எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் (Twenty-sixth Dynasty of Egypt or Dynasty XXVI, 26th Dynasty or Dynasty 26) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முதல் எகிப்திய வம்சம ஆகும். இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தில் (வடக்கு எகிப்து) பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிமு 664 முதல் கிமு 525 முடிய 139 ஆண்டுகள் ஆண்டனர். கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் பண்டைய எகிப்தை கைப்பற்றினர். இத்துடன் பண்டைய எகிப்தில் எகிப்திய மக்களின் அரச வம்சம் முடிவுற்றது.
Remove ads
வரலாறு
கிமு 656-இல் பண்டைய அண்மை கிழக்கின் புது அசிரியப் பேரரசின் பகுதிகளை கைப்பற்ற எகிப்தின் 25-வது வம்சத்தவர்கள முயன்ற போது, புது அசிரிய இராச்சியத்தின் பேரரசர் அசூர்பனிபால், 25-ஆம் வம்சத்தின் படையினரை விர்ட்டியடித்ததுடன், இவ்வம்சத்தினர் ஆண்ட குஷ் இராச்சியம், மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை கைப்பற்றினார். அசிரியர்கள் குஷ் இராச்சியம் மற்றும் எகிப்திய பகுதிகளை ஆள்வதற்கு இருபத்தி ஆறாம் வம்சத்தவர்களை தங்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக நியமித்தனர். 26-வது வம்சமே எகிப்தியர்களின் இறுதி வம்சம் ஆகும். பின்னர் கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் பண்டைய எகிப்தை கைப்பற்றினர். இத்துடன் பண்டைய எகிப்தில் எகிப்திய மக்களின் அரச வம்சம் முடிவுற்றது..[1]
Remove ads
கலை
- எகிப்தின் 26-வது வம்சத்தவர் வழிபட்ட பெஸ் எனும் எகிப்திய கடவுளின் உருவத்துடன் கூடிய மட்பாண்டம்
- பெண் சிற்பத்தின் அடியில் எகிப்திய அரசர் முதலாம் சாம்திக் பெயர் பொறித்துள்ளது.
26-வது வம்ச பார்வோன்கள்
எகிப்தின் 26-வது வம்ச மன்னர்கள், இருபத்தி நான்காம் வம்சத்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆவார்.[2]
26-வது வமசத்தின் காலவரிசை

பண்டைய எகிப்திய வம்சங்கள்
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads