கோசாம்பி

From Wikipedia, the free encyclopedia

கோசாம்பி
Remove ads

கௌசாம்பி அல்லது கோசாம்பி (Kausambi or Kosambi ) பரத கண்டத்தின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரம் வேத கால கோசல நாட்டின் தலைநகராக இருந்தது. கௌசாம்பி நகரம், புத்தர் தர்மத்தை உபதேசித்த இடங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் கோசாம்பி, நாடு ...
Thumb
கௌசாம்பி நகரத்தில் இருந்த அசோகரின் அலகாபாத் தூண்

அக்பருக்கு முன்னர் பிரயாக்ராஜ் என அழைக்கப்பட்ட இன்றைய அலகாபாத் நகரத்திலிருந்து தென்மேற்கில் 56 கிலோ மீட்டர் தொலைவில் யமுனை ஆற்றாங்கரையில் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ளது. இந்நகரத்தில் அசோகர் நிறுவிய மணற்கல்லால் ஆன அசோகரின் ஸ்தூபி ஒன்றை ஜஹாங்கீர் பெயர்த்தெடுத்து அலகாபாத் கோட்டையில் நிறுவினான்.

Remove ads

வரலாறு

வேதகாலம் முதல் மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசு காலத்தில் கௌசாம்பி நகரம் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியது.[1][2] பிற்கால வேத காலத்தின் போது இந்நகரம் சிறப்பு குறைந்த சிறு நகராக விளங்கியது.

வத்ச நாட்டின் தலைநகராக இருந்தது கௌசாம்பி நகரம். புஷ்யமித்திர சுங்கன் பேரரசில், சுங்கப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் நாடாக இருந்தது கௌசாம்பியின் வத்ச நாடு. சுங்கப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பதினாறு மகாஜனபதங்களில் ஒன்றான கௌசாம்பியை தலைநகராகக் கொண்ட வத்சநாடு விளங்கியது.

கௌதம புத்தர் காலத்தின் போது இந்தியாவின் நான்கு திசைகள் கூடுமிடத்தில் அமைந்த கௌசாம்பி நகரம், இந்தியாவின் பெரும் வணிக மையமாக விளங்கியது.

கௌசாம்பி நகரத்தில் 1949 மற்றும் 1951-1952 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.[3] கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு சோதனையில், கி மு 390 முதல் கி பி 600 முடிய உள்ள இடைப்பட்ட காலத்தில் கௌசாம்பி நகரம் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. [4]

கௌசாம்பி நகரம் கோட்டைச் சுவர்களால் சூழப்பட்ட ஒழுங்கற்ற நீள்வட்ட அமைப்பு கொண்டதாக இருந்திருக்கிறது. இந்நகரம் 6.5 கி. மீ பரப்பளவு கொண்டிருந்தது.

மௌரியப் பேரரசர் அசோகரின் தூண்களில் ஒன்றான அலகாபாத் தூண் கௌசாம்பில் இருந்தது. இத்தூணை மொகலாய பேரரசன் ஜஹாங்கீரால் அலகாபாத் கோட்டையில் நிறுவப்பட்டது. [5] [6]

Remove ads

படக்காட்சிகள்

கோசாம்பி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் படங்கள்:

Remove ads

தற்கால கௌசாம்பி

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத் கோட்டத்தில் கௌசாம்பி மாவட்டம் என்ற பெயரில் உள்ளது.

இதனையும் காண்க

Thumb
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
'''மஸ்கி'''
'''மஸ்கி'''
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri
Yerragudi
Yerragudi
'''சாசாராம்'''
'''சாசாராம்'''
Remove ads

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads