காரா கானிய கானரசு

நடு ஆசியாவின் துருக்கிக் அரசு (840-1212) From Wikipedia, the free encyclopedia

Remove ads

காரா கானிய கானரசு (Kara khanid khanate) என்பது ஒரு துருக்கிய மக்கள் குழுவினரின் கானரசு ஆகும். இது நடு ஆசியாவை 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆண்டது.[8]

விரைவான உண்மைகள் காரா கானிய கானரசு, நிலை ...

இக்கானரசு நடு ஆசியாவில் திரான்சாக்சியானாவை வென்றது. அப்பகுதியை 999 மற்றும் 1211க்கு இடையில் ஆண்டது.[9][10] திரான்சாக்சியானாவில் இவர்களது வருகையானது நடு ஆசியாவில் ஈரானிய ஆதிக்கத்திலிருந்து துருக்கிய ஆதிக்கத்திற்கான ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறித்தது.[11] எனினும், கானியர்கள் படிப்படியாக பாரசீக-அரபு முஸ்லிம் கலாச்சாரத்தில் இணைந்தனர். அதே நேரத்தில், தங்களது பூர்விகத் துருக்கியக் கலாச்சாரத்தின் சில அம்சங்களையும் தக்க வைத்துக் கொண்டனர்.[7]

காரா கானிய கானரசின் தலைநகரங்கள் கஷ்கர், பலசகுன், உசுகென் மற்றும் சமர்கந்து ஆகியவையாகும். 1040களில் இந்தக் கானரசானது கிழக்கு மற்றும் மேற்குக் கானரசுகளாகப் பிரிந்தது. 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செல்யூக் பேரரசுக்குப் பணிந்ததாகவும், 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காரா கிதை அரசுக்குப் பணிந்ததாகவும் இது திகழ்ந்தது. 1211இல் கிழக்குக் கானரசானது முடிவுக்கு வந்தது. 1213இல் மேற்குக் கானரசானது குவாரசமியப் பேரரசால் முடித்து வைக்கப்பட்டது.

காரா கானிய கானரசின் வரலாறானது சிதறுண்ட மற்றும் பெரும்பாலும் முரண்பாடாக எழுதப்பட்ட நூல்களில் இருந்து மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. இவர்கள் நாணயவியல் குறித்த ஆய்வுகளும் இவ்வாறே உள்ளன.[12]

Remove ads

மேலும் காண்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads