குடிவாடா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குடிவாடா (Gudivada) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்த நகரமும், நகராட்சியும் ஆகும். குடிவாடா நகரம் குடிவாடா மண்டலம் மற்றும் குடிவாடா வருவாய் கோட்டத்தின் தலைமையிடம் ஆகும்.[2][3] ஆந்திரப் பிரதேசத்தின் புதிதாக கட்டுமானத்தில் உள்ள ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயத்தில் அமைந்த நகரங்களில் குடிவாடா நகரமும் ஒன்றாகும்.[4]

விரைவான உண்மைகள் குடிவாடா விதர்பபுரி, நாடு ...

குடிவாடா நகரம் விஜயவாடாவிலிருந்து 43 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே 283 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

Remove ads

வரலாறு

Thumb
குடிவாடா தூபியில் கண்டெடுக்கப்பட்ட, கிபி முதலாம் நூற்றாண்டின் தொல்பொருட்கள், பிரித்தானிய அருங்காட்சியகம்[5]
Thumb
ஆந்திர பிரதேசத்தின் பௌத்த புனித தலங்கள்

தெலுங்கு மொழியில் குடி என்பதற்கு கோயில் என்றும், வாடா என்பதற்கு குடியிருப்பு அல்லது நகரம் என்றும் பொருள்படும். இந்நகரத்தின் குடியிருப்புகள் சாதவாகனர் காலத்தில், கிமு 3 அல்லது 2ம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து உள்ளது.[6] Archaeological excavations[7] குடிவாடா தொல்லியல் களத்தின் அகழாய்வில் பௌத்த தூபிகளும், சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் நினைவுச்சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[8]

Remove ads

புவியியல்

குடிவாடா நகரம் கடற்கரை ஆந்திராப் பகுதியில் அமைந்துள்ளது. கிருஷ்ணா மாவட்டத் தலைநகரான மச்சிலிபட்டினத்திற்கு கிழக்கே 41 கி.மீ. (25.5 மைல்) கிழக்கேயும், ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயத்திலிருந்து 45 கி.மீ. (36.7 மைல்) தொலைவிலும் உள்ளது.[9] குடிவாடா நகரம், வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து 35 கி.மீ. மேற்கே உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 30,834 வீடுகள் கொண்ட குடிவாடா நகரத்தின் மக்கள்தொகை 1,18,167 ஆகும். அதில் ஆண்கள் 59,062 ஆகவும், பெண்கள் 59,105 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1001 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 10,509 ஆக உள்ளனர். எழுத்தறிவு 81.64% ஆகவுள்ளது. குடிவாடா மக்கள்தொகையில் இந்துக்கள் 86.37%ம், இசுலாமியர் 9.23%ம், கிறித்தவர்கள் 3.63%ம், மற்றவர்கள் 0.77% ஆகவுள்ளனர்.[10]

குடிவாடா நகராட்சி நிர்வாகம்

1937ல் நிறுவப்பட்ட குடிவாடா நகராட்சி, தற்போது 12.67 ச.கி.மீ. பரப்பளவுடன், 36 உறுப்பினர்களுடன் சிறப்பு நகராட்சி தகுதி பெற்றுள்ளது.[1] [11]

போக்குவரத்து

தொடருந்துகள்

Thumb
குடிவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்

மூன்று நடைமேடைகள் கொண்ட குடிவாடா தொடருந்து நிலையத்திலிருந்து, விஜயவாடா வானூர்தி நிலையம் 24 கி.மீ. தொலைவில் உள்ளது.[12] குடிவாடாவிருந்து, விசாகப்பட்டினத்திற்கு நாள்தோறும் தொடருந்துகள் செல்கிறது.[13]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads