கம்பார் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்பார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kampar; ஆங்கிலம்: Kampar Federal Constituency; சீனம்: 金宝国会议席) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டத்தில் (Kampar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P070) ஆகும்.[7]
கம்பார் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து கம்பார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
Remove ads
கம்பார்
கம்பார் நகரம், பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி. மலேசியாவில் மிகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும்.[8]
கம்பார் நகரம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவு பழைய நகரம் என்றும், இன்னொரு பிரிவு புதிய நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பழைய நகரத்தில் உலகப் போர்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் கலாசாரப் பாரம்பரியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பண்டார் பாரு கம்பார்
கம்பார் நகரம் 1887-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதன் பழைய பெயர் மம்பாங் டி அவான்.
பண்டார் பாரு கம்பார் எனும் புதிய நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு கல்விக் கழகங்கள் உள்ளன. 2009-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, கம்பார் நகராண்மைக் கழகம், பேராக் மாநிலத்தின் 10-ஆவது மாவட்டமாக அதிகாரப் பூர்வமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.[9] 1894 மார்ச் 13-இல் மம்பாங் டி அவான் எனும் பெயர் கம்பார் என மாற்றம் கண்டது.
Remove ads
கம்பார் மக்களவைத் தொகுதி
Remove ads
கம்பார் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
கம்பார் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads