என்.எஃப்.எல்.
From Wikipedia, the free encyclopedia
Remove ads
என்.எஃப்.எல். (NFL) என்னும் நேஷனல் ஃபுட்பால் லீக் (National Football League), தமிழில் தேசிய காற்பந்தாட்டச் கூட்டிணைவு ஐக்கிய அமெரிக்காவின் நான்கு மிகப்பெரிய விளையாட்டுச் சங்கங்களில் ஒன்றாகும். உலகின் அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை ஒருங்கிணைக்கிற சங்கங்களில் மிகப் பெரியதும், பரவலமானது செல்வாக்கு பெற்றதும் இச்சங்கம்.[1] 1920இல் பதினொன்று அணிகள் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சங்கத்தில் இன்று 32 அணிகள் உள்ளன. இந்த 32 அணிகள் தேசிய காற்பந்தாட்டக் கூட்டிணைவு (National Football Conference, NFC) மற்றும் அமெரிக்கக் காற்பந்தாட்டக் கூட்டிணைவாக (American Football Conference, AFC) பிரிந்துகொண்டன. இரண்டு கூட்டங்களும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பகுதிகளாக பிரிந்து கொண்டன.

17 வாரங்களில் பொது பருவம் (regular season) விளையாடப்படும். இப்பருவத்தில் ஒரு "பை வீக்" (bye week) என்ற வாரத்தை விட்டு ஒவ்வொரு அணியும் வாரத்துக்கு ஒரு போட்டி விளையாடி மொத்தத்தில் 16 போட்டிகளை விளையாடும். பொதுவாக செப்டம்பர் மாதத்தில் முதலாம் வாரம் பொது பருவம் தொடங்கி டிசம்பர் இறுதியில் முடியும். இதற்கு பிறகு ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஆறு அணிகள் கொண்ட பின்பருவம் (postseason; playoffs) நடைபெறும். கடைசியில் ஒவ்வொரு கூட்டத்தில் நின்றிருக்கும் அணிகளும் சூப்பர் போல் (Super Bowl) என்றழைக்கப்பட்ட இறுதிப் போட்டியில் விளையாடி இப்போட்டி வென்ற அணி என்.எஃப்.எல். சாம்பியனாக வெற்றி பெறும்.
உலகில் பல உள்நாட்டு விளையாட்டுச் சங்கங்களில் என்.எஃப்.எல். போட்டிகளுக்கு வருகிற மக்கள் மிக அதிகமானது. பொது பருவத்தில் ஒரு போட்டிக்கு சராசரியாக 67,591 மக்கள் நுழைவுச்சீட்டை வாங்குகின்றனர்.[2]
Remove ads
போட்டி
உண்மையில் கால்கொண்டு மிகக் குறைந்த அளவே விளையாடப்படும் முறையைக் கொண்டது. இதன் உத்திகள் மற்றும் விளையாட்டு முறையில் ரக்பியுடன் தோராயமாக பொருந்தியும், வீரர்களின் ஆடைகளில் உள்ள பாதுகாப்பு கவசத்திலும், தலைக் கவசத்திலும் ரக்பியில் இருந்து மாறுபட்டும் காணப்படுகிறது. அமெரிக்காவின் வேகமான, வலிமையான, இளம் ஆட்டவீரர்கள் பங்குபெறும் விளையாட்டு என்று சந்தேகம் இல்லாமல் சொல்லலாம். நான்கு பதினைந்து நிமிட கால்பகுதிகளைக் கொண்டது போட்டி, நூறு யார்ட் கொண்டது ஆடுகளம். ஒவ்வொரு அணியிலும் தாக்குதல், தற்காப்பு மற்றும் சிறப்பு அணியென பிரிக்கப்பட்ட 53 வீரர்கள் இருப்பார்கள். சுருக்கமாக ஆடுகளத்தில் தன் பக்கமிருந்து துவங்கும் எதிர் அணியை பந்துடன் 100 யார்ட்களை கடந்து மறுபக்கம் செல்ல விடாமல் தடுக்கும் மோதலே(நேரடி அர்த்தத்தில் தான், வீரர்கள் மோதிக்கொள்வது ஆட்ட விதிகளுக்கு உட்பட்டு தலையுடனனோ, உடலின் பிறபகுதிகளிலோ நிகழும்) இவ்விளையாட்டு.
Remove ads
நிகழ்முறை மற்றும் நிலை பெயர்கள்
போட்டி A அணிக்கும் B அணிக்கும் இடையில், டாஸில் வென்ற A அணி தற்காப்பை தெரிவு செய்கிறது என கொள்வோம். போட்டியின் துவக்கமாக Aவின் சிறப்பு பிரிவு வீரர்கள்(களத்தில் இரு அணிகளும் தலா பதினோரு பேரை கொண்டிருக்கலாம்) ஆடுகளத்தின் மத்தியில் இருந்து பந்தை B அணிக்கு உதைப்பர். B அணியின் சிறப்பு பிரிவு வீரர்கள் அதை பிடித்து A அணியின் தடுப்பை மீறி ஆடுகளத்தின் எதிர் முனைக்கு கொண்டு சென்றால் டச் டௌன் எனப்படும் ஆறு புள்ளிகளை பெறுவர். அதன் பின் எதிர் முனையில் உள்ள கொடிக் கம்புகளுக்கு இடையில் பந்தை உதைக்கும் வாய்ப்பு தரப்பட்டு அதும் சரியாக நிகழ்ந்தால் பாயிண்ட் அபிடேர் டச்டௌன் (PAT) என B அணிக்கு மொத்தம் ஏழு புள்ளிகள் கிடைக்கும்.
B அணியின் இந்த ஓட்டத்தை A அணி தடுக்கும் பட்சத்தில் ஆடுகளத்தில் தடுக்கப்பட்ட இடத்தில் இருந்து B அணியின் தாக்குதல் விளையாட்டும்; A அணியின் தற்காப்பும் துவங்கும். Bஅணியின் தாக்குதல் பிரிவின் தலைவர் என கொள்ளப்படுபவர் குவாட்டர் பாக் (QB) அவருடன் பந்தை காவிச் செல்ல ரன்னிங் பாக் (RB) மற்றும் புல் பாக் (FB) என வீரர்கள். அடுத்து குவாட்டர் பாக் எரிவதை பிடித்துச் செல்ல வைட் ரிசீவர்கள்(WR) இருவர்(அல்லது மூவர்) இவர்களுடன் ஒரு டைட் எண்டு (TE) என்ற வீரரும் இருப்பார், அவர் குவாட்டர் பாக் எரியும் பந்தை பிடித்து ஓடுவதும் சில சமயம் தற்காப்பு அணியின் வீரர்களை மறிப்பது என இரண்டையும் செய்பவராக இருப்பார்.
உள்ள ஐந்து அல்லது ஆறு வீரர்களில் பந்தை ஆடுகளத்தில் இருந்து தன் கால்களுக்கு இடையில் எடுத்து குவாட்டர் பாக்கிடம் கொடுக்கும் சென்டர்(C) மற்றவர்கள் தாக்குதல் லைன் மென் (OL) என்பவர்கள் A அணியின் தற்காப்பு வீரர்களிடம் இருந்து Bஅணியின் குவாட்டர் பாக்கை காப்பவர்கள். A அணியின் தற்காப்பு வீரர்கள் பிரிவில் ஆறு தற்காப்பு லைன் மென்கள் (DL), அடுத்து வைட் ரிசீவர்களின் ஓட்டத்தை தடுக்க கானர் பாக் (CB) மூவர் கடைசியாக தம் முனையை காக்க இரு சேப்டி (S) என இருப்பர்.
B அணிக்கு ஒரு தொடரில் நான்கு முயற்சிகளில் பத்து யார்டுகள் கடக்க வேண்டும் அவ்வாறு கடந்தால் மேலும் நான்கு வாய்ப்புகள் தரப்படும் இல்லையெனில் அவர்கள் பந்தை A அணிக்கு உதைத்துத் தள்ள வேண்டும். A அணியின் தற்காப்பு இந்த பத்து யார்டுகளை கடக்க விடாமல் தடுப்பதே. மொத்தத்தில் இந்த இரு அணிகளின் எலி-பூனை விளையாட்டே அமெரிக்கக் கால்பந்து.
Remove ads
அணிகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads