இலாவண்யா
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
லாவண்யா (Lavanya) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் தோன்றியுள்ளார். 1990 களில் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் முன் 1990 களில் தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.[2]
தொழில்
லாவண்யா சென்னையில் உள்ள எம். ஏ. கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர் தமிழ்நாட்டின் ஒசூரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். இவர் தோன்றிய ஆரம்பகால குறிப்பிடத்தக்க வேடங்களில் கே. எஸ். ரவிக்குமாரின் படையப்பா (1999) படத்தில் நாசரின் கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்தார். மேலும் ஜோடி (1999), சேது (1999), தெனாலி (2000) ஆகிய படங்களிலும் நடித்தார். இவர் முன்னணி நடிகையாக குறிப்பாக மலையாள படமான ஆரம் இந்திரியம் (2001) சில படங்களில் நடித்தார். பின்னர் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[3][4]
2000 களில், லாவண்யா தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரிந்தார். வரலாற்று நாடகத் தொடரான ரோமாபுரி பாண்டியனில் ஒரு இளவரசியாக நடித்தார்.[5] விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற தீமைக்கு எதிரான தர்மத்தின் வெற்றியின் கதையான, நான் தான் பாலா (2014) படத்தில் இவர் துணை பாத்திரத்தில் நடித்தார்.[6]
Remove ads
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
1997 | சூரிய வம்சம் | ஸ்வப்னா | |
1998 | கொண்டாட்டம் | புருசோத்தமனின் மகள் | |
1998 | உயிரோடு உயிராக | அஞ்சலியின் தோழி | |
1999 | படையப்பா | சூரியபிரகாசின் மனைவி | |
1999 | சுயம்வரம் | பல்லவனின் சகோதரி | |
1999 | சங்கமம் | செல்வத்தின் சகோதரி | |
1999 | ஜோடி | உமா | |
1999 | கண்ணுபடப்போகுதய்யா | மகமகள் | |
1999 | சேது | அபிதாவின் சகோதரி | |
2000 | தெனாலி | ராஜ் தோலைக்காட்சி செய்தியாளர் | |
2000 | கண்ணால் பேசவா | சந்தியா | |
2001 | அரம் இந்திரியம் | ||
2001 | 12பி | Deepa | |
2002 | காமராசு | ||
2002 | வில்லன் | ||
2002 | சுந்தரா டிராவல்ஸ் | தொலைக்காட்சி செய்தியாளர் | |
2002 | அற்புதம் | வசந்தி | |
2002 | சமஸ்தானம் | சுதா | |
2002 | ஜகதி ஜெகதீஷ் இன் டவுன் | ரசிகா | மலையாளப் படம் |
2002 | ரன் | ||
2003 | எதிரி | பிரியாவின் தோழி | |
2003 | மிலிட்டரி | நந்தினி | |
2003 | சிந்தாமல் சிதறாமல் | ||
2003 | திருமலை | உமா | |
2003 | அலை | மீராவின் தோழி | |
2003 | ஜூட் | ஈஸ்வரனின் மைத்துனி | |
2003 | அன்பே உன்வசம் | ||
2003 | ஆஞ்சநேயா | ||
2004 | கஜேந்திரா | ||
2006 | ஐயப்ப சாமி | ||
2006 | தலைமகன் | அபிராமி | |
2007 | மணிகண்டா | மணிகண்டாவின் சகோதரி | |
2009 | சிந்தனை செய் | மது | |
2010 | பெண் சிங்கம் | சிவகாமி | |
2010 | நானே என்னுள் இல்லை | வாணி | |
2010 | ஆனந்தபுரத்து வீடு | ராதிகா | |
2011 | உச்சிதனை முகர்ந்தால் | திருமதி சார்லஸ் ஆண்டனி | |
2013 | மச்சினிச்சி | ||
2013 | திருமதி தமிழ் | ||
2014 | நான் தான் பாலா | பூச்சியின் மனைவி |
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads