தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
வேலூர் மக்களவைத் தொகுதி (Vellore Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 8வது தொகுதி ஆகும்.
வேலூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
வேலூர் மக்களவைத் தொகுதி (மறுசீரமைப்புக்கு பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மொத்த வாக்காளர்கள் | 14,07,817[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | இந்தியப் பொதுத் தேர்தல் - 2024 |
இந்த தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார்.[2][3][4]
தொகுதி மறுசீரமைப்புக்கு முன் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), அணைக்கட்டு, வேலூர், ஆரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், சித்தூர் ஆகிய மக்களவைத் தொகுதிகள் வேலூர் மக்களவைத் தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன.
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 | ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் | காமன்வீல் கட்சி & காங்கிரசு | ||
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி | இருவரும் காங்கிரசு | ||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | அப்துல் வாகித் | காங்கிரசு | ||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | குசேலர் | திமுக | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | ஆர். பி. உலகநம்பி | திமுக | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | வி. தண்டாயுதபாணி | நிறுவன காங்கிரசு | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | ஏ.கே.ஏ. அப்துல் சமது | சுயேட்சை | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | ஏ. சி. சண்முகம் | அதிமுக | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | ஏ.கே.ஏ. அப்துல் சமது | காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | அக்பர் பாஷா | காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | பி. சண்முகம் (வேலூர்) | திமுக | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | என். டி. சண்முகம் | பாமக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | என். டி. சண்முகம் | பாமக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | கே. எம். காதர் மொகிதீன் | திமுக | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | எம். அப்துல் ரஹ்மான் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | பி. செங்குட்டுவன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், ஆகஸ்ட்,2019 | கதிர் ஆனந்த் | திமுக | மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி | |
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | கதிர் ஆனந்த் | திமுக | இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி | |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கதிர் ஆனந்த் | 5,68,692 | 50.35% | 3.14 | |
பா.ஜ.க | ஏ. சி. சண்முகம் | 352,990 | 31.25% | ||
அஇஅதிமுக | எஸ். பசுபதி | 117,682 | 10.42% | 36.00 | |
நாதக | மகேஷ் ஆனந்த் | 53,284 | 4.72% | 2.09 | |
நோட்டா | பெயர் இல்லை | 8,736 | 0.77% | 0.15 | |
வெற்றி விளிம்பு | 215,702 | 19.08% | 18.29 | ||
பதிவான வாக்குகள் | 1,129,458 | 73.53% | 2.07 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் |
இத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் கதிர் ஆனந்த், புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த ஏ. சி. சண்முகத்தை 8,141 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|
கதிர் ஆனந்த் | திமுக | 4,85,340 | 47.30% | |
ஏ. சி. சண்முகம் | அதிமுக | 4,77,199 | 46.51% | |
தீபலக்ஷ்மி | நாம் தமிழர் கட்சி | 26,995 | 2.63% | |
நோட்டா | - | - | 9,417 | 0.92% |
ஏ. சி. சண்முகம் - பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். இவர் இதே தொகுதியில் 1984 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். மோடி தலைமையில் பா.ஜ.க.வின் தாமரைச் சின்னத்தில், இவரது புதிய நீதிக் கட்சி போட்டியிட்டது.
திமுக கூட்டணியின் சார்பாக முஸ்லீம் லீக் போட்டியிட்டது.[7]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. செங்குட்டுவன் | அதிமுக | 3,83,719 |
ஏ. சி. சண்முகம் | புதிய நீதிக் கட்சி | 3,24,326 |
அப்துல் ரஹ்மான் | முஸ்லிம் லீக் | 2,05,896 |
விஜய இளஞ்செழியன் | காங்கிரசு | 43,960 |
24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் அப்துல் ரகுமான் அதிமுகவின் வாசுவை 1,07,393 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
எம். அப்துல் ரஹ்மான் | திமுக | 3,60,474 |
வாசு | அதிமுக | 2,53,081 |
சௌகத் செரிப் | தேமுதிக | 62,696 |
இராஜேந்திரன் | பாசக | 11,184 |
கே. எம். காதர் மொகிதீன் (திமுக) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வாக்குகள் வேறுபாடு - 1,78,610
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.