உயர்கல்வித் துறை (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உயர்கல்வித் துறை (Department of Higher Education (India)) என்பது கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துறையாகும். இது இந்தியாவில் உயர்கல்வியை மேற்பார்வை செய்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம், 1956இன் பிரிவு 3 இன் கீழ், இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனையின்படி கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதியினை வழங்க இந்தத் துறைக்கு அதிகாரம் உள்ளது.[1][2][3]
Remove ads
அமைப்பு
இந்தத் துறை எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த துறையின் பெரும்பாலான பணிகள் இந்த துறையின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் கையாளப்படுகின்றன.[4]
- பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி; சிறுபான்மையினர் கல்வி
- பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
- இந்தியச் சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம்
- இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகம்
- இந்தியத் தத்துவ ஆராய்ச்சி குழுமம்
- 38 மத்தியப் பல்கலைக்கழகங்கள் (இந்தியக் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம் 15.01.2009 இல் நிறுவப்பட்ட 15 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட)
- இந்திய மேம்பாட்டுக் கல்வி நிறுவனம், சிம்லா
- அகில இந்திய உயர்கல்வி ஆய்வு
- தொழில்நுட்ப கல்வி
- அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழு[5][6]
- கட்டிடக்கலை குழுமம்[7]
- 5 இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் (அலகாபாத், குவாலியர், ஜபல்பூர் மற்றும் காஞ்சிபுரம், கர்னூல்)
- 23 இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள்
- 7 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- 20 இந்திய மேலாண்மை கழகங்கள்
- 31 தேசிய தொழினுட்பக் கழகங்கள் (NITகள்)
- 3 இந்தியக் கட்டிடக்கலை பள்ளிகள்
- 4 தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்
- பயிற்சி / நடைமுறை பயிற்சிக்கான 4 பிராந்திய வாரியங்கள்
- நிர்வாகம் மற்றும் மொழிகள்
- சமசுகிருத துறையில் மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய சமடுகிருதப் பல்கலைக்கழகம், புது தில்லி, சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம், புது தில்லி மற்றும் தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம், திருப்பதி
- கேந்திரிய இந்தி சன்ஸ்தான், ஆக்ரா
- ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், ஐதராபாத்
- உருது மொழி மேம்பாட்டுக்கான தேசிய குழுமம்
- சிந்தி மொழி மேம்பாட்டுக்கான தேசிய குழுமம்
- மூன்று துணை அலுவலகங்கள்: மத்திய இந்தி இயக்குநரகம், புது தில்லி; அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்களுக்கான குழுமம், புது தில்லி; மற்றும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்
- தொலைதூரக் கல்வி மற்றும் உதவித்தொகை
- யுனெஸ்கோ, சர்வதேச ஒத்துழைப்பு, புத்தக விளம்பரம் மற்றும் பதிப்புரிமை, கல்விக் கொள்கை, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு
- ஒருங்கிணைந்த நிதிப் பிரிவு.
- புள்ளியியல், ஆண்டுத் திட்டம் மற்றும் உள்ளடக்க மேலாண்மை நிறுவனம்
- நிர்வாக சீர்திருத்தம், வடகிழக்கு பகுதி, பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோர்
Remove ads
பிற
- தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம், புதுடில்லி.
- தேசிய புத்தக அறக்கட்டளை
- சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான குழு
- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு
- நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
- கேந்திரிய வித்யாலயா
- ஜவஹர் நவோதயா வித்தியாலயம்
- தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்
- நடுவண் திபெத்து பள்ளி நிர்வாகம்
- தேசிய ஆசிரியர் நல நிறுவனம்
- கல்வி ஆலோசனை இந்தியா நிறுவனம் (பொதுத் துறை)
மேற்கோள்கள்
மேலும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads