கே. ஆர். கங்காதரன்

திரைப்பட தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. இரா. க என்று பிரபலமாகக் குறிப்பிடப்பட்ட கே. இரா. கங்காதரன் (K. R. Gangadharan, 1936–2012) ஒரு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளராவார். இவர் 'கே. ஆர். ஜி புரொடக்சன்ஸ்', 'கே. ஆர். ஜி ஆர்ட் புரொடகசன்ஸ்', 'கே. ஆர். ஜி எண்டர்பிரைசஸ்', 'கே. ஆர். ஜி மூவிஸ் இன்டர்நேசனல்' போன்ற பதாகைகளின் கீழ் தமிழ், மலையாள மொழிகளில் 60 க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தார்.

விரைவான உண்மைகள் கே. ஆர். கங்காதரன், பிறப்பு ...
Remove ads

திரைப்பட வாழ்க்கை

இவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சபையின் நிறுவனர் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். அந்த வர்த்தக சபையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், படப்பிடிப்பு அரங்க உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.[2]

இறப்பு

கே. ஆர். ஜி 19 சூன் 2012 அன்று தன் 76 வயதில் இறந்தார். உடல் நலக்குறைவால் இவர் சென்னை, தி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் தேறிவந்தார். மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு செல்லவிருந்தபோது, சரிந்து விழுந்து, விரைவில் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் மகள் இருந்தனர்.

பகுதி திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads