From Wikipedia, the free encyclopedia
2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது கோடைகால ஒலிம்பிக் ஆகும். இது கிரேக்க தலைநகரான ஏதென்சில் ஆகத்து 13 முதல் 29 வரை நடைபெற்றது. இது அதிகாரபூர்வமாக XXVIII ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இதில் 201 நாடுகள் பங்கு பெற்றன. 10,625 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்[1], இதில் ஆண்கள் 6,296 பெண்கள் 4,329 ஆவர். இதில் 28 போட்டிகள் நடைபெற்றது அதில் 301 நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தமும் வாள் வீச்சும் இதில் இடம் பெற்றன. இப்போட்டிகளுக்கு 10 மில்லியன் யூரோ செலவானதாக சூன் 2004 ல் பிபிசி தெரிவித்தது. நவம்பர் 2004 கிரேக்க தூதரகம் இப்போட்டிக்கு 8.954 மில்லியன் யூரோ செலவானதாக கூறியது. இதில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட 1.08 மில்லியன் யூரோ அடக்கம்.
2004 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள் | ||||||
---|---|---|---|---|---|---|
நகரம் | நாடு | சுற்று 1 | Run-off | சுற்று 2 | சுற்று 3 | சுற்று 4 |
ஏதென்சு | கிரேக்க நாடு | 32 | — | 38 | 52 | 66 |
ரோம் | இத்தாலி | 23 | — | 28 | 35 | 41 |
கேப் டவுன் | தென்னாப்பிரிக்கா | 16 | 62 | 22 | 20 | — |
இசுட்டாக்கோம் | சுவீடன் | 20 | — | 19 | — | — |
புவெனசு ஐரிசு | அர்கெந்தீனா | 16 | 44 | — | — | — |
பங்குகொண்டவைகளில் 74 நாடுகள் பதக்கம் பெற்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.