ஆசீஷ் நேரா
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசீஷ் நேரா (Ashish Nehra (ⓘ இந்தி: आशीष नेहरा;, பிறப்பு: ஏப்ரல் 29, 1979, தில்லி) முன்னாள் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இடதுகை விரைவுப் பந்து வீச்சாளராகிய நேரா 1999ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் முதலில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார்.[1] தமது முதல் தரத் துடுப்பாட்டத்தைச் சொந்த ஊரான தில்லிக்காக 1997/98 பருவம் முதல் ஆடி வருகிறார்.[1] முதன்முறையாகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் 1999ஆம் ஆண்டில் விளையாடத் தொடங்கினார்.[1] முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சிம்பாப்வேயுடன் 2001ஆம் ஆண்டு அராரேயில் துவங்கினார்.[1] தமது முதல் தேர்வுப் போட்டியில் சில பந்துகளிலேயே மாவன் அத்தப்பத்தை வீழ்த்தினார்.[2] அதேபோல ஒருநாள் துடுப்பாட்டத்தின் முதல் ஆட்டத்திலும் இரண்டாவது பந்திலேயே அலிஸ்டர் கேம்பெல்லை வீழ்த்தினார்.[3] தென்னாபிரிக்காவில் நடந்த 2003 உலகக்கிண்ணத்தில் விளையாடி இங்கிலாந்திற்கு எதிராக 23 ஓட்டங்களுக்கு இலக்குகளை வீழ்த்தினார்.[4] பிற உலகக்கிண்ண ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்து வீசினார்.
Remove ads
சர்வதேச போட்டிகள்
1999 ஆம் ஆண்டில் கொழும்பில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியின் துவக்கத்திலேயே அந்த அணித் தலைவரன மாவன் அத்தப்பத்து இலக்கினைக் கைப்பற்றினார். ஆனால் அவரால் அதன் பின் அந்தப் போட்டியில் மற்ற இலக்குகளை வீழ்த்த இயலவில்லை. 2001 ஆம் ஆண்டில் ஹராரேவில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் அலிஸ்டர் கம்பெல்லின் இலக்கினைக் கைப்பற்றினார். ஆனால் அவரால் அதன் பின் அந்தப் போட்டியில் மற்ற இலக்குகளை வீழ்த்த இயலவில்லை. தென்னாப்பிரிக்கவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடினார். இந்தத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 23 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இதுதான் அவரின் மிகச் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் பந்துவீச்சு ஆகும். இந்தத் தொடரின் மற்ற போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசினார்.
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளை விட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசினார். ஒருநாள்போட்டிகளில் 144 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.ஆனால் இவரின் பந்துவீச்சு சராசரியானது 30.54 ஆக உள்ளது. இது இந்திய அணியின் சக விரைவு வீச்சாளர்களான ஜாகிர் கான், இர்பான் பதான்மற்றும் அஜித் அகர்கர் ஆகியோரோடு ஒப்பிடுகையில் இவரின் சராசரி அதிகமாக உள்ளது. இவர்கள் அனைவரும் 30 க்கும் குறைவாகவே சராசரி வைத்துள்ளனர். இவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் புதுமுக விரைவு வீச்சளர்களான முனாஃவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா மற்றும் ஆர் பி சிங் ஆகியோரின் வருகையும் அணியில் இவருக்கான இடத்தை சிக்கலாக்கின. பின் காயங்கள் குணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஜாகிர் கானுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் வாய்ய்ப்பு கிடைத்தது.
Remove ads
இந்தியன் பிரீமியர் லீக்
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல்பருவத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.[5]மே 7, 2008 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 இலக்குகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். பின் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். 2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 3.91 கோடி ரூபாய் மதிப்பில் இவரை புனே வாரியர்சு இந்தியா அணி ஏலத்தில் எடுத்தது.
Remove ads
பயிற்சியாளர்
2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்அணியின் தலைமைப் பயிற்சியாளரக இவர் நியமனம் செய்யப்பட்டார்.[6]
ஒருநாள் போட்டியில் 5 இலக்குகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads