஒருவர் வ்ளாட் டெபிஸ் எழுதிய கதையான் "ரியல் லைஃப் டிராகுலா" வைப்பற்றிக் குறிப்பிட்டார். உடனே ஸ்டோக்கர் இந்தக் கதையை தன் கதையில் இணைத்துக் கொண்டு விட்டார். 1897ஆம் வருடத்திய பதிப்பில் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் விடுக்கப்பட்டு விட்டது. அனால், அது 1914வது வருடம் டிராகுலா'ஸ் கெஸ்ட் என்பதாக வெளியீடானது.[142]

முதலில் வந்த "அறிவியல்" சார்ந்த வாம்பயர் நாவல்களில் ஒன்று ரிச்சர்ட் மதெசனின் 1954ஆம் வருடத்திய ஐ ஆம் எ லெஜண்ட் . இது தி லாஸ்ட் மேன் ஆன் எர்த்(1964), தி ஒமெகா மேன் (1971) மற்றும் ஐ ஆம் எ லெஜண்ட்(2007) ஆகிய திரைப்படங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்டது.

21ஆம் நூற்றாண்டு வாம்பயர் புனைகதைகளுக்கு மேலும் உதாரணங்களைக் கொண்டு வந்தது. அவை ஜே.ஆர். வார்டு எழுதிய பிளாக் டாகர் ப்ரதஹூட் தொடர் மற்றும் மிகவும் பிரபலமடைந்த இதர வாம்பயர் புத்தகங்களாகும். இவை பதின்வயதினர் மற்றும் இளைஞர்களை மிகவும் ஈர்த்தன. இத்தகைய வாம்பயர் தன்மை கொண்ட அறிவியலுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய காதல்[143] நாவல்கள் மற்றும் வாம்பயர் தொடர்பான சிக் லிட் மற்றும் வாம்பயரின் மாயங்கள் நிறைந்த துப்பறியும் கதைகளும் தற்காலத்தில் மிகுந்த அளவில் பெருகி வரும் பிரசுரங்களில் குறிப்பிடத்தக்க வகையில் பிரபலமாகியுள்ளன.[143] எல்.ஏ.பாங்க்ஸின்தி வாம்பயர் ஹன்ட்ரஸ் லெஜண்ட் சீரிஸ், லாரல் கே ஹாமில்டனின் சிற்றின்பக் கிளர்ச்சிAnita Blake: Vampire Hunter மிகுந்த தொடர்கள மற்றும் கிம் ஹாரிசனின் தி ஹாலோஸ் தொடர் ஆகியவை வாம்பயரை பல புதிய கோணங்களில் சித்தரிக்கின்றன. இவற்றில் சில அசல் வாம்பயர் புனைகதைகளுக்கு சம்பந்தம் இல்லாமலும் இருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வாம்பயர் இதிகாசங்கள் பல பாகங்களாக வெளியிடப்படுவதைக் கண்ணுற்றது. இவற்றில் முதன்மையாக இருந்தவை கோதிக் காதல் கதை எழுத்தாளரான மேரிலின் ரோஸ் எழுதிய பர்னபஸ் கோலின்ஸ் தொடர், (1966-71) மற்றும் சமகாலத்திய அமெரிக்க தொலைக்காட்சி தொடரை தழுவிய "டார்க் ஷேடோஸ் " ஆகியவையாகும். இவை வாம்பயரை பாரம்பரியமாக சாத்தானின் உருவகமாகக் கருதப்பட்டு வந்ததற்கு மாறாக, கவிதையான, துன்பியல் நாயகர்களாக புதிய முறையில் சித்தரிக்கும் பாணியைத் துவக்கியது. இந்த சூத்திரத்தை நாவலாசிரியர் ஆன் ரைஸ் எழுதிய மிகவும் பிரபலமான மற்றும் தாக்கம் ஏற்படுத்திய வாம்பயர் க்ரானிகிள்ஸ் (1976-2003)தொடர்ந்தது.[144] ஸ்டீஃபனி மெயர் எழுதிய ட்விலைட் தொடரில் (2005-2008) வாம்பயர்கள் மீதான பூண்டு மற்றும் சிலுவை ஆகியவற்றின் சக்தி தவிர்க்கப்பட்டது. வாம்பயர்களுக்கு சூரிய ஒளி தீங்கிழைப்பதில்லை (அவை அவற்றினுடைய அமானுஷ்யத் தன்மையை வெளிப்படுத்தியபோதிலும்).[145]

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி

எஃப்.டபிள்யூ.மார்னௌ'ஸ் நோஸ்ஃபெரடுவிலிருந்து ஒரு ஐகோனிக் காட்சி, 1922.]] செம்மையான திகில் படங்களின் முக்கியமான ஒரு பாத்திரமாக கருதப்படும் வாம்பயர், திரைப்படம் மற்றும் விளையாட்டுத் தொழில்களில் ஒரு செறிவுள்ள பொருள் என்று நிரூபணம் ஆகிவிட்டது. மற்ற எந்த கதாபாத்திரங்களையும் விட டிராகுலா பல திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரமாக உள்ளது. இருப்பினும் , ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் பல திரைப்படங்கள் டிராகுலா நாவலின் அடிப்படையிலோ அல்லது அதிலிருந்து நெருக்கமாக கிடைக்கப் பெற்றவையோதான். இவற்றில் 1922ஆம் ஆண்டு குறிப்பிடப்படும் வகையில் அடையாளம் காணப்பட்ட வகையில் உருவான, எஃப்.டபிள்யூ. முர்னௌ இயக்கிய நொஸ்ஃபெரடு ஊமைப்படமும் உண்டு. இதுதான் டிராகுலாவை முதன் முதலாக திரையில் சித்தரித்த முயற்சி. இதில் கதாபாத்திரங்களும் அவற்றின் பெயர்களும் டிராகுலாக்களைப் போலவே இருக்க வேண்டுமென்று விரும்பப்பட்டது. ஆனால், ஸ்டோக்கரின் விதவை மனைவியிடமிருந்து முர்னௌவால் இதற்கு சம்மதம் பெற முடியவில்லை. அதனால், இந்தப் படத்தின் பல அம்சங்களை மாற்ற நேரிட்டது.

இந்த திரைப்படத்தைப் போலவே, யூனிவர்சலின் , டிராகுலா (1931)இருந்தது. பெலா லுகோசி கௌண்டாக நடித்த இந்தத் திரைப்படம்தான் டிராகுலாவைச் சித்தரித்த முதல் பேசும் படம். தொடர்ந்த பத்து வருடங்களில் பல வாம்பயர் படங்கள் வெளி வந்தன. இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது 1936 ஆம் ஆண்டு வெளியான டிராகுலா'ஸ் டாட்டர்.[146]

புதிய ஒரு தலைமுறைக்காக வேண்டி, டிராகுலாவை புகழ் வாய்ந்த [[ஹாமர் ஹாரர்|ஹாமர் ஹாரர்]] தொடர் திரைப்படங்களுக்காக [[கிரிஸ்டோஃபர் லீ|கிரிஸ்டோஃபர் லீ]] நடிப்பில் மீண்டும் உருவாக்கம் செய்தபோது டிராகுலா புனைகதைகளுக்கு திரைப்படத் துறையில் பலமான அஸ்திவாரம் போடப்படப்பட்டு விட்டது. 1958ஆம் வருடம் லீ நடித்து பெரும் அளவில் வெற்றியடைந்த டிராகுலா வைத் தொடர்ந்து இதன் ஏழு தொடர்ச்சிகள் வெளியாயின. இவற்றில் இரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் லீயே டிராகுலாவாகத் தோன்றி இந்தக் கதாபாத்திரத்திற்காக பெரும் பெயர் பெற்றார்.[147] 1970களில் வாம்பயர் திரைப்படங்கள் கௌண்ட் யோர்கா, வாம்பயர் (1970), ஒரு ஆப்பிரிக கௌண்டைக் கொண்ட 1972ஆம் ஆண்டின் ப்லாகுலா , 1979ஆம் ஆண்டில் வெளியான, நொஸ்ஃபெரடுவை ஒத்த வாம்பய்ரான "சேலம்'ஸ் லாட் " மற்றும் அதே வருடம் க்ளாஸ் கின்ஸ்கியின் நடிப்பில் வெளியான நொஸ்ஃபெரடு, தி வாம்பயர் எனப் பெயரிடப்பட்ட நொஸ்ஃபெரடு வின் மறு திரையாக்கம் என்று திரைப்படங்களில் வாம்பயர் பல தளங்களில் விரிவடைந்து விட்டது. பல திரைப்படங்களின் கதை பிரதானமாக ஒரு தீய வாம்பயர் கதாபாத்திரத்தைச் சுற்றியே இருந்தாலும், கார்மிலாவை அடிப்படையாகக் கொண்ட ஹாமர் ஹாரரின் தி வாம்பயர் லவர்ஸ் (1970) போன்ற பெண், குறிப்பாக லெஸ்பியன், வாம்பயர்கள் சித்தரிக்கப்பட்டன.[147]

டான் குர்டிஸ் என்னும் 1972ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடரின்Kolchak: The Night Stalker முன்னோட்டம் கார்ல் கொல்சக் என்னும் ஒரு நிருபர் லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்பில் ஒரு வாம்பயரை வேட்டையாடுவதைச் சுற்றியமைந்தது. இதற்குப் பின் வந்த மார்வெல் காமிக்ஸின் பிளேட் திரைப்படங்களில் பிளேட் மற்றும் பஃபி தி வாம்பயர் ஸ்லேயர் என்னும் திரைப்படம் ஆகியவற்றில் வாம்பயர் வேட்டைக்காரர்களைப் பற்றி மேலும் பல விதங்களில் கதை அமைந்தது. அதே பெயருடன் நீண்ட கால பிரபலமாக ஓடிய ஒரு தொலைக்காட்சித் தொடரைத் தழுவி தொலைக்காட்சியில் 1992ஆம் வருடம் வெளியான பஃபி மற்றும் அதிலிருந்து உருவான ஏஞ்சல் ஆகியவை தொலைக்காட்சியில் வாம்பயரை நிலைநிறுத்தின. மேலும் பல, 1983ஆம் ஆண்டின் தி ஹங்கர் , மற்றும் ஒரு வகையில் அதன் தொடர்ச்சியான 1994ஆம் Interview with the Vampire: The Vampire Chronicles வருடம் வெளியான க்வீன் ஆஃப் தி டாம்ட் போன்றவை வாம்பயரை கதாநாயகனாகக் கொண்டிருந்தன. ப்ராம் ஸ்டோக்கரின் டிராகுலா 1982ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு குறிப்பிடத்தக்க திரைப்படம். அப்போதைய வாம்பயர் படங்களில் மிகுந்த அளவு வசூலை அள்ளிக் குவித்ததாக இது திகழ்ந்தது.[148] வாம்பயர் கதைகளில் சுவாரசியம் அதிகரித்ததன் விளைவாக, அண்டர்வேர்ல்ட் மற்றும் வான் ஹெல்சிங் போன்ற திரைப்படங்களிலும் மேலும் 2004ஆம் வருடம் தயாரிக்கப்பட்ட ரஷ்யத் திரைப்படமான நைட் வாச்மேன் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாக "சேலம்'ஸ் லாட் " ஆகியவற்றிலும் வாம்பயர் சித்தரிக்கப்பட்டது. ப்ளட் டைஸ் என்னும் தொடர் லைஃப்டைம் டெலிவிஷனில் 2007ஆம் வருடம் வெளியானது. இதில் இங்கிலாந்தின் எட்டாவது ஹென்ரியின் சட்டபூர்வமாக அல்லாத மகனாக அல்லாத ஹென்ரி ஃபிட்ஜ்ராய் என்னும் ஒரு கதாபாத்திரம் தற்காலத்திய டொரோண்டாவில் வாம்பயராக மாறுவதைச் சித்தரித்தது. இதில் டொரொண்டோவின் ஒரு முன்னாள் பெண் துப்பறிவாளரும் நடித்தார். ஹெச்பிஓவில் 2008ஆம் ஆண்டு வெளி வந்த தொடரான ட்ரூ ப்ளட் வாம்பயர் கதைக் கருத்துக்கு ஒரு தெற்கத்திய வாசம் கொடுத்தது.[145] வாம்பயர் கதைகள் தொடர்ந்து பிரபலமாகவே இருந்து வருவதற்கு இரண்டு காரணிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன: பாலியல் சித்தரிக்கப்படும் விதம் மற்றும் மரணம் குறித்து மனிதருக்குள்ள மாறாத அச்சம்.[149]

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads