உதய்பூர் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

உதய்பூர் இராச்சியம்
Remove ads

உதய்பூர் இராச்சியம் அலலது மேவார் இராச்சியம் (Udaipur State or Mewar Kingdom), தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மேவார் பிரதேசத்தை கி பி 730 முதல் சித்தோர்கார் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. பின்னர் உதய்பூர் நகரத்தை புதிய தலைநகராகக் கொண்டு இயங்கியது. உதய்பூர் இராச்சிய மன்னர்கள் தங்களின் முதல் தலைநகரமான நக்டாவில் சகஸ்ரபாகு கோயில்கள் கட்டினர்.

விரைவான உண்மைகள்

உதய்பூர் இராச்சியம் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானிய இந்திய அரசின் கீழ் இயங்கிய சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 6 ஏப்ரல் 1949-இல் மேவார் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. [1]

மேவார் இராச்சியத்தை இராசபுத்திர குல கலோத் மற்றும் சிசோதிய வம்சத்தினர் கிபி 730 முதல் 1949 முடிய 1,400 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்.

Remove ads

வரலாறு

மகாராணாக்கள்

மராத்தியப் பேரரசிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் உதய்பூர் இராச்சியப் படைகள், பிரித்தானியக் கம்பெனி படைகளுக்கு ஆதரவாக போரிட்டனர். பின்னர் உதய்பூர் இராச்சியம் 31 சனவரி 1818 முதல் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஆங்கிலேயருக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக செயல்பட்டது. பிரித்தானிய அதிகார வர்க்கம், மேவார் இராச்சிய மன்னர்களுக்கு, 19 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்தது.[4]உதய்பூர் இராச்சியத்தின் இறுதி மன்னர் பூபால சிங், உதய்பூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் 7 ஏப்ரல் 1949 அன்று கையொப்பமிட்டார். பின்னர் உதய்பூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது. [5]

மேவாரின் கலோத் வம்சம்

கோசலத்திலிருந்து கி பி இரண்டாம் நூற்றாண்டில் சௌராட்டிர நாட்டில் குடிபெயர்ந்த கனக்சென் என்ற சத்திரியரின் வழித்தோன்றல்களான கலோத்திய வம்சத்தினர் தங்களை வல்லபியின் ஆட்சியாளர்கள் என அழைத்துக் கொண்டனர். பின்னர் இராஜஸ்தானின் இதர் பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர்.

கி பி 7-ஆம் நூற்றாண்டில் கலோத்திய வம்ச மன்னர்கள், கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, இராசபுத்திர குல சௌகான்களுடன் இணைந்து இசுலாமிய படையெடுப்புகளை எதிர்த்துப் போரிட்டனர்.

கி பி 12-ஆம் நூற்றாண்டில் இதர் நகரை விட்டு அகன்ற கலோத்திய வம்ச மன்னர் முதலாம் கரன்சிங்கின் மூத்த மகன் துங்கர்பூரிலும், இளையமகன் சிசோதியாவிலும் தங்கள் ஆட்சியை நிறுவினர். [6]

இதரின் கலோத்திய ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், ஆட்சி துவக்கம் ...
  • இவ்வம்சத்தினர் நக்டா எனுமிடத்தில் புதிய தலைநகரை நிறுவினர்.

நக்டாவின் கலோத்திய ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், ஆட்சி துவக்கம் ...
  • "மோரி வம்ச மால்வாவின் இறுதி மன்னர், மூன் சிங் மோரி இரண்டாம் மகேந்திரனை கொன்றார். மோரியின் மைத்துனன் மேவாரைக் கைப்பற்றினார்.
    • இரண்டாம் மகேந்திரனின் மகன் "பப்பா ராவல் என்ற கல்போஜன் தனது கூட்டாளிகளுடன் சித்தோர்காரில் புதிய நகரை நிறுவி ஆண்டான். [6]

சித்தோர்காரின் கலோத் ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், ஆட்சி துவக்கம் ...

அஹாரின் கலோத்திய ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், ஆட்சி துவக்கம் ...
  • இசுலாமிய படையெடுப்புகளால் சேம் சிங் வலுக்கட்டாயமாக தலைநகரை துங்கர்பூருக்கு மாற்றினார்.[6]

துங்கர்பூரின் கலோத்திய ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், ஆட்சி துவக்கம் ...

நக்டாவின் கலோத்திய ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் Name, ஆட்சி துவக்கம் ...

சித்தூரின் கலோத்திய ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், ஆட்சி துவக்கம் ...
  • "ஒழுங்கான அரசனில்லாக் காலம் - அலாவுதீன் கில்ஜியின் கீழ் சஞ்சோர் ஆட்சியாளர்கள் சித்தூரை ஆண்டனர். (1303–1326)"
    • "கலோத்திய வம்சத்தின் ரகூப் என்பவர் நிறுவிய சிசோதியா வம்சத்தினர் மேவாரை ஆண்டனர்."[6]

மேவாரின் சிசோதியா வம்ச ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், ஆட்சி துவக்கம் ...

உதய்பூர் சிசோதியா இராசபுத்திர ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், ஆட்சி துவக்கம் ...
Remove ads

இதனையும் காண்க

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads