இரிட்டி
கேரளாவிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரிட்டி (Iritty) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியும், வட்டமுமாகும். சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள விவசாய சமூகங்களுக்கு இந்த நகரம் முக்கிய சந்தைக்கான இடமாகவும் திகழ்கிறது. கடவுளின் சொந்த நாடு என அறியப்படும் கேரளாவில் இரிட்டி கூர்க் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 19.5 கி.மீ தூரத்த்திலிருக்கும் இது கேரளாவில் வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றாகும். கூர்க் மற்றும் கண்ணூர் இடையே உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.[3]
Remove ads
அமைவிடம்

வயனாட்டு கணவாயிலிருந்து தோன்றிய பாவாலி ஆற்றங்கரையில் இரிட்டி அமைந்துள்ளது. [4] மட்டனூர் மற்றும் விராசுபேட்டைக்கு இடையில் தலச்சேரி - கூர்க் - மைசூர் நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலை 30இல் (கேரளா) இது அமைந்துள்ளது. ஆரளம் வனவிலங்கு சரணாலயம் இரிட்டியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது
அருகிலுள்ள நகரங்களான கண்ணூர், தலச்சேரி, மாகே, தளிப்பறம்பா, விராசுப்பேட்டை ( கர்நாடக மாநிலம் ) ஆகியவற்றிலிருந்து சமமான தூரத்தில் இரிட்டி அமைந்துள்ளது. தலசேரி, மட்டனூர் விமான நிலையம் மற்றும் குடகுவை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை இதன் வழியே செல்கிறது. இதை ஆரம்பத்தில் டி.சி சாலை என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர். இந்த நெடுஞ்சாலை மடிக்கேரி, மைசூர் மற்றும் பெங்களூருக்கு செல்லும் சர்வதேச மாநில பேருந்து சேவைகளால் பயன்படுத்தப்படுகிறது.
கீழூர் இரிட்டி நகரத்தின் தொடக்கப் புள்ளியாகும். இந்த இடம் கண்ணூர் மற்றும் தலசேரி இரண்டிலிருந்தும் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. [5] இரிட்டி முதன்மையாக ஒரு வர்த்தக நகரமாகும். இங்கு பல மாநில அரசு அலுவலகங்களின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகங்களில் பெரும்பாலானவை அருகிலுள்ள நகரங்களான மட்டனூர் மற்றும் பேராவூர் மீது அதிகார வரம்பைக் கொண்டுள்ளன. [6]
எஃகு பாலம்

குடகு மற்றும் தலச்சேரி நகரங்களை இணைக்க பிரித்தானிய அதிகாரிகளால் 1933ஆம் ஆண்டில் எஃகினால் ஆன ஒரு பாலம் கட்டப்பட்டப்பட்டுள்ளது. [7] இதை ஜார்ஜ் ஆண்டர்சன் என்ற கட்டிடப் பொறியாளர் வடிவமைத்தார். [8] [9] தற்போது பாலம் அதன் உறுதித் தன்மையை இழந்து காணப்படுகிறது .
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
